ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
33 : 25

وَلَا یَاْتُوْنَكَ بِمَثَلٍ اِلَّا جِئْنٰكَ بِالْحَقِّ وَاَحْسَنَ تَفْسِیْرًا ۟ؕ

(நபியே!) அவர்கள் உமக்கு எந்த ஒரு (கெட்ட) தன்மையையும் கூறமாட்டார்கள், (அதை முறிப்பதற்கு) சத்தியத்தையும் மிக அழகான விளக்கத்தையும் உமக்கு நாம் கூறியே தவிர. info
التفاسير:

external-link copy
34 : 25

اَلَّذِیْنَ یُحْشَرُوْنَ عَلٰی وُجُوْهِهِمْ اِلٰی جَهَنَّمَ ۙ— اُولٰٓىِٕكَ شَرٌّ مَّكَانًا وَّاَضَلُّ سَبِیْلًا ۟۠

எவர்கள் தங்கள் முகங்கள் மீது நரகத்தின் பக்கம் ஒன்று திரட்டப்படுவார்களோ அவர்கள்தான் தங்குமிடத்தால் மிக கெட்டவர்கள்; இன்னும், பாதையால் மிக வழிதவறியவர்கள் ஆவார்கள். info
التفاسير:

external-link copy
35 : 25

وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَجَعَلْنَا مَعَهٗۤ اَخَاهُ هٰرُوْنَ وَزِیْرًا ۟ۚۖ

திட்டவட்டமாக மூஸாவுக்கு வேதத்தை கொடுத்தோம். இன்னும், அவருடன் அவரது சகோதரர் ஹாரூனை (அவருக்கு) உதவியாளராக ஆக்கினோம். info
التفاسير:

external-link copy
36 : 25

فَقُلْنَا اذْهَبَاۤ اِلَی الْقَوْمِ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا ؕ— فَدَمَّرْنٰهُمْ تَدْمِیْرًا ۟ؕ

ஆக, நாம் கூறினோம்: “நீங்கள் இருவரும் நமது அத்தாட்சிகளை பொய்ப்பித்த மக்களிடம் செல்லுங்கள்.” (அம்மக்கள் அவ்விருவரையும் நிராகரித்து விட்டனர்.) ஆகவே, நாம் அவர்களை முற்றிலும் தரை மட்டமாக அழித்து விட்டோம். info
التفاسير:

external-link copy
37 : 25

وَقَوْمَ نُوْحٍ لَّمَّا كَذَّبُوا الرُّسُلَ اَغْرَقْنٰهُمْ وَجَعَلْنٰهُمْ لِلنَّاسِ اٰیَةً ؕ— وَاَعْتَدْنَا لِلظّٰلِمِیْنَ عَذَابًا اَلِیْمًا ۟ۚۙ

இன்னும், நூஹ் உடைய மக்களை, அவர்கள் (நமது) தூதர்களை பொய்ப்பித்தபோது அவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்தோம். இன்னும், அவர்களை மக்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்கினோம். இன்னும், வலி தரும் தண்டனையை அநியாயக்காரர்களுக்கு நாம் தயார்படுத்தி இருக்கிறோம். info
التفاسير:

external-link copy
38 : 25

وَّعَادًا وَّثَمُوْدَاۡ وَاَصْحٰبَ الرَّسِّ وَقُرُوْنًا بَیْنَ ذٰلِكَ كَثِیْرًا ۟

இன்னும் ஆது, ஸமூது, கிணறு வாசிகள், இன்னும், இவர்களுக்கிடையில் (வாழ்ந்த) பல தலைமுறையினரை (நாம் தரைமட்டமாக அழித்துள்ளோம்). info
التفاسير:

external-link copy
39 : 25

وَكُلًّا ضَرَبْنَا لَهُ الْاَمْثَالَ ؗ— وَكُلًّا تَبَّرْنَا تَتْبِیْرًا ۟

இன்னும், (இவர்களில்) ஒவ்வொருவருக்கும் (அவர்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயம் அழிக்கப்பட்ட) உதாரணங்களை நாம் விவரித்தோம். (ஆனால், அவர்கள் திருந்தவில்லை. ஆகவே, அவர்கள்) எல்லோரையும் நாம் அடியோடு அழித்து விட்டோம். info
التفاسير:

external-link copy
40 : 25

وَلَقَدْ اَتَوْا عَلَی الْقَرْیَةِ الَّتِیْۤ اُمْطِرَتْ مَطَرَ السَّوْءِ ؕ— اَفَلَمْ یَكُوْنُوْا یَرَوْنَهَا ۚ— بَلْ كَانُوْا لَا یَرْجُوْنَ نُشُوْرًا ۟

திட்டவட்டமாக மிக மோசமான (கல் மழையால்) மழை பொழியப்பட்ட (லூத் நபியுடைய சமுதாயம் வாழ்ந்த) ஊரின் அருகில் அவர்கள் (சென்று) வந்திருக்கிறார்கள். ஆக, அதை அவர்கள் பார்த்திருக்கவில்லையா? மாறாக, அவர்கள் (மறுமையில்) எழுப்பப்படுவதை எதிர்ப்பார்க்காதவர்களாக (-நம்பாதவர்களாக) இருந்தனர். info
التفاسير:

external-link copy
41 : 25

وَاِذَا رَاَوْكَ اِنْ یَّتَّخِذُوْنَكَ اِلَّا هُزُوًا ؕ— اَهٰذَا الَّذِیْ بَعَثَ اللّٰهُ رَسُوْلًا ۟

அவர்கள் உம்மைப் பார்த்தால் “இவரையா அல்லாஹ் தூதராக அனுப்பினான்?” என்று கூறி உம்மை கேலி செய்யாமல் இருக்க மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
42 : 25

اِنْ كَادَ لَیُضِلُّنَا عَنْ اٰلِهَتِنَا لَوْلَاۤ اَنْ صَبَرْنَا عَلَیْهَا ؕ— وَسَوْفَ یَعْلَمُوْنَ حِیْنَ یَرَوْنَ الْعَذَابَ مَنْ اَضَلُّ سَبِیْلًا ۟

“இவர் நமது தெய்வங்களை விட்டு நம்மை நிச்சயமாக வழி கெடுத்திருப்பார், நாம் அவற்றின் மீது உறுதியாக இருந்திருக்கவில்லை என்றால்” (என்றும் அவர்கள் கூறுகின்றனர்). அவர்கள் (நமது) தண்டனையை பார்க்கும் போது, “மார்க்கத்தால் மிகவும் வழிகெட்டவர் யார்” என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள். info
التفاسير:

external-link copy
43 : 25

اَرَءَیْتَ مَنِ اتَّخَذَ اِلٰهَهٗ هَوٰىهُ ؕ— اَفَاَنْتَ تَكُوْنُ عَلَیْهِ وَكِیْلًا ۟ۙ

தனது கடவுளாக தனது மனஇச்சையை ஆக்கிக் கொண்டவனை நீர் பார்த்தீரா? அவனுக்கு நீர் பொறுப்பாளராக ஆகுவீரா? info
التفاسير: