Vertaling van de betekenissen Edele Qur'an - Tamil-vertaling - Abdoel Hamid Baqwi

Pagina nummer:close

external-link copy
166 : 3

وَمَاۤ اَصَابَكُمْ یَوْمَ الْتَقَی الْجَمْعٰنِ فَبِاِذْنِ اللّٰهِ وَلِیَعْلَمَ الْمُؤْمِنِیْنَ ۟ۙ

166. இரு படைகளும் சந்தித்த அன்று உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் அல்லாஹ்வின் கட்டளைப்படியேதான் (ஏற்பட்டது). உண்மை நம்பிக்கையாளர்களையும், நயவஞ்சகர்களையும் பிரித்தறிவிப்பதற்காகவே (இவ்வாறு செய்தான்). info
التفاسير:

external-link copy
167 : 3

وَلِیَعْلَمَ الَّذِیْنَ نَافَقُوْا ۖۚ— وَقِیْلَ لَهُمْ تَعَالَوْا قَاتِلُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ اَوِ ادْفَعُوْا ؕ— قَالُوْا لَوْ نَعْلَمُ قِتَالًا لَّاتَّبَعْنٰكُمْ ؕ— هُمْ لِلْكُفْرِ یَوْمَىِٕذٍ اَقْرَبُ مِنْهُمْ لِلْاِیْمَانِ ۚ— یَقُوْلُوْنَ بِاَفْوَاهِهِمْ مَّا لَیْسَ فِیْ قُلُوْبِهِمْ ؕ— وَاللّٰهُ اَعْلَمُ بِمَا یَكْتُمُوْنَ ۟ۚ

167. (நம்பிக்கையாளர்களே! அந்நயவஞ்சகர்களை நோக்கி நம்முடன் சேர்ந்து) அல்லாஹ்வின் பாதையில் போர்புரிய வாருங்கள் அல்லது அ(ந்த நிராகரிப்ப)வர்களைத் தடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறப்பட்டதற்கு ‘‘(இதை) நாங்கள் போர் என்று கருதியிருந்தால் நிச்சயமாக உங்களைத் தொடர்ந்(தே வந்)திருப்போம்'' என்று அவர்கள் கூறினார்கள். அன்றைய தினம் அவர்கள் நம்பிக்கையைவிட நிராகரிப்புக்கே மிகவும் நெருங்கி இருந்தார்கள். தங்கள் மனதில் இல்லாதவற்றையே அவர்கள் தங்கள் வாயால் கூறினார்கள். அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்துக் கொண்டிருப்பதை அல்லாஹ் நன்கறிவான். info
التفاسير:

external-link copy
168 : 3

اَلَّذِیْنَ قَالُوْا لِاِخْوَانِهِمْ وَقَعَدُوْا لَوْ اَطَاعُوْنَا مَا قُتِلُوْا ؕ— قُلْ فَادْرَءُوْا عَنْ اَنْفُسِكُمُ الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

168. இவர்கள் (தங்கள் வீட்டில்) இருந்து கொண்டே (போரில் இறந்துபோன) தங்கள் சகோதரர்களைப் பற்றி ‘‘அவர்களும் எங்களைப் பின்பற்றி இருந்தால் (போருக்குச் சென்று இப்படி) கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்'' என்றும் கூறினார்கள். (ஆகவே, நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (அவர்களை என்ன, முதலில்!) நீங்கள் உங்களை விட்டு மரணத்தைத் தடுத்துப் பாருங்கள்!'' info
التفاسير:

external-link copy
169 : 3

وَلَا تَحْسَبَنَّ الَّذِیْنَ قُتِلُوْا فِیْ سَبِیْلِ اللّٰهِ اَمْوَاتًا ؕ— بَلْ اَحْیَآءٌ عِنْدَ رَبِّهِمْ یُرْزَقُوْنَ ۟ۙ

169. (நபியே!) அல்லாஹ்வின் பாதையில் (போர்செய்து) வெட்டப்பட்டோரை இறந்து விட்டவர்கள் என நீர் ஒருபோதும் எண்ண வேண்டாம். மாறாக, அவர்கள் தங்கள் இறைவனிடத்தில் நிச்சயமாக உயிரோடு இருக்கிறார்கள். (மேலும்,) அவர்களுக்கு உணவும் அளிக்கப்படுகிறது. info
التفاسير:

external-link copy
170 : 3

فَرِحِیْنَ بِمَاۤ اٰتٰىهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ۙ— وَیَسْتَبْشِرُوْنَ بِالَّذِیْنَ لَمْ یَلْحَقُوْا بِهِمْ مِّنْ خَلْفِهِمْ ۙ— اَلَّا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟ۘ

170. அல்லாஹ் தன் அருளால் (வீரமரணம் எய்திய) அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு ஆனந்தமடைகிறார்கள். இன்னும், தங்களுடன் சேராமல் தங்களுக்குப் பின் (இவ்வுலகில் உயிரோடு) இருப்பவர்களைப் பற்றி ‘‘அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்'' என்று மகிழ்ச்சியடைகின்றனர். info
التفاسير:

external-link copy
171 : 3

یَسْتَبْشِرُوْنَ بِنِعْمَةٍ مِّنَ اللّٰهِ وَفَضْلٍ ۙ— وَّاَنَّ اللّٰهَ لَا یُضِیْعُ اَجْرَ الْمُؤْمِنِیْنَ ۟

171. அல்லாஹ்வி(ன் அருளி)னால் தாங்கள் அடைந்த பாக்கியத்தைப் பற்றியும், மேன்மையைப் பற்றியும் ‘‘நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் (நற்)கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கி விடவில்லை'' என்றும் மகிழ்ந்து கொண்டிருப்பார்கள். info
التفاسير:

external-link copy
172 : 3

اَلَّذِیْنَ اسْتَجَابُوْا لِلّٰهِ وَالرَّسُوْلِ مِنْ بَعْدِ مَاۤ اَصَابَهُمُ الْقَرْحُ ۛؕ— لِلَّذِیْنَ اَحْسَنُوْا مِنْهُمْ وَاتَّقَوْا اَجْرٌ عَظِیْمٌ ۟ۚ

172. அவர்கள் எத்தகையவர்கள் என்றால், காயமடைந்த பின்னரும் அல்லாஹ்வுடைய, (அவனுடைய) தூதருடைய அழைப்பை ஏற்று (போருக்கு)ச் சென்றனர். (அல்லாஹ்வுக்குப்) பயந்து நன்மை செய்த இவர்களுக்கு மகத்தான (நற்)கூலி உண்டு. info
التفاسير:

external-link copy
173 : 3

اَلَّذِیْنَ قَالَ لَهُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدْ جَمَعُوْا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ اِیْمَانًا ۖۗ— وَّقَالُوْا حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِیْلُ ۟

173. (சில) மக்கள் அவர்களிடம் (வந்து) ‘‘உங்களுக்கு எதிராக (போர்புரிய) எல்லா வகுப்பினரும் நிச்சயமாக ஒன்று சேர்ந்திருக்கின்றனர் (ஆதலால்,) அவர்களுக்குப் பயந்து கொள்ளுங்கள்'' என்று கூறிய சமயத்தில், அவர்களுக்கு (பயம் ஏற்படுவதற்குப் பதிலாக) நம்பிக்கையே அதிகரித்தது. மேலும், ‘‘அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அவன் சிறந்த பொறுப்பேற்பவன் (பாதுகாவலன்)'' என்றும் கூறினார்கள். info
التفاسير: