ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
12 : 25

اِذَا رَاَتْهُمْ مِّنْ مَّكَانٍ بَعِیْدٍ سَمِعُوْا لَهَا تَغَیُّظًا وَّزَفِیْرًا ۟

அது அவர்களை தூரமான இடத்திலிருந்து பார்த்தால் அதனுடைய (-நெருப்பு பற்றி எரியும் போது வெளிப்படும்) சத்தத்தையும் இரைச்சலையும் அவர்கள் செவியுறுவார்கள். info
التفاسير:

external-link copy
13 : 25

وَاِذَاۤ اُلْقُوْا مِنْهَا مَكَانًا ضَیِّقًا مُّقَرَّنِیْنَ دَعَوْا هُنَالِكَ ثُبُوْرًا ۟ؕ

இன்னும், அவர்கள் அதில் நெருக்கடியான இடத்தில் (சங்கிலிகளால் கைகள் கழுத்துகளுடன்) கட்டப்பட்டவர்களாக போடப்பட்டால் அங்கு, “(எங்கள்) கைசேதமே!” என்று (தங்களின் அழிவையும் நாசத்தையும் கூவி) அழைப்பார்கள். (உலகிற்கு திரும்ப செல்ல வேண்டுமே! அல்லது, தாங்கள் அழிந்து விடவேண்டுமே என்று சத்தமிடுவார்கள்.) info
التفاسير:

external-link copy
14 : 25

لَا تَدْعُوا الْیَوْمَ ثُبُوْرًا وَّاحِدًا وَّادْعُوْا ثُبُوْرًا كَثِیْرًا ۟

இன்று, கைசேதமே! என ஒரு முறை அழைக்காதீர்கள். கைசேதமே! என்று பல முறை அழையுங்கள். info
التفاسير:

external-link copy
15 : 25

قُلْ اَذٰلِكَ خَیْرٌ اَمْ جَنَّةُ الْخُلْدِ الَّتِیْ وُعِدَ الْمُتَّقُوْنَ ؕ— كَانَتْ لَهُمْ جَزَآءً وَّمَصِیْرًا ۟

(நபியே!) நீர் கேட்பீராக! அது (-நரகம்) சிறந்ததா? அல்லது, இறை அச்சமுள்ளவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஜன்னதுல் குல்து (என்ற நிரந்தர சொர்க்கம்) சிறந்ததா? அது அவர்களுக்கு கூலியாகவும் மீளுமிடமாகவும் இருக்கும். info
التفاسير:

external-link copy
16 : 25

لَهُمْ فِیْهَا مَا یَشَآءُوْنَ خٰلِدِیْنَ ؕ— كَانَ عَلٰی رَبِّكَ وَعْدًا مَّسْـُٔوْلًا ۟

அவர்கள் நாடுவதெல்லாம் அவர்களுக்கு அதில் கிடைக்கும், (அவர்கள் அதில்) நிரந்தரமாக இருப்பார்கள். இது, உமது இறைவன் மீது (அவனது நல்லடியார்களால்) வேண்டப்பட்ட வாக்காக இருக்கிறது. info
التفاسير:

external-link copy
17 : 25

وَیَوْمَ یَحْشُرُهُمْ وَمَا یَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ فَیَقُوْلُ ءَاَنْتُمْ اَضْلَلْتُمْ عِبَادِیْ هٰۤؤُلَآءِ اَمْ هُمْ ضَلُّوا السَّبِیْلَ ۟ؕ

இன்னும், அவன் அவர்களையும் அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கியவர்களையும் ஒன்று திரட்டும் நாளில், “நீங்கள்தான் எனது (இந்த) அடியார்களை வழிகெடுத்தீர்களா? அல்லது அவர்கள் (நேரான) பாதையை விட்டு தாமாக வழிகெட்டனரா?” என்று (இறைவன்) கேட்பான். info
التفاسير:

external-link copy
18 : 25

قَالُوْا سُبْحٰنَكَ مَا كَانَ یَنْۢبَغِیْ لَنَاۤ اَنْ نَّتَّخِذَ مِنْ دُوْنِكَ مِنْ اَوْلِیَآءَ وَلٰكِنْ مَّتَّعْتَهُمْ وَاٰبَآءَهُمْ حَتّٰی نَسُوا الذِّكْرَ ۚ— وَكَانُوْا قَوْمًا بُوْرًا ۟

அவர்கள் (-வானவர்களும் ஈஸாவும் உஸைரும்) கூறுவார்கள்: “நீ மிகப் பரிசுத்தமானவன். உன்னை அன்றி பாதுகாவலர்களை (தெய்வங்களை) எடுத்துக் கொள்வது எங்களுக்கு தகுதியானதாக (சரியானதாக) இல்லை. எனினும், நீ அவர்களுக்கும் அவர்களுடைய மூதாதைகளுக்கும் (உலகத்தில்) வசதியான வாழ்வளித்தாய். இறுதியாக, அவர்கள் (உனது) அறிவுரையை மறந்தனர். இன்னும், அழிந்து போகும் மக்களாக ஆகிவிட்டனர்.” info
التفاسير:

external-link copy
19 : 25

فَقَدْ كَذَّبُوْكُمْ بِمَا تَقُوْلُوْنَ ۙ— فَمَا تَسْتَطِیْعُوْنَ صَرْفًا وَّلَا نَصْرًا ۚ— وَمَنْ یَّظْلِمْ مِّنْكُمْ نُذِقْهُ عَذَابًا كَبِیْرًا ۟

ஆக, திட்டமாக அவர்கள் (-வானவர்கள், நபிமார்கள் மற்றும் நல்லவர்கள்) நீங்கள் கூறியதில் உங்களை பொய்ப்பித்து விட்டனர். ஆகவே, நீங்கள் (அல்லாஹ்வின் தண்டனையை உங்களை விட்டு) திருப்பி விடுவதற்கோ (உங்களுக்கு) உதவுவதற்கோ சக்தி பெறமாட்டீர்கள். இன்னும், உங்களில் யார் (அல்லாஹ்விற்கு இணைவைத்து வணங்கி தனக்குத்தானே) அநீதி இழைத்தாரோ அவருக்கு பெரிய தண்டனையை நாம் சுவைக்க வைப்போம். info
التفاسير:

external-link copy
20 : 25

وَمَاۤ اَرْسَلْنَا قَبْلَكَ مِنَ الْمُرْسَلِیْنَ اِلَّاۤ اِنَّهُمْ لَیَاْكُلُوْنَ الطَّعَامَ وَیَمْشُوْنَ فِی الْاَسْوَاقِ ؕ— وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً ؕ— اَتَصْبِرُوْنَ ۚ— وَكَانَ رَبُّكَ بَصِیْرًا ۟۠

உமக்கு முன்னர் தூதர்களில் எவரையும் நாம் அனுப்பவில்லை, நிச்சயமாக அவர்கள் உணவு உண்பவர்களாக, கடை வீதிகளில் உலாவுபவர்களாக இருந்தே தவிர. இன்னும், உங்களில் சிலரை சிலருக்கு சோதனையாக ஆக்கினோம். நீங்கள் பொறு(மையாக இரு)ப்பீர்களா? மேலும், உமது இறைவன் உற்று நோக்குபவனாக (அனைத்தையும் கூர்ந்து பார்ப்பவனாக) இருக்கிறான். (ஆகவே அவனது பார்வையை விட்டு எதுவும் தவறி விடாது.) info
التفاسير: