Vertaling van de betekenissen Edele Qur'an - Tamil vertaling van de samenvatting van de tafsier van de Heilige Koran

external-link copy
140 : 3

اِنْ یَّمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِّثْلُهٗ ؕ— وَتِلْكَ الْاَیَّامُ نُدَاوِلُهَا بَیْنَ النَّاسِ ۚ— وَلِیَعْلَمَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَیَتَّخِذَ مِنْكُمْ شُهَدَآءَ ؕ— وَاللّٰهُ لَا یُحِبُّ الظّٰلِمِیْنَ ۟ۙ

3.139. நம்பிக்கையாளர்களே! உஹதுப்போரில் உங்களுக்கு உயிர்ச் சேதங்களும் காயங்களும் ஏற்பட்டிருந்தால் உங்களைப்போன்றே நிராகரிப்பாளர்களுக்கும் உயிர்ச் சேதங்களும் காயங்களும் ஏற்பட்டிருக்கின்றன. நம்பிக்கைகொண்ட, நிராகரித்த மக்களிடையே உயர்ந்த நோக்கங்களுக்காக அல்லாஹ் தான் நாடியவாறு வெற்றியையும் தோல்வியையும் காலத்துக்குக் காலம் மாறிமாறி வரச் செய்கின்றான். உண்மையான நம்பிக்கையாளர்களை நயவஞ்சகர்களிடமிருந்து வேறுபடுத்துதல்; தான் விரும்பும் அடியார்களுக்கு தன் பாதையில் மரணிக்கச் செய்வதன் மூலம் கவுரவித்தல் ஆகியன அந்த நோக்கங்களில் சிலவாகும். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாது செய்வதை விட்டுவிட்டு தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்ட அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான். info
التفاسير:
Voordelen van de verzen op deze pagina:
• الترغيب في المسارعة إلى عمل الصالحات اغتنامًا للأوقات، ومبادرة للطاعات قبل فواتها.
1. நேரங்கள் கடந்துவிடுவதற்கு முன்பே அவற்றைப் பயன்படுத்தி நற்செயல்களின் பக்கம், அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதன் பக்கம் விரையுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. info

• من صفات المتقين التي يستحقون بها دخول الجنة: الإنفاق في كل حال، وكظم الغيظ، والعفو عن الناس، والإحسان إلى الخلق.
2. எல்லா சூழ்நிலைகளிலும் அல்லாஹ்வின் பாதையில் செலவுசெய்தல், கோபத்தை அடக்கிக் கொள்ளுதல், மக்களை மன்னித்தல், படைப்புகளுக்கு நன்மை செய்தல் இவையனைத்தும் அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களின் சுவனம் செல்லத் தகுதியான பண்புகளாகும். info

• النظر في أحوال الأمم السابقة من أعظم ما يورث العبرة والعظة لمن كان له قلب يعقل به.
3. கடந்தகால சமூகங்களை படிப்பினைபெறும் கண்ணோட்டத்தோடு பார்ப்பது உணர்ந்துகொள்ளும் உள்ளங்களுக்கு படிப்பினைகளையும் அறிவுரைகளையும் அளிக்கிறது. info