ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
52 : 37

یَّقُوْلُ ءَاِنَّكَ لَمِنَ الْمُصَدِّقِیْنَ ۟

“நிச்சயமாக நீ (தூதர்களை) உண்மைப்படுத்துபவர்களில் உள்ளவனா?” என்று (உலகில் வாழும்போது என்னிடம்) கூறுவான். info
التفاسير:

external-link copy
53 : 37

ءَاِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَدِیْنُوْنَ ۟

“நாம் இறந்துவிட்டால் (பின்னர்) எலும்புகளாகவும் மண்ணாகவும் மாறி விட்டால், நிச்சயமாக நாம் (நமது செயல்களுக்கு) கூலி கொடுக்கப்படு(வதற்காக எழுப்பப்படு)வோமா?” (என்றும் அவன் கூறுவான்) info
التفاسير:

external-link copy
54 : 37

قَالَ هَلْ اَنْتُمْ مُّطَّلِعُوْنَ ۟

(அந்த நம்பிக்கையாளர்) கூறுவார்: “(நரகத்தில் உள்ளவர்களை) நீங்கள் எட்டிப்பார்க்க முடியுமா?” என்று கூறுவார். info
التفاسير:

external-link copy
55 : 37

فَاطَّلَعَ فَرَاٰهُ فِیْ سَوَآءِ الْجَحِیْمِ ۟

ஆக, (அந்த நம்பிக்கையாளர் நரகத்தில்) எட்டிப்பார்ப்பார். அவர் அவனை நரகத்தின் நடுவில் பார்ப்பார். info
التفاسير:

external-link copy
56 : 37

قَالَ تَاللّٰهِ اِنْ كِدْتَّ لَتُرْدِیْنِ ۟ۙ

(அந்த நம்பிக்கையாளர்) கூறுவார்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக நீ என்னை (வழிகேட்டில் தள்ளி) நாசமாக்கி இருப்பாய்.” info
التفاسير:

external-link copy
57 : 37

وَلَوْلَا نِعْمَةُ رَبِّیْ لَكُنْتُ مِنَ الْمُحْضَرِیْنَ ۟

“என் இறைவனின் (நேர்வழி எனும்) அருட்கொடை (என்னுடன்) இல்லாதிருந்தால் நானும் (நரகத்தில் தண்டனைக்காக) கொண்டுவரப்பட்டவர்களில் ஆகி இருப்பேன்.” info
التفاسير:

external-link copy
58 : 37

اَفَمَا نَحْنُ بِمَیِّتِیْنَ ۟ۙ

“ஆக, (இந்த சொர்க்க வாழ்க்கையில்) நாங்கள் மரணிப்பவர்களாக இல்லையே!” info
التفاسير:

external-link copy
59 : 37

اِلَّا مَوْتَتَنَا الْاُوْلٰی وَمَا نَحْنُ بِمُعَذَّبِیْنَ ۟

“எங்கள் முதல் மரணத்தைத் தவிர (வேறு மரணம் எங்களுக்கு இல்லை). இன்னும் நாங்கள் தண்டனை செய்யப்படுபவர்களாக இல்லை.” info
التفاسير:

external-link copy
60 : 37

اِنَّ هٰذَا لَهُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟

நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும். info
التفاسير:

external-link copy
61 : 37

لِمِثْلِ هٰذَا فَلْیَعْمَلِ الْعٰمِلُوْنَ ۟

(உலக வாழ்க்கையில்) அமல் செய்பவர்கள் இது போன்ற (சொர்க்க பாக்கியத்தை மறுமையில் அடைவ)தற்காக அமல் செய்யட்டும். info
التفاسير:

external-link copy
62 : 37

اَذٰلِكَ خَیْرٌ نُّزُلًا اَمْ شَجَرَةُ الزَّقُّوْمِ ۟

அது (-மேற்கூறப்பட்ட சொர்க்க இன்பங்கள் இறைவனின்) விருந்தோம்பலால் மிகச் சிறந்ததா? அல்லது, ஸக்கூம் என்ற கள்ளி மரமா? info
التفاسير:

external-link copy
63 : 37

اِنَّا جَعَلْنٰهَا فِتْنَةً لِّلظّٰلِمِیْنَ ۟

நிச்சயமாக நாம் அதை இணைவைப்பவர்களுக்கு ஒரு சோதனையாக (தண்டனையாக) ஆக்கி இருக்கிறோம். info
التفاسير:

external-link copy
64 : 37

اِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِیْۤ اَصْلِ الْجَحِیْمِ ۟ۙ

நிச்சயமாக அது நரகத்தின் அடியில் முளைக்கின்ற ஒரு மரமாகும். info
التفاسير:

external-link copy
65 : 37

طَلْعُهَا كَاَنَّهٗ رُءُوْسُ الشَّیٰطِیْنِ ۟

அதன் கனிகள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் (மிக விகாரமாக) இருக்கும். info
التفاسير:

external-link copy
66 : 37

فَاِنَّهُمْ لَاٰكِلُوْنَ مِنْهَا فَمَالِـُٔوْنَ مِنْهَا الْبُطُوْنَ ۟ؕ

ஆக, நிச்சயமாக அவர்கள் அதிலிருந்து சாப்பிடுவார்கள். இன்னும், அதிலிருந்து (தங்கள்) வயிறுகளை நிரப்புவார்கள். info
التفاسير:

external-link copy
67 : 37

ثُمَّ اِنَّ لَهُمْ عَلَیْهَا لَشَوْبًا مِّنْ حَمِیْمٍ ۟ۚ

பிறகு, நிச்சயமாக அவர்களுக்கு அதற்கு மேல் கொதி நீர் கலக்கப்பட்ட (அருவருக்கத்தக்க) பானமும் உண்டு. info
التفاسير:

external-link copy
68 : 37

ثُمَّ اِنَّ مَرْجِعَهُمْ لَاۡاِلَی الْجَحِیْمِ ۟

பிறகு, நிச்சயமாக அவர்களின் மீளுமிடம் நரக நெருப்பின் பக்கம்தான் இருக்கும். info
التفاسير:

external-link copy
69 : 37

اِنَّهُمْ اَلْفَوْا اٰبَآءَهُمْ ضَآلِّیْنَ ۟ۙ

நிச்சயமாக இ(ந்த இணைவைப்ப)வர்கள் தங்கள் மூதாதைகளை வழிகெட்டவர்களாக பெற்றார்கள். info
التفاسير:

external-link copy
70 : 37

فَهُمْ عَلٰۤی اٰثٰرِهِمْ یُهْرَعُوْنَ ۟

ஆக, அவர்களின் அடிச்சுவடுகளில் (கண்மூடித்தனமாக அவர்களை பின்பற்றுவதற்கு) இவர்கள் விரைகிறார்கள். info
التفاسير:

external-link copy
71 : 37

وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ اَكْثَرُ الْاَوَّلِیْنَ ۟ۙ

இவர்களுக்கு முன் முன்னோரில் அதிகமானவர்கள் திட்டவட்டமாக வழி கெட்டுள்ளனர். info
التفاسير:

external-link copy
72 : 37

وَلَقَدْ اَرْسَلْنَا فِیْهِمْ مُّنْذِرِیْنَ ۟

திட்டவட்டமாக அவர்களில் அச்சமூட்டி எச்சரிப்பவர்க(ளாகிய நமது தூதர்)ளை நாம் அனுப்பினோம். info
التفاسير:

external-link copy
73 : 37

فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِیْنَ ۟ۙ

ஆகவே, எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று (நபியே) நீர் பார்ப்பீராக! info
التفاسير:

external-link copy
74 : 37

اِلَّا عِبَادَ اللّٰهِ الْمُخْلَصِیْنَ ۟۠

எனினும், அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்கள் (தண்டனையில் இருந்து) பாதுகாக்கப்படுவார்கள். info
التفاسير:

external-link copy
75 : 37

وَلَقَدْ نَادٰىنَا نُوْحٌ فَلَنِعْمَ الْمُجِیْبُوْنَ ۟ؗۖ

திட்டவட்டமாக (நபி) நூஹ் நம்மை அழைத்தார். ஆக, பதில் தருபவர்களில் நாம் மிகச் சிறந்தவர்கள். info
التفاسير:

external-link copy
76 : 37

وَنَجَّیْنٰهُ وَاَهْلَهٗ مِنَ الْكَرْبِ الْعَظِیْمِ ۟ؗۖ

இன்னும், மிகப் பெரிய துக்கத்தில் இருந்து அவரையும் அவரது குடும்பத்தாரையும் பாதுகாத்தோம். info
التفاسير: