Vertaling van de betekenissen Edele Qur'an - Tamil vertaling van de samenvatting van de tafsier van de Heilige Koran

external-link copy
54 : 8

كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَ ۙ— وَالَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ— كَذَّبُوْا بِاٰیٰتِ رَبِّهِمْ فَاَهْلَكْنٰهُمْ بِذُنُوْبِهِمْ وَاَغْرَقْنَاۤ اٰلَ فِرْعَوْنَ ۚ— وَكُلٌّ كَانُوْا ظٰلِمِیْنَ ۟

8.54. இந்த நிராகரிப்பாளர்களின் நிலைமை இவர்களுக்கு முன்னர் நிராகரித்த பிர்அவ்னின் சமூகம் மற்றும் அவர்களுக்கு முந்தைய நிராகரித்த சமூகங்களை ஒத்திருக்கின்றது. அவர்கள் தங்கள் இறைவனின் சான்றுகளை நிராகரித்தார்கள். அவர்கள் செய்த பாவங்களினால் அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். பிர்அவ்னின் சமூகத்தை அவன் கடலில் மூழ்கடித்து அழித்தான். பிர்அவ்னின் சமூகமும் அவர்களுக்கு முந்தைய சமூகங்களும் அல்லாஹ்வை நிராகரிக்கக்கூடியவர்களாக, அவனுக்கு மற்றவர்களை இணையாக்கக்கூடியவர்களாக இருந்ததனால் அவர்கள் அநியாயக்காரர்களாக இருந்தார்கள். இதன் மூலம் அவர்கள் தங்களை அவனுடைய வேதனைக்குத் தகுதியாக்கிக் கொண்டார்கள். எனவேதான் அவர்கள் மீது தண்டனையை இறக்கினான். info
التفاسير:
Voordelen van de verzen op deze pagina:
• من فوائد العقوبات والحدود المرتبة على المعاصي أنها سبب لازدجار من لم يعمل المعاصي، كما أنها زجر لمن عملها ألا يعاودها.
1. பாவங்களுக்கான நிர்ணயம் செய்யப்பட்ட தண்டனைகளால் ஏற்படும் நன்மைகளில் சில: பாவங்கள் புரியாதவர்கள் பாவம் செய்யாமல் தவிர்ந்து கொள்வார்கள். பாவமிழைத்தவர்கள் மீண்டும் அவற்றில் ஈடுபடாமல் தடுக்கப்படுவார்கள். info

• من أخلاق المؤمنين الوفاء بالعهد مع المعاهدين، إلا إن وُجِدت منهم الخيانة المحققة.
2. ஒப்பந்தம் செய்தவர்களோடு ஒப்பந்தங்களை முழுமையாக நிறைவேற்றுவது நம்பிக்கையாளர்களின் பண்பாகும். ஒப்பந்தம் செய்தோர் துரோகமிழைத்தது நிரூபிக்கப்பட்டாலே தவிர. info

• يجب على المسلمين الاستعداد بكل ما يحقق الإرهاب للعدو من أصناف الأسلحة والرأي والسياسة.
3. எதிரிகளை அச்சுறுத்தும் அனைத்துவிதமான ஆயுதங்கள், ஆலோசனைகள் அரசியல் செயற்பாடுகள் போன்றவற்றைத் தயார்படுத்திக்கொள்வது முஸ்லிம்கள் மீது கடமையாகும். info

• جواز السلم مع العدو إذا كان فيه مصلحة للمسلمين.
4. முஸ்லிம்களுக்கு நன்மை இருக்கும் பட்சத்தில் எதிரிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். info