Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht

external-link copy
235 : 2

وَلَا جُنَاحَ عَلَیْكُمْ فِیْمَا عَرَّضْتُمْ بِهٖ مِنْ خِطْبَةِ النِّسَآءِ اَوْ اَكْنَنْتُمْ فِیْۤ اَنْفُسِكُمْ ؕ— عَلِمَ اللّٰهُ اَنَّكُمْ سَتَذْكُرُوْنَهُنَّ وَلٰكِنْ لَّا تُوَاعِدُوْهُنَّ سِرًّا اِلَّاۤ اَنْ تَقُوْلُوْا قَوْلًا مَّعْرُوْفًا ؕ۬— وَلَا تَعْزِمُوْا عُقْدَةَ النِّكَاحِ حَتّٰی یَبْلُغَ الْكِتٰبُ اَجَلَهٗ ؕ— وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یَعْلَمُ مَا فِیْۤ اَنْفُسِكُمْ فَاحْذَرُوْهُ ۚ— وَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِیْمٌ ۟۠

2.235. கணவனை இழந்தோ விவாகரத்து செய்யப்பட்டோ இத்தாவில் காத்திருக்கும் பெண்களிடம் நேரிடையாக அல்லாமல் சாடைமாடையாக உங்கள் விருப்பத்தைத் தெரிவிப்பதிலோ (உதாரணமாக, உன்னுடைய தவணை முடிந்துவிட்டால் எனக்குத் தகவல் தெரிவி) உங்கள் உள்ளத்தில் அந்தப் பெண்களை மணமுடிக்க வேண்டும் என்று ஆசைகொள்வதிலோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்களின் மீது உங்களுக்குள்ள கடுமையான விருப்பத்தினால் அவர்களை நீங்கள் நினைப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்துவைத்துள்ளான். எனவேதான் வெளிப்படையாக இன்றி சாடையாக உங்களது விருப்பத்தைத் தெரிவிப்பதற்கு அனுமதித்துள்ளான். அவ்வாறின்றி இத்தாவில் காத்திருக்கும்போது அவர்களிடம் இரகசியமாக வாக்களிக்கவும் வேண்டாம்; திருமண ஒப்பந்தம் செய்யவும் வேண்டாம். அறிந்துகொள்ளுங்கள்! உங்கள் உள்ளத்தில் மறைத்து வைத்துள்ள அனுமதிக்கப்பட்ட, தடைசெய்யப்பட்ட ஆசைகளையும் அவன் அறிவான்.எனவே எச்சரிக்கையாக இருங்கள். அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டுவிடாதீர்கள். அறிந்துகொள்ளுங்கள், தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன்; அவன் சகிப்புத்தன்மைமிக்கவன்; அவசரப்பட்டு தண்டித்துவிட மாட்டான். info
التفاسير:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• مشروعية العِدة على من توفي عنها زوجها بأن تمتنع عن الزينة والزواج مدة أربعة أشهر وعشرة أيام.
1. கணவன் இறந்துவிட்டால் மனைவி நான்கு மாதங்களும் பத்து நாட்களும் இத்தாவில் காத்திருக்க வேண்டும். அந்த காலஇடைவெளியில் அவள் தன்னை அலங்கரித்துக்கொள்ளவோ திருமணம் செய்துகொள்ளவோ கூடாது. info

• معرفة المؤمن باطلاع الله عليه تَحْمِلُه على الحذر منه تعالى والوقوف عند حدوده.
2.அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டவன் அவனை அல்லாஹ் கண்கானித்துக்கொடிருக்கிறான் என்று அறிந்துவைத்திருப்பது அவனது வரம்புகளை மீறாது எச்சரிக்கையாக வாழ்வதற்கு வழிவகுக்கும். info

• الحث على المعاملة بالمعروف بين الأزواج والأقارب، وأن يكون العفو والمسامحة أساس تعاملهم فيما بينهم.
3. தம்பதிகள் மற்றும் உறவினர்கள் ஆகியோருக்கு இடையிலான நடவடிக்கைகள்; பரஸ்பரம் புரிந்துணர்வு, மன்னிப்பு, விட்டுக்கொடுப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டிருப்பது இன்றியமையாததாகும். info