Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar da harshan Tamel - Umar Sharif

Lambar shafi:close

external-link copy
170 : 2

وَاِذَا قِیْلَ لَهُمُ اتَّبِعُوْا مَاۤ اَنْزَلَ اللّٰهُ قَالُوْا بَلْ نَتَّبِعُ مَاۤ اَلْفَیْنَا عَلَیْهِ اٰبَآءَنَا ؕ— اَوَلَوْ كَانَ اٰبَآؤُهُمْ لَا یَعْقِلُوْنَ شَیْـًٔا وَّلَا یَهْتَدُوْنَ ۟

இன்னும், அல்லாஹ் இறக்கியதைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால், “(நாங்கள் அதைப் பின்பற்ற மாட்டோம்.) மாறாக, நாங்கள் எங்கள் மூதாதைகளை எதில் (-எந்தக் கொள்கையில்) இருக்கக் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்” எனக் கூறுகிறார்கள். அவர்களுடைய மூதாதைகள் எதையும் அறியாதவர்களாகவும் நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா (அவர்களை இவர்கள் பின்பற்றுவார்கள்)? info
التفاسير:

external-link copy
171 : 2

وَمَثَلُ الَّذِیْنَ كَفَرُوْا كَمَثَلِ الَّذِیْ یَنْعِقُ بِمَا لَا یَسْمَعُ اِلَّا دُعَآءً وَّنِدَآءً ؕ— صُمٌّۢ بُكْمٌ عُمْیٌ فَهُمْ لَا یَعْقِلُوْنَ ۟

நிராகரிப்பாளர்களின் உதாரணம் அழைப்பையும் சப்தத்தையும் தவிர (அறவே எதையும்) கேட்காததைக் கூவி அழைப்பவரின் உதாரணத்தைப் போன்றாகும். (அவர்கள்) செவிடர்கள், ஊமைகள், குருடர்கள். எனவே, அவர்கள் (சத்தியத்தை சிந்தித்து) புரியமாட்டார்கள். info
التفاسير:

external-link copy
172 : 2

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ كُنْتُمْ اِیَّاهُ تَعْبُدُوْنَ ۟

நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றில் இருந்து உண்ணுங்கள்! இன்னும், அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள், அவனையே (நீங்கள்) வணங்குபவர்களாக இருந்தால். info
التفاسير:

external-link copy
173 : 2

اِنَّمَا حَرَّمَ عَلَیْكُمُ الْمَیْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِیْرِ وَمَاۤ اُهِلَّ بِهٖ لِغَیْرِ اللّٰهِ ۚ— فَمَنِ اضْطُرَّ غَیْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَلَاۤ اِثْمَ عَلَیْهِ ؕ— اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

அவன் உங்களுக்கு (ஆகுமானதல்ல என்று) தடுத்ததெல்லாம் (தாமாக) செத்த பிராணிகளும் இரத்தமும், பன்றியின் மாமிசமும், (அறுக்கப்படும்போது) அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறப்பட்டதும்தான். ஆக, எவர் பாவத்தை நாடாதவராக, எல்லை மீறாதவராக இருக்கும் நிலையில் (தடுக்கப்பட்டதை உண்பதற்கு) நிர்ப்பந்திக்கப்பட்டாரோ அவர் மீது (அதிலிருந்து அவசியமான அளவு உண்பது) அறவே குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான். info
التفاسير:

external-link copy
174 : 2

اِنَّ الَّذِیْنَ یَكْتُمُوْنَ مَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنَ الْكِتٰبِ وَیَشْتَرُوْنَ بِهٖ ثَمَنًا قَلِیْلًا ۙ— اُولٰٓىِٕكَ مَا یَاْكُلُوْنَ فِیْ بُطُوْنِهِمْ اِلَّا النَّارَ وَلَا یُكَلِّمُهُمُ اللّٰهُ یَوْمَ الْقِیٰمَةِ وَلَا یُزَكِّیْهِمْ ۖۚ— وَلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟

நிச்சயமாக எவர்கள் வேதத்தில் அல்லாஹ் இறக்கியதை மறைக்கிறார்களோ; இன்னும், அதற்குப் பகரமாக சொற்பத் தொகையை வாங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர (எதையும்) சாப்பிடுவதில்லை. இன்னும், மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். இன்னும், அவர்களைப் பரிசுத்தமாக்க மாட்டான். இன்னும், துன்புறுத்தக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு. info
التفاسير:

external-link copy
175 : 2

اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اشْتَرَوُا الضَّلٰلَةَ بِالْهُدٰی وَالْعَذَابَ بِالْمَغْفِرَةِ ۚ— فَمَاۤ اَصْبَرَهُمْ عَلَی النَّارِ ۟

அவர்கள் எத்தகையோர் என்றால் (அல்லாஹ்வின்) நேர்வழிக்குப் பதிலாக (ஷைத்தானின்) வழிகேட்டையும், மன்னிப்புக்குப் பதிலாகத் தண்டனையையும் விலைக்கு வாங்கியவர்கள். நரக நெருப்பின் மீது அவர்கள் எவ்வளவு துணிவாக இருக்கிறார்கள்? info
التفاسير:

external-link copy
176 : 2

ذٰلِكَ بِاَنَّ اللّٰهَ نَزَّلَ الْكِتٰبَ بِالْحَقِّ ؕ— وَاِنَّ الَّذِیْنَ اخْتَلَفُوْا فِی الْكِتٰبِ لَفِیْ شِقَاقٍ بَعِیْدٍ ۟۠

அ(வர்கள் நரகத்தில் தண்டனை பெறுவ)து, ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ் உண்மையுடன் வேதத்தை இறக்கினான். (ஆனால், அவர்கள் அதில் முரண்பட்டார்கள்.) நிச்சயமாக (இந்த) வேதத்(தை நம்பிக்கை கொள்ளாமல் அ)தில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (முஸ்லிம்களுடன்) வெகு தூரமான பகைமையில்தான் இருக்கிறார்கள். info
التفاسير: