Vertaling van de betekenissen Edele Qur'an - Tamil-vertaling - Abdoel Hamid Baqwi

Pagina nummer:close

external-link copy
13 : 11

اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰىهُ ؕ— قُلْ فَاْتُوْا بِعَشْرِ سُوَرٍ مِّثْلِهٖ مُفْتَرَیٰتٍ وَّادْعُوْا مَنِ اسْتَطَعْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

13. (நம் தூதர்) இதைப் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றனரா? அவ்வாறாயின், (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: இதைப் போன்ற பத்து அத்தியாயங்களையேனும் நீங்கள் கற்பனை செய்து கொண்டு வாருங்கள், அல்லாஹ்வைத் தவிர உங்களுக்குச் சாத்தியமான அனைவரையும் இதற்காக அழைத்து (உங்களுக்குத் துணையாக)க் கொள்ளுங்கள் - மெய்யாகவே (இது கற்பனை என்று) நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (இவ்வாறு செய்யவும்). info
التفاسير:

external-link copy
14 : 11

فَاِلَّمْ یَسْتَجِیْبُوْا لَكُمْ فَاعْلَمُوْۤا اَنَّمَاۤ اُنْزِلَ بِعِلْمِ اللّٰهِ وَاَنْ لَّاۤ اِلٰهَ اِلَّا هُوَ ۚ— فَهَلْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟

14. ‘‘நீங்கள் (உதவிக்கு) அழைத்த அவர்களாலும் அவ்வாறு செய்ய முடியாவிட்டால், (இது மனித அறிவால் சொல்லப்பட்டதல்ல;) நிச்சயமாக அல்லாஹ்வின் அறிவைக் கொண்டே (அமைக்கப்பட்டு) இறக்கப்பட்டது தான்; அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை என்பதையும் நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள். (இனியேனும்) நீங்கள் (இறைவனுக்கு) முற்றிலும் பணிந்து வழிபடுவீர்களா? info
التفاسير:

external-link copy
15 : 11

مَنْ كَانَ یُرِیْدُ الْحَیٰوةَ الدُّنْیَا وَزِیْنَتَهَا نُوَفِّ اِلَیْهِمْ اَعْمَالَهُمْ فِیْهَا وَهُمْ فِیْهَا لَا یُبْخَسُوْنَ ۟

15. எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டும்) விரும்பினால், அவர்கள் செயலுக்குரிய பலனை இவ்வுலகத்திலேயே நாம் முழுமையாகக் கொடுத்து விடுவோம். அதில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
16 : 11

اُولٰٓىِٕكَ الَّذِیْنَ لَیْسَ لَهُمْ فِی الْاٰخِرَةِ اِلَّا النَّارُ ۖؗ— وَحَبِطَ مَا صَنَعُوْا فِیْهَا وَبٰطِلٌ مَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟

16. எனினும், மறுமையிலோ இவர்களுக்கு (நரக) நெருப்பைத் தவிர வேறொன்று மில்லை; அவர்கள் செய்தவை அனைத்தும் இங்கு அழிந்து விட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே. info
التفاسير:

external-link copy
17 : 11

اَفَمَنْ كَانَ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّهٖ وَیَتْلُوْهُ شَاهِدٌ مِّنْهُ وَمِنْ قَبْلِهٖ كِتٰبُ مُوْسٰۤی اِمَامًا وَّرَحْمَةً ؕ— اُولٰٓىِٕكَ یُؤْمِنُوْنَ بِهٖ ؕ— وَمَنْ یَّكْفُرْ بِهٖ مِنَ الْاَحْزَابِ فَالنَّارُ مَوْعِدُهٗ ۚ— فَلَا تَكُ فِیْ مِرْیَةٍ مِّنْهُ ۗ— اِنَّهُ الْحَقُّ مِنْ رَّبِّكَ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا یُؤْمِنُوْنَ ۟

17. எவர்கள் தங்கள் இறைவனின் (திருக் குர்ஆனுடைய) தெளிவான அறிவைப் பெற்றிருக்கிறார்களோ அவர்களும், எவர்களுக்கு இறைவனால் (‘ஈஸா'வுக்கு) அருளப்பட்டது (-இன்ஜீல்) ஒரு சாட்சியாக இருக்கிறதோ அவர்களும், இன்னும் எவர்களுக்கு இதற்கு முன்னர் அருளப்பட்ட மூஸாவுடைய வேதம் ஒரு வழி காட்டியாகவும் அருளாகவும் இருக்கிறதோ அவர்களும், அவசியம் இவ்வேதத்தையும் நம்பிக்கைக்கொள்வார்கள். (அவர்களுக்குரிய கூலி சொர்க்கத்தில்தான்.) இந்த (மூன்று) வகுப்பாரில் எவர்கள் இதை நிராகரித்தபோதிலும் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட இடம் நரகம்தான். ஆதலால், (நபியே!) நீர் இதில் சிறிதும் சந்தேகிக்க வேண்டாம். நிச்சயமாக இது உமது இறைவனால் அருளப்பட்ட சத்திய (வேத)மே! எனினும், மனிதர்களில் பலர் (இதை) நம்புவதில்லை. info
التفاسير:

external-link copy
18 : 11

وَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا ؕ— اُولٰٓىِٕكَ یُعْرَضُوْنَ عَلٰی رَبِّهِمْ وَیَقُوْلُ الْاَشْهَادُ هٰۤؤُلَآءِ الَّذِیْنَ كَذَبُوْا عَلٰی رَبِّهِمْ ۚ— اَلَا لَعْنَةُ اللّٰهِ عَلَی الظّٰلِمِیْنَ ۟ۙ

18. அல்லாஹ்வின் மீது கற்பனையாகப் பொய் கூறுபவர்களை விட அநியாயக்காரர் யார்? அவர்கள் (மறுமையில்) தங்கள் இறைவன் முன் நிறுத்தப்பட்டு ‘‘இவர்கள்தான் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள்'' என்று சாட்சிகள் (சாட்சியம்) கூறுவார்கள். இந்த அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள். info
التفاسير:

external-link copy
19 : 11

الَّذِیْنَ یَصُدُّوْنَ عَنْ سَبِیْلِ اللّٰهِ وَیَبْغُوْنَهَا عِوَجًا ؕ— وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَ ۟

19. அவர்கள் அல்லாஹ்வின் வழியைத் தடுத்து, அதில் கோணலை(யும் சந்தேகத்தையும்) உண்டு பண்ண விரும்புகிறார்கள். இன்னும் அவர்கள் மறுமையையும் நிராகரிப்பவர்கள்தான். info
التفاسير: