クルアーンの対訳 - タミル語対訳 - Abdul-Hamid Bakavij

ページ番号:close

external-link copy
203 : 2

وَاذْكُرُوا اللّٰهَ فِیْۤ اَیَّامٍ مَّعْدُوْدٰتٍ ؕ— فَمَنْ تَعَجَّلَ فِیْ یَوْمَیْنِ فَلَاۤ اِثْمَ عَلَیْهِ ۚ— وَمَنْ تَاَخَّرَ فَلَاۤ اِثْمَ عَلَیْهِ ۙ— لِمَنِ اتَّقٰی ؕ— وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْۤا اَنَّكُمْ اِلَیْهِ تُحْشَرُوْنَ ۟

203. (நம்பிக்கையாளர்களே! துல்ஹஜ்ஜூ மாதத்தில்) குறிப்பிடப்பட்ட (மூன்று) நாள்கள்வரை (‘மினா' என்னும் இடத்தில் தாமதித்திருந்து) அல்லாஹ்வை ‘திக்ரு' செய்யுங்கள். ஆனால், எவரேனும் இரண்டாம் நாளில் அவசரப்பட்டு(ப் புறப்பட்டு) விட்டால் அவர் மீது குற்றமில்லை. எவரேனும் (மூன்று நாள்களுக்குப்) பிற்பட்(டுப் புறப்பட்)டால் அவர் மீதும் குற்றமில்லை. அவர் இறையச்சமுடையவராக (இருந்து ஹஜ்ஜூடைய காலத்தில் தடுக்கப்பட்டவற்றிலிருந்து விலகி) இருந்தால் (மட்டும்) போதுமானது. ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்விடமே (நியாயத் தீர்ப்புக்கு எழுப்பிக்) கொண்டு வரப்படுவீர்கள் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள்! info
التفاسير:

external-link copy
204 : 2

وَمِنَ النَّاسِ مَنْ یُّعْجِبُكَ قَوْلُهٗ فِی الْحَیٰوةِ الدُّنْیَا وَیُشْهِدُ اللّٰهَ عَلٰی مَا فِیْ قَلْبِهٖ ۙ— وَهُوَ اَلَدُّ الْخِصَامِ ۟

204. (நபியே! உம்மிடம்) இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி(ப் பேசும் பொழுது) தன் (சாதுரியமான) வார்த்தையைக் கொண்டு உம்மை ஆச்சரியத்திற்குள்ளாக்கக்கூடிய ஒருவன் அம்மனிதர்களில் உண்டு. அவன் (உம் மீது அன்பு கொண்டிருப்பதாகக் கூறி) தன் மனதில் உள்ளவற்றிற்கு (சத்தியம் செய்து) அல்லாஹ்வை சாட்சி ஆக்குவான். (உண்மையில்) அவன்தான் (உமக்குக்) கொடிய எதிரியாவான். info
التفاسير:

external-link copy
205 : 2

وَاِذَا تَوَلّٰی سَعٰی فِی الْاَرْضِ لِیُفْسِدَ فِیْهَا وَیُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ ؕ— وَاللّٰهُ لَا یُحِبُّ الْفَسَادَ ۟

205. அவன் (உம்மிடமிருந்து) விலகினாலோ, பூமியில் விஷமம் செய்து (உங்கள்) விவசாயத்தையும் கால்நடைகளையும் அழித்துவிட முயற்சி செய்கிறான். விஷமத்தை அல்லாஹ் விரும்புவதில்லை. info
التفاسير:

external-link copy
206 : 2

وَاِذَا قِیْلَ لَهُ اتَّقِ اللّٰهَ اَخَذَتْهُ الْعِزَّةُ بِالْاِثْمِ فَحَسْبُهٗ جَهَنَّمُ ؕ— وَلَبِئْسَ الْمِهَادُ ۟

206. தவிர, ‘‘நீ அல்லாஹ்வுக்குப் பயந்துகொள். (விஷமம் செய்யாதே)'' என அவனுக்குக் கூறப்பட்டால் (அவனுடைய) பெருமை அவனை (விஷமம் செய்து) பாவத்தைச் செய்யும்படியே (இழுத்துப்) பிடித்துக்கொள்கிறது. ஆகவே, அவனுக்கு நரகமே தகுதியாகும். நிச்சயமாக (அது) தங்குமிடங்களில் மிகக் கெட்டது. info
التفاسير:

external-link copy
207 : 2

وَمِنَ النَّاسِ مَنْ یَّشْرِیْ نَفْسَهُ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ ؕ— وَاللّٰهُ رَءُوْفٌۢ بِالْعِبَادِ ۟

207. அல்லாஹ்வின் (திருப்)பொருத்தத்தைப் பெறுவதற்காகத் தன் உயிரையே தியாகம் செய்யக்கூடியவர்களும் மனிதர்களில் உண்டு. அல்லாஹ் (இத்தகைய) அடியார்கள்மீது மிகவும் இறக்கமுடையவன் . info
التفاسير:

external-link copy
208 : 2

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِی السِّلْمِ كَآفَّةً ۪— وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِ ؕ— اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟

208. நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்.) இஸ்லாமில் முற்றிலும் நுழைந்து விடுங்கள். (இதைத் தடை செய்யும்) ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். info
التفاسير:

external-link copy
209 : 2

فَاِنْ زَلَلْتُمْ مِّنْ بَعْدِ مَا جَآءَتْكُمُ الْبَیِّنٰتُ فَاعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ عَزِیْزٌ حَكِیْمٌ ۟

209. (மனிதர்களே! சந்தேகத்திற்கிடமில்லாத) தெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் (இஸ்லாமில் உறுதியாக இல்லாமல்) நழுவி விடுவீர்களானால் (உங்களைத் தண்டிப்பதில்) நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும் (உங்களை எவ்விதம் நடத்த வேண்டும் என்பதை நன்கறிந்த) நுண்ணறிவுடையவனும் ஆவான் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். info
التفاسير:

external-link copy
210 : 2

هَلْ یَنْظُرُوْنَ اِلَّاۤ اَنْ یَّاْتِیَهُمُ اللّٰهُ فِیْ ظُلَلٍ مِّنَ الْغَمَامِ وَالْمَلٰٓىِٕكَةُ وَقُضِیَ الْاَمْرُ ؕ— وَاِلَی اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ ۟۠

210. (நபியே! இவ்வளவு தெளிவான வசனங்களை நிராகரிக்கின்ற அவர்கள்) அல்லாஹ்வும் வானவர்களும் (வெண்) மேகத்தின் நிழலில் அவர்களிடம் வந்து (அவர்களை அழித்து) அவர்களின் வேலையை முடிப்பதைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரோ? (அவர்களுடைய) எல்லா விஷயங்களும் (மறுமையில்) அல்லாஹ்விடமே (விசாரணைக்குக்) கொண்டுவரப்படும். info
التفاسير: