Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht

external-link copy
27 : 10

وَالَّذِیْنَ كَسَبُوا السَّیِّاٰتِ جَزَآءُ سَیِّئَةٍ بِمِثْلِهَا ۙ— وَتَرْهَقُهُمْ ذِلَّةٌ ؕ— مَا لَهُمْ مِّنَ اللّٰهِ مِنْ عَاصِمٍ ۚ— كَاَنَّمَاۤ اُغْشِیَتْ وُجُوْهُهُمْ قِطَعًا مِّنَ الَّیْلِ مُظْلِمًا ؕ— اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟

10.27. அல்லாஹ்வை நிராகரித்தல், பாவங்கள் புரிதல் போன்ற தீயசெயல்களில் ஈடுபடுபவர்கள் மறுமை நாளில் அவர்கள் செய்த தீமைக்கேற்ப தண்டிக்கப்படுவார்கள். அவர்களின் முகங்களில் இழிவும் அவமானமும் படர்ந்திருக்கும். அல்லாஹ்வின் வேதனை அவர்கள் மீது இறங்கிவிட்டால் யாராலும் அதனைத் தடுக்க முடியாது. அவர்களின் முகங்களைச் சூழ்ந்திருக்கும் நரக நெருப்பின் புகையாலும் கருமையாலும் இருளான இரவின் கருமையால் அவை மூடப்பட்டுள்ளதைப் போல் தோன்றும். இந்த பண்புகளை உடையவர்கள்தாம் நரகவாசிகளாவர். அங்கு என்றென்றும் வீழ்ந்துகிடப்பார்கள். info
التفاسير:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• أعظم نعيم يُرَغَّب به المؤمن هو النظر إلى وجه الله تعالى.
1. அல்லாஹ்வின் திருமுகத்தைக் காணுவதே நம்பிக்கையாளரை ஆர்வமூட்டும் மிகப் பெரும் இன்பமாகும். info

• بيان قدرة الله، وأنه على كل شيء قدير.
2. அல்லாஹ்வின் ஆற்றலும் அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. info

• التوحيد في الربوبية والإشراك في الإلهية باطل، فلا بد من توحيدهما معًا.
3. அல்லாஹ்தான் அனைத்தையும் செய்கிறான் என்று நம்பி வணக்கவழிபாடுகளில் இணை வைப்பது தவறாகும். இரு பகுதிகளிலும் ஏகத்துவம் அவசியமாகும். info

• إذا قضى الله بعدم إيمان قوم بسبب معاصيهم فإنهم لا يؤمنون.
4. ஒரு சமுதாயத்தின் பாவங்களின் காரணமாக அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள் என அல்லாஹ் முடிவுசெய்துவிட்டால் அவர்கள் ஈமான் கொள்ளமாட்டார்கள். info