Vertaling van de betekenissen Edele Qur'an - Tamil vertaling van de samenvatting van de tafsier van de Heilige Koran

external-link copy
13 : 58

ءَاَشْفَقْتُمْ اَنْ تُقَدِّمُوْا بَیْنَ یَدَیْ نَجْوٰىكُمْ صَدَقٰتٍ ؕ— فَاِذْ لَمْ تَفْعَلُوْا وَتَابَ اللّٰهُ عَلَیْكُمْ فَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَطِیْعُوا اللّٰهَ وَرَسُوْلَهٗ ؕ— وَاللّٰهُ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟۠

58.13. தூதருடன் இரகசியம் பேசும்போது நீங்கள் வழங்கும் தர்மத்தினால் வறுமை ஏற்பட்டுவிடும் என்று அஞ்சுகிறீர்களா? அல்லாஹ் கட்டளையிட்டவாறு நீங்கள் செய்யாதபோது அதனை விட்டுவிடுவதற்கு அனுமதியளித்து அவன் உங்களை மன்னித்துவிட்டான். எனவே தொழுகையை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுங்கள். உங்களின் செல்வங்களிலிருந்து ஸகாத்தை வழங்கிவிடுங்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் செய்பவற்றை அவன் நன்கறிந்தவன். உங்களின் செயல்களில் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. அவன் அவற்றிற்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவான். info
التفاسير:
Voordelen van de verzen op deze pagina:
• لطف الله بنبيه صلى الله عليه وسلم؛ حيث أدَّب صحابته بعدم المشقَّة عليه بكثرة المناجاة.
1. தனது நபியுடன் அல்லாஹ்வின் மென்மை. அதனால்தான் அதிகமாக உறவாடி அவருக்கு சிரமம் ஏற்படுத்த வேண்டாம் என அவரது தோழர்களுக்கு வழிகாட்டுகிறான். info

• ولاية اليهود من شأن المنافقين.
2. யூதர்களுடன் நட்புக்கொள்வது நயவஞ்சகர்கிளின் பண்பாகும். info

• خسران أهل الكفر وغلبة أهل الإيمان سُنَّة إلهية قد تتأخر، لكنها لا تتخلف.
3. நம்பிக்கையாளர்கள் வெற்றியடைவதும் நிராகரிப்பாளர்கள் நஷ்டமடைவதும் இறைவன் ஏற்படுத்திய நியதியாகும். அது சிலவேளை தாமதமாகலாம். ஆனால் நடைபெறாமலிருக்காது. info