Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar da harshan Tamel - Umar Sharif

Lambar shafi:close

external-link copy
6 : 22

ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ وَاَنَّهٗ یُحْیِ الْمَوْتٰی وَاَنَّهٗ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟ۙ

இ(வ்வாறு அல்லாஹ்வின் வல்லமை விவரிக்கப்பட்ட)து ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன்; நிச்சயமாக அவன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; நிச்சயமாக அவன்தான் எல்லா பொருட்கள் மீதும் பேராற்றல் உள்ளவனாவான்; info
التفاسير:

external-link copy
7 : 22

وَّاَنَّ السَّاعَةَ اٰتِیَةٌ لَّا رَیْبَ فِیْهَا ۙ— وَاَنَّ اللّٰهَ یَبْعَثُ مَنْ فِی الْقُبُوْرِ ۟

இன்னும், நிச்சயமாக மறுமை நிகழும். அதில் அறவே சந்தேகம் இல்லை; மேலும், நிச்சயமாக அல்லாஹ், புதைக்குழிகளில் உள்ளவர்களை எழுப்புவான் (என்பதை நீங்கள் தெளிவாக அறிவதற்காக ஆகும்). info
التفاسير:

external-link copy
8 : 22

وَمِنَ النَّاسِ مَنْ یُّجَادِلُ فِی اللّٰهِ بِغَیْرِ عِلْمٍ وَّلَا هُدًی وَّلَا كِتٰبٍ مُّنِیْرٍ ۟ۙ

எவ்வித கல்வி அறிவுமில்லாமலும் நேர்வழி இல்லாமலும் (தனது வாதத்தை) வெளிப்படுத்தக்கூடிய (இறை)வேதம் (தன்னிடம்) இல்லாமலும் அல்லாஹ்வின் விஷயத்தில் தர்க்கிப்பவர்கள் மனிதர்களில் இருக்கிறார். info
التفاسير:

external-link copy
9 : 22

ثَانِیَ عِطْفِهٖ لِیُضِلَّ عَنْ سَبِیْلِ اللّٰهِ ؕ— لَهٗ فِی الدُّنْیَا خِزْیٌ وَّنُذِیْقُهٗ یَوْمَ الْقِیٰمَةِ عَذَابَ الْحَرِیْقِ ۟

(பெருமையுடன்) தனது கழுத்தைத் திருப்பிய(வனாக, இன்னும் புறக்கணித்த)வனாக அல்லாஹ்வின் மார்க்கத்திலிருந்து (நம்பிக்கையாளர்களை) தடுப்பதற்காக (அல்லாஹ்வின் விஷயத்தில் அவன் உங்களிடம் தர்க்கிக்கிறான்). அவனுக்கு இவ்வுலகத்தில் கேவலம் (நிறைந்த தண்டனை) உண்டு. இன்னும், மறுமை நாளில் எரித்து பொசுக்கக்கூடிய தண்டனையை நாம் அவனுக்கு சுவைக்க செய்வோம். info
التفاسير:

external-link copy
10 : 22

ذٰلِكَ بِمَا قَدَّمَتْ یَدٰكَ وَاَنَّ اللّٰهَ لَیْسَ بِظَلَّامٍ لِّلْعَبِیْدِ ۟۠

அ(ந்த தண்டனையான)து, உனது கரங்கள் எதை முற்படுத்தியதோ அ(ந்)த (பாவங்களி)ன் காரணத்தினாலும், நிச்சயம் அல்லாஹ் அடியார்களுக்கு அநியாயம் செய்பவன் இல்லை என்ற காரணத்தினாலும் ஆகும். info
التفاسير:

external-link copy
11 : 22

وَمِنَ النَّاسِ مَنْ یَّعْبُدُ اللّٰهَ عَلٰی حَرْفٍ ۚ— فَاِنْ اَصَابَهٗ خَیْرُ ١طْمَاَنَّ بِهٖ ۚ— وَاِنْ اَصَابَتْهُ فِتْنَةُ ١نْقَلَبَ عَلٰی وَجْهِهٖ ۫ۚ— خَسِرَ الدُّنْیَا وَالْاٰخِرَةَ ؕ— ذٰلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِیْنُ ۟

இன்னும், சந்தேகத்துடன் அல்லாஹ்வை வணங்குபவரும் மக்களில் இருக்கிறார். ஆக, அவருக்கு செல்வம் கிடைத்தால் அதனால் அவர் திருப்தியடைகிறார். இன்னும், அவருக்கு சோதனை ஏற்பட்டால் தனது (நிராகரிப்பின்) முகத்தின் மீதே அவர் திரும்பி விடுகிறார். அவர் இவ்வுலகிலும் மறு உலகிலும் நஷ்டமடைந்து விட்டார். இதுதான் தெளிவான (பெரிய) நஷ்டமாகும். info
التفاسير:

external-link copy
12 : 22

یَدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَضُرُّهٗ وَمَا لَا یَنْفَعُهٗ ؕ— ذٰلِكَ هُوَ الضَّلٰلُ الْبَعِیْدُ ۟ۚ

அவர் (இஸ்லாமை விட்டு வெளியேறி விடுகிறார். இன்னும், அவரோ) அல்லாஹ்வை அழைக்காமல், தனக்கு தீங்கிழைக்காததை, தனக்கு நன்மை செய்யாததை (-சிலைகளை) அழைக்கிறார். இதுதான் மிக தூரமான வழிகேடாகும். info
التفاسير:

external-link copy
13 : 22

یَدْعُوْا لَمَنْ ضَرُّهٗۤ اَقْرَبُ مِنْ نَّفْعِهٖ ؕ— لَبِئْسَ الْمَوْلٰی وَلَبِئْسَ الْعَشِیْرُ ۟

யாருடைய நன்மையைவிட அவருடைய தீமைதான் மிக சமீபமாக இருக்கிறதோ அவரைத்தான் அவர் அழைக்கிறார். (சிலைகளை வணங்கக்கூடிய) அவர் (நம்பிக்கையாளருக்கு கொள்கையால்) நிச்சயமாக கெட்ட உறவினர் ஆவார். இன்னும், அவர் நிச்சயமாக கெட்ட தோழர் ஆவார். info
التفاسير:

external-link copy
14 : 22

اِنَّ اللّٰهَ یُدْخِلُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕ— اِنَّ اللّٰهَ یَفْعَلُ مَا یُرِیْدُ ۟

நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நன்மைகள் செய்தவர்களை அல்லாஹ் சொர்க்கங்களில் பிரவேசிக்க வைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுவதை செய்கிறான். info
التفاسير:

external-link copy
15 : 22

مَنْ كَانَ یَظُنُّ اَنْ لَّنْ یَّنْصُرَهُ اللّٰهُ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ فَلْیَمْدُدْ بِسَبَبٍ اِلَی السَّمَآءِ ثُمَّ لْیَقْطَعْ فَلْیَنْظُرْ هَلْ یُذْهِبَنَّ كَیْدُهٗ مَا یَغِیْظُ ۟

அல்லாஹ், அவருக்கு (-நபிக்கு) இவ்வுலகிலும் மறு உலகிலும் உதவவே மாட்டான் என்று யார் எண்ணி இருக்கிறானோ அவன் (வீட்டின்) முகட்டில் ஒரு கயிறை தொங்கவிட்டு பிறகு (அதை) துண்டித்து (-தூக்கிட்டு)க் கொள்ளவும். ஆக, (அவனை) எது கோபமூட்டுகிறதோ அதை அவனுடைய (இந்த தூக்கிட்டுக் கொள்ளும்) சூழ்ச்சி நிச்சயமாக போக்கி விடுகிறதா என்று அவன் கவனிக்கட்டும். info
التفاسير: