Vertaling van de betekenissen Edele Qur'an - Tamil vertaling van de samenvatting van de tafsier van de Heilige Koran

external-link copy
44 : 6

فَلَمَّا نَسُوْا مَا ذُكِّرُوْا بِهٖ فَتَحْنَا عَلَیْهِمْ اَبْوَابَ كُلِّ شَیْءٍ ؕ— حَتّٰۤی اِذَا فَرِحُوْا بِمَاۤ اُوْتُوْۤا اَخَذْنٰهُمْ بَغْتَةً فَاِذَا هُمْ مُّبْلِسُوْنَ ۟

6.44. கடுமையான வறுமை மற்றும் நோய் மூலம் அவர்கள் அறுவுறுத்தப்பட்டதை அவர்கள் விட்டு, அல்லாஹ்வின் கட்டளையின்படி செயல்படாமல் இருந்தபோது, கொஞ்சம்கொஞ்சமாக வசதியின் வாயில்களை நாம் அவர்களுக்குத் திறந்துவிட்டோம்; ஏழ்மையின் பின் செல்வத்தையும் நோயின் பின் ஆரோக்கியத்தையும் அவர்களுக்கு வழங்கினோம். இதனால் அவர்களுக்கு கர்வம் ஏற்பட்டபோது, தமக்கு வழங்கப்பட்ட வசதிகளினால் சந்தோசம் அவர்களை ஆட்கொண்ட போது திடீரென நம்முடைய வேதனை அவர்களை அடைந்தது. அதனால் தடுமாற்றத்திலும் விரக்தியிலும் சிக்கிக்கொண்டனர். info
التفاسير:
Voordelen van de verzen op deze pagina:
• تشبيه الكفار بالموتى؛ لأن الحياة الحقيقية هي حياة القلب بقَبوله الحق واتباعه طريق الهداية.
1. நிராகரிப்பாளர்கள் இறந்தவர்களுக்கு ஒப்பாகக் கூறப்பட்டுள்ளார்கள். ஏனெனில் சத்தியத்தை ஏற்றுக் கொண்டு நேர்வழியைப் பின்பற்றுவதன் மூலம் இதயம் உயிர்பெறுவதே உண்மையான வாழ்க்கையாகும். info

• من حكمة الله تعالى في الابتلاء: إنزال البلاء على المخالفين من أجل تليين قلوبهم وردِّهم إلى ربهم.
2. அல்லாஹ் சோதிப்பதன் நோக்கங்களில் ஒன்றுதான், தன் கட்டளைக்கு மாறாகச் செயல்படுபவர்கள் தன் பக்கம் திரும்புவதற்காகவும் அவர்களது உள்ளங்கள் இளகிவிடுவதற்காகவும் சோதனைகளை ஏற்படுத்துவதாகும். info

• وجود النعم والأموال بأيدي أهل الضلال لا يدل على محبة الله لهم، وإنما هو استدراج وابتلاء لهم ولغيرهم.
3. வழிகேடர்களின் கைகளில் இருக்கும் செல்வங்களும் அருட்கொடைகளும் அல்லாஹ் அவர்களை நேசிக்கிறான் என்பதற்கான அடையாளங்கள் அல்ல. மாறாக அது அவர்களை விட்டுப்பிடிப்பதற்கும் அவர்களையும் ஏனையோரையும் சோதிப்பதற்குமே வழங்கப்பட்டுள்ளது. info