Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma.

external-link copy
32 : 9

یُرِیْدُوْنَ اَنْ یُّطْفِـُٔوْا نُوْرَ اللّٰهِ بِاَفْوَاهِهِمْ وَیَاْبَی اللّٰهُ اِلَّاۤ اَنْ یُّتِمَّ نُوْرَهٗ وَلَوْ كَرِهَ الْكٰفِرُوْنَ ۟

9.32. இந்த நிராகரிப்பாளர்களும் அந்நிய மதத்தினர்களும் தமது இட்டுக்கட்டல்கள் மூலமும் முஹம்மது கொண்டு வந்ததை நிராகரிப்பதன் மூலமும் இஸ்லாத்தையும் அதிலுள்ள ‘அல்லாஹ்வின் ஏகத்துவம், அவனுடைய தூதர் கொண்டுவந்தது உண்மை’ என்பதற்கான தெளிவான ஆதாரங்களையும் சான்றுகளையும் அழித்துவிட நாடுகிறார்கள். ஆனால் அல்லாஹ் தன் மார்க்கத்தை முழுமைப்படுத்தியே தீருவான். நிராகரிப்பாளர்கள் வெறுத்தபோதிலும் மற்ற மார்க்கங்களைவிட அதனை மேலோங்கச் செய்தே தீருவான். நிச்சயமாக அல்லாஹ் அதனை பூர்த்தி செய்து, வெளிப்படுத்தி, மேலோங்கச் செய்வான். அல்லாஹ் ஏதேனும் ஒன்றை நாடிவிட்டால் மற்றவர்களின் நாட்டம் நடைபெறாது. info
التفاسير:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• دين الله ظاهر ومنصور مهما سعى أعداؤه للنيل منه حسدًا من عند أنفسهم.
1. எதிரிகள் தம்மிடமுள்ள பொறாமையினால் எவ்வளவுதான் அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு தீங்கு செய்ய முயற்சி செய்தாலும் அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்கியதாகவே இருக்கும். info

• تحريم أكل أموال الناس بالباطل، والصد عن سبيل الله تعالى.
2. மக்களின் செல்வங்களை தவறானமுறையில் உண்ணக்கூடாது. அல்லாஹ்வின் பாதையை விட்டும் அவர்களைத் தடுக்கக் கூடாது. info

• تحريم اكتناز المال دون إنفاقه في سبيل الله.
3. அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்காமல் செல்வங்களை சேர்த்து வைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. info

• الحرص على تقوى الله في السر والعلن، خصوصًا عند قتال الكفار؛ لأن المؤمن يتقي الله في كل أحواله.
4. இரகசியத்திலும், பகிரங்கத்திலும் குறிப்பாக நிராகரிப்போருடன் போரிடும் போதும் இறையச்சத்தில் கவனம் செலுத்த வேண்டும். நிச்சயமாக முஃமின் இறைவனை சகல நிலைமைகளிலும் அஞ்சுவான். info