Vertaling van de betekenissen Edele Qur'an - Tamil-vertaling - Abdoel Hamid Baqwi

அஷ்ஷூரா

external-link copy
1 : 42

حٰمٓ ۟ۚ

1, 2. ஹா மீம். அய்ன் ஸீன் காஃப். info
التفاسير:

external-link copy
2 : 42

عٓسٓقٓ ۟

1, 2. ஹா மீம். அய்ன் ஸீன் காஃப். info
التفاسير:

external-link copy
3 : 42

كَذٰلِكَ یُوْحِیْۤ اِلَیْكَ وَاِلَی الَّذِیْنَ مِنْ قَبْلِكَ ۙ— اللّٰهُ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟

3. (நபியே! இந்த அத்தியாயம் உமக்கு அருளப்படுகிறது.) இவ்வாறே உமக்கும், உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் அனைவரையும் மிகைத்தவனும், மிக்க ஞானவானுமாகிய அல்லாஹ் (தன் வசனங்களை) வஹ்யி மூலம் அறிவித்து வந்திருக்கிறான். info
التفاسير:

external-link copy
4 : 42

لَهٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ ؕ— وَهُوَ الْعَلِیُّ الْعَظِیْمُ ۟

4. வானங்களில் இருப்பவையும், பூமியில் இருப்பவையும் அவனுக்கே சொந்தமானவை. (அனைவரையும் விட) அவன் மிக மேலானவன்; மிக மகத்தானவன். info
التفاسير:

external-link copy
5 : 42

تَكَادُ السَّمٰوٰتُ یَتَفَطَّرْنَ مِنْ فَوْقِهِنَّ وَالْمَلٰٓىِٕكَةُ یُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ وَیَسْتَغْفِرُوْنَ لِمَنْ فِی الْاَرْضِ ؕ— اَلَاۤ اِنَّ اللّٰهَ هُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ ۟

5. (மனிதர்கள் செய்யும் பாவங்களின் காரணமாக) அவர்கள் மீது வானம் வெடித்து (விழுந்து) விடவும் கூடும். (அந்நேரத்தில்) வானவர்களும் (பயந்து) தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிசெய்து, பூமியில் உள்ளவர்க(ளின் குற்றங்க)ளை மன்னிக்குமாறு கோருவார்கள். (மனிதர்கள் பாவத்திலிருந்து விலகி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் என்பதை (நபியே! நீர்) அறிந்து கொள்வீராக. info
التفاسير:

external-link copy
6 : 42

وَالَّذِیْنَ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءَ اللّٰهُ حَفِیْظٌ عَلَیْهِمْ ۖؗ— وَمَاۤ اَنْتَ عَلَیْهِمْ بِوَكِیْلٍ ۟

6. எவர்கள், அவனையன்றி (மற்றவர்களைத்) தங்களுக்குப் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ, அவர்களை அல்லாஹ் கண்காணிக்கிறான். (நபியே!) அவர்களுக்கு நீர் பொறுப்பாளரல்ல. info
التفاسير:

external-link copy
7 : 42

وَكَذٰلِكَ اَوْحَیْنَاۤ اِلَیْكَ قُرْاٰنًا عَرَبِیًّا لِّتُنْذِرَ اُمَّ الْقُرٰی وَمَنْ حَوْلَهَا وَتُنْذِرَ یَوْمَ الْجَمْعِ لَا رَیْبَ فِیْهِ ؕ— فَرِیْقٌ فِی الْجَنَّةِ وَفَرِیْقٌ فِی السَّعِیْرِ ۟

7. (நபியே!) இவ்வாறே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் வஹ்யி மூலம் உமக்கு அறிவித்தோம். (இதைக் கொண்டு, அரபி மொழி பேசும் மக்காவாசிகளாகிய) தாய்நாட்டாரையும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்களையும், நீர் எச்சரித்து, அனைவரையும் (விசாரணைக்காக) ஒன்று சேர்க்கக்கூடிய நாளைப் பற்றி அச்சமூட்டுவீராக! அந்நாள் வருவதில் சந்தேகமே இல்லை. (அந்நாளில்) ஒரு கூட்டத்தார் சொர்க்கத்திற்கும், ஒரு கூட்டத்தார் நரகத்திற்கும் செல்வார்கள். info
التفاسير:

external-link copy
8 : 42

وَلَوْ شَآءَ اللّٰهُ لَجَعَلَهُمْ اُمَّةً وَّاحِدَةً وَّلٰكِنْ یُّدْخِلُ مَنْ یَّشَآءُ فِیْ رَحْمَتِهٖ ؕ— وَالظّٰلِمُوْنَ مَا لَهُمْ مِّنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟

8. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் அனைவரையுமே (ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே சமூகத்தினராக்கி இருப்பான். (எனினும், அவர்கள் அனைவருடைய நடத்தையும் ஒரேவிதமாக இருக்கவில்லை.) ஆகவே, தான் விரும்பியவர்களையே தன் அருளில் புகுத்துகிறான். அநியாயக்காரர்(களைத் தப்பான வழியில் விட்டுவிட்டான். அவர்)களை (அந்நாளில்) பாதுகாப்பவர்களும் இல்லை; (அவர்களுக்கு) உதவி செய்பவர்களும் இல்லை. info
التفاسير:

external-link copy
9 : 42

اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اَوْلِیَآءَ ۚ— فَاللّٰهُ هُوَ الْوَلِیُّ وَهُوَ یُحْیِ الْمَوْتٰی ؗ— وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟۠

9. (நபியே!) அல்லாஹ்வையன்றி (மற்றவர்களைத் தங்கள்) பாதுகாவலர்களாக அவர்கள் எடுத்துக் கொண்டனரா? (அவ்வாறாயின் அது முற்றிலும் தவறாகும்.) அல்லாஹ் (ஒருவன்)தான் உண்மையான பாதுகாவலன். அவனே மரணித்தவர்களை உயிர்ப்பிப்பான். அவன்தான் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன். info
التفاسير:

external-link copy
10 : 42

وَمَا اخْتَلَفْتُمْ فِیْهِ مِنْ شَیْءٍ فَحُكْمُهٗۤ اِلَی اللّٰهِ ؕ— ذٰلِكُمُ اللّٰهُ رَبِّیْ عَلَیْهِ تَوَكَّلْتُ ۖۗ— وَاِلَیْهِ اُنِیْبُ ۟

10. (நபியே! அவர்களை நோக்கி நீர் கூறுவீராக:) ‘‘இதில் நீங்கள் எவ்விஷயத்தைப் பற்றித் தர்க்கித்துக் கொள்கிறீர்களோ, அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே இருக்கிறது. அந்த அல்லாஹ்தான் எனது இறைவன். அவனையே நான் முற்றிலும் நம்பி அவனையே நான் முன்னோக்கி இருக்கிறேன்.'' info
التفاسير: