Vertaling van de betekenissen Edele Qur'an - Tamil vertaling van de samenvatting van de tafsier van de Heilige Koran

Pagina nummer:close

external-link copy
16 : 50

وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ ۖۚ— وَنَحْنُ اَقْرَبُ اِلَیْهِ مِنْ حَبْلِ الْوَرِیْدِ ۟

50.16. திட்டமாக நாம் மனிதனைப் படைத்துள்ளோம். அவன் மனதில் தோன்றும் எண்ணங்களையும் சிந்தனைகளையும் நாம் அறிவோம். நாம் அவனுக்கு பிடரி நரம்பைவிட நெருக்கமாக இருக்கின்றோம். info
التفاسير:

external-link copy
17 : 50

اِذْ یَتَلَقَّی الْمُتَلَقِّیٰنِ عَنِ الْیَمِیْنِ وَعَنِ الشِّمَالِ قَعِیْدٌ ۟

50.17. இரண்டு வானவர்கள் அவனுடைய செயல்களைப் பதிவு செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் வலப்பக்கம் அமர்ந்துள்ளார். மற்றொருவர் இடப்பக்கம் அமர்ந்துள்ளார். info
التفاسير:

external-link copy
18 : 50

مَا یَلْفِظُ مِنْ قَوْلٍ اِلَّا لَدَیْهِ رَقِیْبٌ عَتِیْدٌ ۟

50.18. அவன் பேசும் ஒவ்வொரு வார்த்தையின் போதும் கண்காணிக்கக்கூடிய வானவர் அவனிடம் இருந்தே அல்லாமல் அவன் எதையும் கூறுவது இல்லை. info
التفاسير:

external-link copy
19 : 50

وَجَآءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ ؕ— ذٰلِكَ مَا كُنْتَ مِنْهُ تَحِیْدُ ۟

50.19. மரண வேதனை உண்மையாகவே வந்தது. அதிலிருந்து தப்ப முடியாது. -அலட்சியமான மனிதனே!- இதைக்கண்டுதான் நீ பின்வாங்கி விரண்டோடிக்கொண்டிருந்தாய். info
التفاسير:

external-link copy
20 : 50

وَنُفِخَ فِی الصُّوْرِ ؕ— ذٰلِكَ یَوْمُ الْوَعِیْدِ ۟

50.20. இரண்டாது முறை சூர் ஊதுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள வானவர் சூர் ஊதுவார். அது மறுமை நாளாகும். நிராகரிப்பாளர்களும் பாவிகளும் வேதனையைக் கொண்டு எச்சரிக்கப்பட்ட நாளாகும். info
التفاسير:

external-link copy
21 : 50

وَجَآءَتْ كُلُّ نَفْسٍ مَّعَهَا سَآىِٕقٌ وَّشَهِیْدٌ ۟

50.21. ஒவ்வொரு மனிதனுடனும் ஒரு வானவர் வருவார். அவர் அவனை இழுத்துக் கொண்டு வருவார். இன்னொரு வானவர் அவன் செய்த செயல்களுக்கு சாட்சி கூறக்கூடியவராக இருப்பார். info
التفاسير:

external-link copy
22 : 50

لَقَدْ كُنْتَ فِیْ غَفْلَةٍ مِّنْ هٰذَا فَكَشَفْنَا عَنْكَ غِطَآءَكَ فَبَصَرُكَ الْیَوْمَ حَدِیْدٌ ۟

50.22. இழுக்கப்பட்டு வந்த அந்த மனிதனிடம் கூறப்படும்: “நீ உலகில் உன் இச்சைகள் மற்றும் இன்பங்களினால் மயங்கியதனால் இந்த நாளைப் பற்றி அலட்சியத்தில் இருந்தாய். நீ கண்கூடாகக் காணும் வேதனையையும் துன்பத்தையும் கொண்டு உன் அலட்சியத்தை நாம் நீக்கிவிட்டோம். இன்று உன் பார்வை கூர்மையானதாக இருக்கும். அதனால் எது குறித்து அலட்சியமாக இருந்தாயோ அதனை நீ கண்டுகொள்வாய்.” info
التفاسير:

external-link copy
23 : 50

وَقَالَ قَرِیْنُهٗ هٰذَا مَا لَدَیَّ عَتِیْدٌ ۟ؕ

50.23. அவனுடன் ஒட்டியிருப்பதற்கு நியமிக்கப்பட்ட வானவர் கூறுவார்: “இதுவே என்னிடமுள்ள கூடுதல், குறைவின்றி அவன் செய்த செயல்களாகும்.” info
التفاسير:

external-link copy
24 : 50

اَلْقِیَا فِیْ جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِیْدٍ ۟ۙ

50.24. இழுத்துவந்த மற்றும் சாட்சி கூறக்கூடிய அந்த இரு வானவர்களிடமும் அல்லாஹ் கூறுவான்: “சத்தியத்தை மறுத்த, அதில் பிடிவாதமாக நிலைத்திருந்த ஒவ்வொருவனையும் நரகத்தில் போடுங்கள்.” info
التفاسير:

external-link copy
25 : 50

مَّنَّاعٍ لِّلْخَیْرِ مُعْتَدٍ مُّرِیْبِ ۟ۙ

50.25. அவன் அல்லாஹ் கடமையாக்கியவற்றை அதிகம் தடுப்பவனாகவும் அவனுடைய வரம்புகளை மீறக்கூடியவனாகவும் அவனுக்கு அறிவிக்கப்பட்ட வாக்குறுதியிலும் எச்சரிக்கையிலும் சந்தேகம் கொள்பவனாக இருந்தான். info
التفاسير:

external-link copy
26 : 50

١لَّذِیْ جَعَلَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَاَلْقِیٰهُ فِی الْعَذَابِ الشَّدِیْدِ ۟

50.26. அவன் அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை ஏற்படுத்தி வணக்க வழிபாட்டில் அதனைக் கூட்டாக்கினான். ஆகவே அவனைக் கடுமையான வேதனையில் போடுங்கள். info
التفاسير:

external-link copy
27 : 50

قَالَ قَرِیْنُهٗ رَبَّنَا مَاۤ اَطْغَیْتُهٗ وَلٰكِنْ كَانَ فِیْ ضَلٰلٍۢ بَعِیْدٍ ۟

50.27. அவனுடன் ஒட்டியிருந்த ஷைத்தான் அவனைவிட்டும் நீங்கியவனாகக் கூறுவான்: “எங்கள் இறைவா! நான் அவனை வழிகெடுக்கவில்லை. ஆனால் அவனே சத்தியத்தைவிட்டும் தூரமாக வழிகேட்டில்தான் இருந்தான்.” info
التفاسير:

external-link copy
28 : 50

قَالَ لَا تَخْتَصِمُوْا لَدَیَّ وَقَدْ قَدَّمْتُ اِلَیْكُمْ بِالْوَعِیْدِ ۟

50.28. அல்லாஹ் கூறுவான்: “என்னிடத்தில் சண்டையிடாதீர்கள். அதனால் எந்தப் பயனும் இல்லை. உங்களுக்கு உலகில் என் தூதர்களை அனுப்பி என்னை நிராகரிப்பவர்களுக்கு, மாறுசெய்பவர்களுக்கு கடுமையான அச்சுறுத்தலை முன்னரே விடுத்திருக்கிறேன்.” info
التفاسير:

external-link copy
29 : 50

مَا یُبَدَّلُ الْقَوْلُ لَدَیَّ وَمَاۤ اَنَا بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟۠

50.29. என்னிடத்தில் வார்த்தை மாற்றப்படாது. என் வாக்குறுதி மாறாது. நன்மைகளைக் குறைத்தோ, தீமைகளை அதிகரித்தோ நான் அடியார்களின்மீது அநீதி இழைக்கமாட்டேன். மாறாக அவர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவேன். info
التفاسير:

external-link copy
30 : 50

یَوْمَ نَقُوْلُ لِجَهَنَّمَ هَلِ امْتَلَاْتِ وَتَقُوْلُ هَلْ مِنْ مَّزِیْدٍ ۟

50.30. நாம் நரகத்திடம் “நான் உன்னில் போட்டுள்ள நிராகரிப்பாளர்கள் மற்றும் பாவிகளைக் கொண்டு நீ நிறைந்துவிட்டாயா” என்று கேட்கும் நாளில் அது அதிகமாக வேண்டியவாறு, தன் இறைவனுக்காக கோபம் கொண்டவாறு “இன்னும் ஏதேனும் இருக்கின்றதா? என்று அது விடையளிக்கும். info
التفاسير:

external-link copy
31 : 50

وَاُزْلِفَتِ الْجَنَّةُ لِلْمُتَّقِیْنَ غَیْرَ بَعِیْدٍ ۟

50.31. அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்குக் கிடைக்கும் கடுமையான வேதனையைக் குறிப்பிட்ட பிறகு நம்பிக்கையாளர்களான அடியார்களுக்கு தயார்படுத்திவைத்துள்ளவற்றைக்குறித்து கூறுகிறான்: தங்கள் இறைவனின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவைகளிலிருந்து விலகி அவனை அஞ்சியவர்களுக்காக சுவனம் அருகில் கொண்டு வரப்படும். அவர்கள் அதிலுள்ள அருட்கொடைகளை நெருக்கமாகக் காண்பார்கள். info
التفاسير:

external-link copy
32 : 50

هٰذَا مَا تُوْعَدُوْنَ لِكُلِّ اَوَّابٍ حَفِیْظٍ ۟ۚ

50.32. அவர்களிடம் கூறப்படும்: “இதுதான் அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்தது. பாவமன்னிப்புக் கோரி தம் இறைவனின் பக்கம் மீளக்கூடிய, அவன் கடமையாக்கியவற்றை பாதுகாக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் உரியது.” info
التفاسير:

external-link copy
33 : 50

مَنْ خَشِیَ الرَّحْمٰنَ بِالْغَیْبِ وَجَآءَ بِقَلْبٍ مُّنِیْبِ ۟ۙ

50.33. யார் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் காணாத இரகசியத்திலும் அவனை அஞ்சி, அவன் பக்கம் அதிகம் திரும்பக்கூடிய, அல்லாஹ்வின்பால் முன்னோக்கியவராக தூய உள்ளத்துடன் அவனை சந்தித்தாரோ info
التفاسير:

external-link copy
34 : 50

١دْخُلُوْهَا بِسَلٰمٍ ؕ— ذٰلِكَ یَوْمُ الْخُلُوْدِ ۟

50.34. அத்தகையவர்களிடம் கூறப்படும்: “நீங்கள் வெறுக்கும் விஷயத்திலிருந்து சாந்தி பெற்றவர்களாக சுவனத்தில் நுழையுங்கள். இதுதான் நிலையான நாளாகும். இதற்குப் பிறகு அழிவு இல்லை. info
التفاسير:

external-link copy
35 : 50

لَهُمْ مَّا یَشَآءُوْنَ فِیْهَا وَلَدَیْنَا مَزِیْدٌ ۟

50.35. அவர்கள் விரும்பக்கூடிய முடிவற்ற அருட்கொடைகள் அவர்களுக்குக் கிடைக்கும். நம்மிடத்தில் இன்னும் ஏராளமான அருட்கொடைகளும் உண்டு. அவை எந்தக் கண்ணும் பார்த்திராதவை, எந்தக் காதும் கேட்டிராதவை, எந்த மனித உள்ளமும் நினைத்திராதவை. அவற்றில் அல்லாஹ்வைப் பார்ப்பதும் அடங்கும். info
التفاسير:
Voordelen van de verzen op deze pagina:
• علم الله بما يخطر في النفوس من خير وشر.
1. மனங்களில் தோன்றக்கூடிய நன்மையான, தீமையான எண்ணங்கள் அனைத்தையும் அல்லாஹ் அறிவான். info

• خطورة الغفلة عن الدار الآخرة.
2.மறுமை வீட்டை விட்டும் அலட்சியமாக இருப்பதன் விபரீதம். info

• ثبوت صفة العدل لله تعالى.
3. நீதி செலுத்துதல் என்னும் பண்பு அல்லாஹ்வுக்கு உள்ளது என்பது உறுதியாகிறது. info