Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma.

external-link copy
126 : 9

اَوَلَا یَرَوْنَ اَنَّهُمْ یُفْتَنُوْنَ فِیْ كُلِّ عَامٍ مَّرَّةً اَوْ مَرَّتَیْنِ ثُمَّ لَا یَتُوْبُوْنَ وَلَا هُمْ یَذَّكَّرُوْنَ ۟

9.126. ஆண்டிற்கு ஒரு முறையோ இரு முறையோ அல்லாஹ் அவர்களின் நிலமையை அம்பலப்படுத்தி நயவஞ்சகத்தனத்தை வெளிப்படுத்தி அவர்களை சோதனைக்குள்ளாக்குவதைக் கொண்டு அவர்கள் படிப்பினை பெறவில்லையா? அல்லாஹ்தான் இவ்வாறு செய்கிறான் என்பதை அவர்கள் அறிந்திருந்தும் அவர்களின் நிராகரிப்பிலிருந்து மீளாமலும் நயவஞ்சத்திலிருந்து விடுபடாமலும் உள்ளனர்! அவர்களுக்கு இறங்கிய சோதனையையும், அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது என்பதையும் அவர்கள் நினைவில் வைத்திருப்பதும் இல்லை! info
التفاسير:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• وجوب ابتداء القتال بالأقرب من الكفار إذا اتسعت رقعة الإسلام، ودعت إليه حاجة.
1. இஸ்லாமிய நாடு பரந்து விரிந்து விட்டால் தேவை ஏற்படின் அருகிலிருக்கும் நிராகரிப்பாளர்களுடன் போரை ஆரம்பிப்பதே கடமையாகும். info

• بيان حال المنافقين حين نزول القرآن عليهم وهي الترقُّب والاضطراب.
2. குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் நயவஞ்சகர்களின் நிலை எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அவர்கள் எதிர்பார்ப்புடனும் பதற்றத்துடனும் காணப்படுவார்கள். info

• بيان رحمة النبي صلى الله عليه وسلم بالمؤمنين وحرصه عليهم.
3. நம்பிக்கையாளர்களின் மீது நபியவர்கள் வைத்துள்ள அன்பும் ஆர்வமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. info

• في الآيات دليل على أن الإيمان يزيد وينقص، وأنه ينبغي للمؤمن أن يتفقد إيمانه ويتعاهده فيجدده وينميه؛ ليكون دائمًا في صعود.
4. ஈமான் அதிகரிக்கும், குறையும். நம்பிக்கையாளன் எப்போதும் உயர்வை நோக்கி செல்வதற்காக தனது ஈமானில் கவனம் செலுத்தி அதனைப் புதுப்பித்து, அதிகரிக்கும் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு மேற்கூறிய வசனங்கள் சான்றாக உள்ளன. info