クルアーンの対訳 - タミル語対訳 - Abdul-Hamid Bakavij

ページ番号: 3:2 close

external-link copy
17 : 2

مَثَلُهُمْ كَمَثَلِ الَّذِی اسْتَوْقَدَ نَارًا ۚ— فَلَمَّاۤ اَضَآءَتْ مَا حَوْلَهٗ ذَهَبَ اللّٰهُ بِنُوْرِهِمْ وَتَرَكَهُمْ فِیْ ظُلُمٰتٍ لَّا یُبْصِرُوْنَ ۟

17. இவர்களுடைய உதாரணம் ஓர் உதாரணத்தை ஒத்திருக்கிறது. (அதாவது அபாயகரமான காட்டில், காரிருளில் அகப்பட்டுக் கொண்டவர்களுக்கு வழியை அறிவிப்பதற்காக) ஒருவர் தீயை மூட்டி (அதனால்) அவரைச் சூழ ஒளி ஏற்பட்ட சமயத்தில் (அவர்களுடைய தீய செயல்களின் காரணமாக) அல்லாஹ் அவர்களுடைய (பார்வை) ஒளியைப் போக்கி பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான். info
التفاسير:

external-link copy
18 : 2

صُمٌّۢ بُكْمٌ عُمْیٌ فَهُمْ لَا یَرْجِعُوْنَ ۟ۙ

18. (அத்துடன் இவர்கள்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கிறார்கள். ஆதலால், இவர்கள் (அபாயகரமான இந்நிலையிலிருந்து) மீளவே மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
19 : 2

اَوْ كَصَیِّبٍ مِّنَ السَّمَآءِ فِیْهِ ظُلُمٰتٌ وَّرَعْدٌ وَّبَرْقٌ ۚ— یَجْعَلُوْنَ اَصَابِعَهُمْ فِیْۤ اٰذَانِهِمْ مِّنَ الصَّوَاعِقِ حَذَرَ الْمَوْتِ ؕ— وَاللّٰهُ مُحِیْطٌ بِالْكٰفِرِیْنَ ۟

19. அல்லது (இவர்களுடைய உதாரணம்:) அடர்ந்த இருளும், இடியும், மின்னலும் கொண்ட மேகம் பொழியும் மழையில் அகப்பட்டுக் கொண்ட(வர்களின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. இவ்வாறு அகப்பட்டுக் கொண்ட இ)வர்கள் இடி முழக்கங்களால் மரணத்திற்குப் பயந்து தங்கள் விரல்களைத் தங்கள் காதுகளில் நுழைத்து (அடைத்து)க் கொள்கின்றனர். நிராகரிக்கும் இவர்களை அல்லாஹ் (எப்பொழுதும்) சூழ்ந்திருக்கிறான். info
التفاسير:

external-link copy
20 : 2

یَكَادُ الْبَرْقُ یَخْطَفُ اَبْصَارَهُمْ ؕ— كُلَّمَاۤ اَضَآءَ لَهُمْ مَّشَوْا فِیْهِ ۙۗ— وَاِذَاۤ اَظْلَمَ عَلَیْهِمْ قَامُوْا ؕ— وَلَوْ شَآءَ اللّٰهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَاَبْصَارِهِمْ ؕ— اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟۠

20. (தவிர) அந்த மின்னல் இவர்களின் பார்வையைப் பறிக்கப் பார்க்கிறது. அது இவர்களுக்கு வெளிச்சம் தரும்போதெல்லாம் அ(ந்த வெளிச்சத்)தில் நடக்(க விரும்பு)கிறார்கள். (ஆனால், அம்மின்னல் மறைந்து) அவர்களை இருள் சூழ்ந்துகொண்டால் (வழி தெரியாது திகைத்து) நின்று விடுகிறார்கள். இன்னும் அல்லாஹ் விரும்பினால் இவர்களுடைய கேள்விப் புலனையும் பார்வையையும் போக்கிவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் (எவ்விதமும் செய்ய) பேராற்றலுடையவன் ஆவான். info
التفاسير:

external-link copy
21 : 2

یٰۤاَیُّهَا النَّاسُ اعْبُدُوْا رَبَّكُمُ الَّذِیْ خَلَقَكُمْ وَالَّذِیْنَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَ ۟ۙ

21. மனிதர்களே! உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் இறை அச்சமுடையவர்களாக ஆகலாம். info
التفاسير:

external-link copy
22 : 2

الَّذِیْ جَعَلَ لَكُمُ الْاَرْضَ فِرَاشًا وَّالسَّمَآءَ بِنَآءً ۪— وَّاَنْزَلَ مِنَ السَّمَآءِ مَآءً فَاَخْرَجَ بِهٖ مِنَ الثَّمَرٰتِ رِزْقًا لَّكُمْ ۚ— فَلَا تَجْعَلُوْا لِلّٰهِ اَنْدَادًا وَّاَنْتُمْ تَعْلَمُوْنَ ۟

22. அவனே பூமியை நீங்கள் வசிக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்து, அதைக் கொண்டு (நீங்கள்) புசிக்கக்கூடிய கனிவர்க்கங்களையும் உங்களுக்கு வெளியாக்குகிறான். ஆகவே, (இவற்றையெல்லாம்) நீங்கள் தெளிவாக அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு இணைகளை ஆக்காதீர்கள். info
التفاسير:

external-link copy
23 : 2

وَاِنْ كُنْتُمْ فِیْ رَیْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلٰی عَبْدِنَا فَاْتُوْا بِسُوْرَةٍ مِّنْ مِّثْلِهٖ ۪— وَادْعُوْا شُهَدَآءَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

23. நாம் (நம் தூதர் முஹம்மது என்னும்) நம் அடியாருக்கு இறக்கிய இ(வ்வேதத்)தில் நீங்கள் சந்தேகப்பட்டு (இது அல்லாஹ்வினால் அருளப்பட்டதல்ல என்று கூறுகின்ற) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வைத் தவிர உங்களை ஆமோதிப்பவர்களையும் (திறமையாளர்களையும் உதவியாளர்களையும்) நீங்கள் அழைத்து(ச் சேர்த்து)க்கொண்டு இதைப் போன்ற ஓர் அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டுவாருங்கள். info
التفاسير:

external-link copy
24 : 2

فَاِنْ لَّمْ تَفْعَلُوْا وَلَنْ تَفْعَلُوْا فَاتَّقُوا النَّارَ الَّتِیْ وَقُوْدُهَا النَّاسُ وَالْحِجَارَةُ ۖۚ— اُعِدَّتْ لِلْكٰفِرِیْنَ ۟

24. நீங்கள் அவ்விதம் (கொண்டுவர) இயலாது போனால் - உங்களால் நிச்சயம் அவ்வாறு செய்ய முடியாது - மனிதர்களும் கற்களும் இரையாகின்ற (நரக) நெருப்புக்குப் பயந்து கொள்ளுங்கள். அது நிராகரிப்பவர்களுக்கென தயார் செய்யப்பட்டுள்ளது. info
التفاسير: