Përkthimi i kuptimeve të Kuranit Fisnik - El Muhtesar fi tefsir el Kuran el Kerim - Përkthimi tamilisht

external-link copy
13 : 10

وَلَقَدْ اَهْلَكْنَا الْقُرُوْنَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوْا ۙ— وَجَآءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَیِّنٰتِ وَمَا كَانُوْا لِیُؤْمِنُوْا ؕ— كَذٰلِكَ نَجْزِی الْقَوْمَ الْمُجْرِمِیْنَ ۟

10.13. -இணைவைப்பாளர்களே!- உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமூகங்கள் இறைத் தூதர்களை நிராகரித்து பாவங்கள் புரிந்ததனால் நாம் அவர்களை அழித்துவிட்டோம். அவர்களிடம் நாம் அனுப்பிய தூதர்கள் தமது இறைவனிடமிருந்து கொண்டுவந்தவற்றில் தாம் உண்மையாளர்களே என்பதை நிருபிக்கக்கூடிய தெளிவான ஆதாரங்களையும் சான்றுகளையும் அவர்களிடம் கொண்டுவந்தார்கள். அவர்கள் நம்பிக்கைகொள்ளத் தயாராக இல்லாததால் அவர்கள் நம்பிக்கைகொள்ளவில்லை. எனவே அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழிகாட்டாமல் கைவிட்டு விட்டான். அக்கிரமக்கார அந்த சமூகங்களை தண்டித்தது போலவே நாம் ஒவ்வொரு கால கட்டத்திலும், இடத்திலும் அவர்களைப் போன்றவர்களைத் தண்டிக்கிறோம். info
التفاسير:
Dobitë e ajeteve të kësaj faqeje:
• لطف الله عز وجل بعباده في عدم إجابة دعائهم على أنفسهم وأولادهم بالشر.
1. மனிதர்கள் தங்களுக்கு எதிராகவோ தங்கள் குடும்பத்தாருக்கு எதிராகவோ செய்யும் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை. இது அடியார்கள் மீது அவன் புரிந்த கருணையின் வெளிப்பாடாகும். info

• بيان حال الإنسان بالدعاء في الضراء والإعراض عند الرخاء والتحذير من الاتصاف بذلك.
2. துன்பத்தில் பிரார்த்திக்கும் இன்பத்தில் புறக்கணிக்கும் மனிதனின் நிலை விபரிக்கப்பட்டு அதனை விட்டும் எச்சரிக்கப்பட்டுள்ளது. info

• هلاك الأمم السابقة كان سببه ارتكابهم المعاصي والظلم.
3. முன்னைய சமுதாயங்களின் அழிவுக்குக் காரணம் அவர்கள் பாவங்களிலும் அநியாயத்திலும் ஈடுபட்டதாகும். info