ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
103 : 37

فَلَمَّاۤ اَسْلَمَا وَتَلَّهٗ لِلْجَبِیْنِ ۟ۚ

ஆக, அப்போது அவர்கள் இருவரும் (இறைவனின் கட்டளைக்கு) முற்றிலும் பணிந்தனர். அவர் அவரை (அவருடைய) கன்னத்தின் மீது கீழே சாய்த்தார். info
التفاسير:

external-link copy
104 : 37

وَنَادَیْنٰهُ اَنْ یّٰۤاِبْرٰهِیْمُ ۟ۙ

இன்னும், “இப்ராஹீமே!” என்று நாம் அவரை அழைத்தோம். info
التفاسير:

external-link copy
105 : 37

قَدْ صَدَّقْتَ الرُّءْیَا ۚ— اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟

“திட்டமாக நீர் கனவை உண்மைப்படுத்தினீர். நிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.” info
التفاسير:

external-link copy
106 : 37

اِنَّ هٰذَا لَهُوَ الْبَلٰٓؤُا الْمُبِیْنُ ۟

நிச்சயமாக இதுதான் தெளிவான சோதனையாகும். info
التفاسير:

external-link copy
107 : 37

وَفَدَیْنٰهُ بِذِبْحٍ عَظِیْمٍ ۟

இன்னும், மகத்தான ஒரு பலிப்பிராணியைக் கொண்டு அவரை விடுதலை செய்தோம். info
التفاسير:

external-link copy
108 : 37

وَتَرَكْنَا عَلَیْهِ فِی الْاٰخِرِیْنَ ۟ؗ

இன்னும், பின்னோரில் அவரைப் பற்றி அழகிய பெயரை ஏற்படுத்தினோம். info
التفاسير:

external-link copy
109 : 37

سَلٰمٌ عَلٰۤی اِبْرٰهِیْمَ ۟

இப்ராஹீமுக்கு ஸலாம் உண்டாகட்டும். info
التفاسير:

external-link copy
110 : 37

كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟

இப்படித்தான் நல்லவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம். info
التفاسير:

external-link copy
111 : 37

اِنَّهٗ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِیْنَ ۟

நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர். info
التفاسير:

external-link copy
112 : 37

وَبَشَّرْنٰهُ بِاِسْحٰقَ نَبِیًّا مِّنَ الصّٰلِحِیْنَ ۟

இன்னும், நல்லவர்களில் ஒருவராகவும் நபியாகவும் இருக்கப்போகின்ற இஸ்ஹாக்கைக் கொண்டு நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம். info
التفاسير:

external-link copy
113 : 37

وَبٰرَكْنَا عَلَیْهِ وَعَلٰۤی اِسْحٰقَ ؕ— وَمِنْ ذُرِّیَّتِهِمَا مُحْسِنٌ وَّظَالِمٌ لِّنَفْسِهٖ مُبِیْنٌ ۟۠

அவருக்கும் இஸ்ஹாக்கிற்கும் அருள் வளம் புரிந்தோம். இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நல்லவரும் இருக்கிறார். தனக்கு தெளிவாக தீங்கிழைத்தவரும் இருக்கிறார். info
التفاسير:

external-link copy
114 : 37

وَلَقَدْ مَنَنَّا عَلٰی مُوْسٰی وَهٰرُوْنَ ۟ۚ

திட்டவட்டமாக மூஸாவிற்கும் ஹாரூனுக்கும் அருள்புரிந்தோம். info
التفاسير:

external-link copy
115 : 37

وَنَجَّیْنٰهُمَا وَقَوْمَهُمَا مِنَ الْكَرْبِ الْعَظِیْمِ ۟ۚ

அவ்விருவரையும் அவ்விருவரின் மக்களையும் பெரிய துக்கத்தில் இருந்து பாதுகாத்தோம். info
التفاسير:

external-link copy
116 : 37

وَنَصَرْنٰهُمْ فَكَانُوْا هُمُ الْغٰلِبِیْنَ ۟ۚ

இன்னும், அவர்களுக்கு உதவினோம். ஆகவே, அவர்கள்தான் வெற்றியாளர்களாக ஆகிவிட்டார்கள். info
التفاسير:

external-link copy
117 : 37

وَاٰتَیْنٰهُمَا الْكِتٰبَ الْمُسْتَبِیْنَ ۟ۚ

இன்னும், அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தை கொடுத்தோம். info
التفاسير:

external-link copy
118 : 37

وَهَدَیْنٰهُمَا الصِّرَاطَ الْمُسْتَقِیْمَ ۟ۚ

இன்னும், அவ்விருவரையும் நேரான பாதையில் நேர்வழி நடத்தினோம். info
التفاسير:

external-link copy
119 : 37

وَتَرَكْنَا عَلَیْهِمَا فِی الْاٰخِرِیْنَ ۟ۙۖ

இன்னும், பிற்காலத்தில் வருவோரில் அவ்விருவருக்கும் நற்பெயரை ஏற்படுத்தினோம். info
التفاسير:

external-link copy
120 : 37

سَلٰمٌ عَلٰی مُوْسٰی وَهٰرُوْنَ ۟

மூஸாவிற்கும் ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாகட்டும். info
التفاسير:

external-link copy
121 : 37

اِنَّا كَذٰلِكَ نَجْزِی الْمُحْسِنِیْنَ ۟

நிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம். info
التفاسير:

external-link copy
122 : 37

اِنَّهُمَا مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِیْنَ ۟

நிச்சயமாக அவ்விருவரும் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர்கள். info
التفاسير:

external-link copy
123 : 37

وَاِنَّ اِلْیَاسَ لَمِنَ الْمُرْسَلِیْنَ ۟ؕ

நிச்சயமாக இல்யாஸ் (நமது) தூதர்களில் உள்ளவர். info
التفاسير:

external-link copy
124 : 37

اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَلَا تَتَّقُوْنَ ۟

அவர் தனது மக்களுக்கு, “நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! info
التفاسير:

external-link copy
125 : 37

اَتَدْعُوْنَ بَعْلًا وَّتَذَرُوْنَ اَحْسَنَ الْخَالِقِیْنَ ۟ۙ

‘பஅல்’ சிலையை நீங்கள் வணங்குகிறீர்களா? மிக அழகிய படைப்பாளனை (வணங்குவதை) விட்டுவிடுகிறீர்களா? info
التفاسير:

external-link copy
126 : 37

اللّٰهَ رَبَّكُمْ وَرَبَّ اٰبَآىِٕكُمُ الْاَوَّلِیْنَ ۟

உங்கள் இறைவனான, இன்னும் முன்னோர்களான உங்கள் மூதாதைகளின் இறைவனுமான அல்லாஹ்வை (வணங்குவதை) விட்டுவிடுகிறீர்களா? info
التفاسير: