ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
44 : 25

اَمْ تَحْسَبُ اَنَّ اَكْثَرَهُمْ یَسْمَعُوْنَ اَوْ یَعْقِلُوْنَ ؕ— اِنْ هُمْ اِلَّا كَالْاَنْعَامِ بَلْ هُمْ اَضَلُّ سَبِیْلًا ۟۠

நிச்சயமாக அவர்களில் அதிகமானவர்கள் செவிமடுப்பார்கள்; அல்லது, சிந்தித்துப் புரிவார்கள் என்று நீர் எண்ணுகிறீரா? அவர்கள் கால்நடைகளைப் போன்றே தவிர இல்லை. மாறாக, அவர்கள் (அவற்றைவிட) பாதையால் மிகவும் வழி கெட்டவர்கள் ஆவார்கள். info
التفاسير:

external-link copy
45 : 25

اَلَمْ تَرَ اِلٰی رَبِّكَ كَیْفَ مَدَّ الظِّلَّ ۚ— وَلَوْ شَآءَ لَجَعَلَهٗ سَاكِنًا ۚ— ثُمَّ جَعَلْنَا الشَّمْسَ عَلَیْهِ دَلِیْلًا ۟ۙ

(நபியே!) நீர் பார்க்கவில்லையா, உமது இறைவன் எப்படி நிழலை (அதிகாலையிலிருந்து சூரியன் உதிக்கும் வரை) நீட்டுகிறான்? அவன் நாடியிருந்தால் அதை (-நிழலை) நிரந்தரமாக (ஒரே இடத்தில் இருக்கும்படி) ஆக்கியிருப்பான். பிறகு, அதற்கு சூரியனை நாம் ஆதாரமாக ஆக்கினோம். (சூரியன் நகர்வதற்கு ஏற்ப அந்த நிழலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறோம்.) info
التفاسير:

external-link copy
46 : 25

ثُمَّ قَبَضْنٰهُ اِلَیْنَا قَبْضًا یَّسِیْرًا ۟

பிறகு, அதை (-நிழலை) நம் பக்கம் (மறைவாகவும் விரைவாகவும்) இலகுவாக(வும்) கைப்பற்றி விடுகிறோம். info
التفاسير:

external-link copy
47 : 25

وَهُوَ الَّذِیْ جَعَلَ لَكُمُ الَّیْلَ لِبَاسًا وَّالنَّوْمَ سُبَاتًا وَّجَعَلَ النَّهَارَ نُشُوْرًا ۟

இன்னும், அவன்தான் இரவை உங்களுக்கு ஓர் ஆடையாகவும் தூக்கத்தை ஓய்வாகவும் ஆக்கினான். இன்னும், பகலை விழிப்பதற்கும் (உழைத்து வாழ்வாதாரத்தை தேடுவதற்கும்) ஆக்கினான். info
التفاسير:

external-link copy
48 : 25

وَهُوَ الَّذِیْۤ اَرْسَلَ الرِّیٰحَ بُشْرًاۢ بَیْنَ یَدَیْ رَحْمَتِهٖ ۚ— وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً طَهُوْرًا ۟ۙ

அவன்தான் (பல திசைகளிலிருந்து வீசும்) காற்றுகளை (மழை எனும்) தன் அருளுக்கு முன்பாக (மழையின்) நற்செய்தி கூறக்கூடியதாக அனுப்புகிறான். இன்னும், வானத்திலிருந்து மிகவும் சுத்தமான (சுத்தமாக்கக்கூடிய) மழை நீரை நாம் இறக்குகிறோம்.- info
التفاسير:

external-link copy
49 : 25

لِّنُحْیِ بِهٖ بَلْدَةً مَّیْتًا وَّنُسْقِیَهٗ مِمَّا خَلَقْنَاۤ اَنْعَامًا وَّاَنَاسِیَّ كَثِیْرًا ۟

அதன்மூலம் இறந்த பூமியை நாம் உயிர்ப்பிப்பதற்காகவும் நாம் படைத்த படைப்புகளில் பல கால்நடைகளுக்கும் அதிகமான மனிதர்களுக்கும் நாம் அதை புகட்டுவதற்காகவும் (அந்த மழையை பூமியில் பொழிய வைக்கிறோம்). info
التفاسير:

external-link copy
50 : 25

وَلَقَدْ صَرَّفْنٰهُ بَیْنَهُمْ لِیَذَّكَّرُوْا ۖؗ— فَاَبٰۤی اَكْثَرُ النَّاسِ اِلَّا كُفُوْرًا ۟

இன்னும், அதை (-அந்த மழையை) அவர்களுக்கு மத்தியில் நாம் பிரித்(து பரவலாக பல இடங்களில் பொழிய வைத்)தோம், அவர்கள் (அதன் மூலம் என் அருளை சிந்தித்து) நல்லறிவு பெறுவதற்காக. ஆனால், மனிதர்களில் அதிகமானவர்கள் நிராகரிப்பதைத் தவிர (நன்றி செலுத்த) மறுத்து விட்டனர். info
التفاسير:

external-link copy
51 : 25

وَلَوْ شِئْنَا لَبَعَثْنَا فِیْ كُلِّ قَرْیَةٍ نَّذِیْرًا ۟ؗۖ

இன்னும், நாம் நாடியிருந்தால், ஒவ்வொரு ஊரிலும் (தூதர்களில் இருந்து) ஓர் எச்சரிப்பாளரை அனுப்பியிருப்போம். (அதன் மூலம் உமது சுமையை குறைத்து இருப்போம். ஆனால், அப்படி இன்றி உம்மையே உலக மக்கள் எல்லோரையும் எச்சரிக்கின்ற தூதராக ஆக்கியிருக்கிறோம்.) info
التفاسير:

external-link copy
52 : 25

فَلَا تُطِعِ الْكٰفِرِیْنَ وَجَاهِدْهُمْ بِهٖ جِهَادًا كَبِیْرًا ۟

ஆக, (நபியே!) நிராகரிப்பாளர்களுக்கு கீழ்ப்படியாதீர். இன்னும், இ(ந்த வேதத்தை எடுத்துரைப்ப)தன் மூலம் அவர்களிடம் பெரும் போர் செய்வீராக! info
التفاسير:

external-link copy
53 : 25

وَهُوَ الَّذِیْ مَرَجَ الْبَحْرَیْنِ هٰذَا عَذْبٌ فُرَاتٌ وَّهٰذَا مِلْحٌ اُجَاجٌ ۚ— وَجَعَلَ بَیْنَهُمَا بَرْزَخًا وَّحِجْرًا مَّحْجُوْرًا ۟

இன்னும், அவன்தான் இரு கடல்களை இணைத்தான். இது மிக்க மதுரமான இனிப்பு நீராகும். இதுவோ மிக்க உவர்ப்பான உப்பு நீராகும். இன்னும், அவ்விரண்டுக்கும் இடையில் ஒரு திரையையும் (அவ்விரண்டும் சேர்ந்து விடுவதை) முற்றிலும் தடுக்கக்கூடிய ஒரு தடுப்பையும் அவன் ஆக்கினான். info
التفاسير:

external-link copy
54 : 25

وَهُوَ الَّذِیْ خَلَقَ مِنَ الْمَآءِ بَشَرًا فَجَعَلَهٗ نَسَبًا وَّصِهْرًا ؕ— وَكَانَ رَبُّكَ قَدِیْرًا ۟

இன்னும், அவன்தான் (இந்திரியம் எனும்) நீரிலிருந்து மனிதனைப் படைத்தான். ஆக, அவனை இரத்த உறவுகளை உடையவனாகவும் திருமண உறவுகளை உடையவனாகவும் ஆக்கினான். இன்னும் உமது இறைவன் பேராற்றலுடையவனாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
55 : 25

وَیَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَنْفَعُهُمْ وَلَا یَضُرُّهُمْ ؕ— وَكَانَ الْكَافِرُ عَلٰی رَبِّهٖ ظَهِیْرًا ۟

அவர்கள் அல்லாஹ்வை அன்றி (- அவனை வணங்காமல்) தங்களுக்கு எதையும் பலனளிக்காததை, இன்னும், தங்களுக்கு எதையும் தீங்கிழைக்காததை வணங்குகிறார்கள். இன்னும், நிராகரிப்பவன் தன் இறைவனுக்கு எதிராக (ஷைத்தானை) ஆதரிக்கக் கூடியவனாக (சிலைகளுக்கு உதவக்கூடியவனாக) இருக்கிறான். info
التفاسير: