Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na Taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma.

அல்கலம்

daga cikin abunda Surar ta kunsa:
شهادة الله للنبي بحسن الخُلق، والدفاع عنه وتثبيته.
அல்லாஹ் நபிகளாருக்கு நற்குணத்தைக் கொண்டு சாட்சி கூறுதலும் அவரைப் பாதுகாத்து உறுதிப்படுத்தலும் info

external-link copy
1 : 68

نٓ وَالْقَلَمِ وَمَا یَسْطُرُوْنَ ۟ۙ

68.1. (نٓ) இது, இது போன்ற சொற்களுக்கான விளக்கம் சூரத்துல் பகராவின் ஆரம்ப வசனத்தில் கூறப்பட்டுள்ளது. அல்லாஹ் எழுதுகோலைக் கொண்டும் தமது எழுது கோல்களின் மூலம் மக்கள் எழுதுபவற்றைக் கொண்டும் சத்தியம் செய்கிறான். info
التفاسير:

external-link copy
2 : 68

مَاۤ اَنْتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُوْنٍ ۟ۚ

68.2. -தூதரே!- அல்லாஹ் உமக்கு அளித்த நபித்துவம் என்னும் அருளால் நீர் பைத்தியக்காரர் அல்ல. மாறாக இணைவைப்பாளர்கள் உம்மீது சுமத்தும் பைத்தியத்தை விட்டும் நீர் தூய்மையானவராக இருக்கின்றீர். info
التفاسير:

external-link copy
3 : 68

وَاِنَّ لَكَ لَاَجْرًا غَیْرَ مَمْنُوْنٍ ۟ۚ

68.3. நிச்சயமாக நீர் சிரமத்துடன் சுமக்கும் இந்த தூதுப்பணிக்காக என்றும் முடிவுறாத நன்மை உண்டு. அதனை யாரும் உமக்குச் சொல்லிக்காட்ட முடியாது. info
التفاسير:

external-link copy
4 : 68

وَاِنَّكَ لَعَلٰی خُلُقٍ عَظِیْمٍ ۟

68.4. நிச்சயமாக நீர் குர்ஆன் கூறும் மகத்தான நற்பண்புடையவராக இருக்கின்றீர். அது கூறும் பண்புகளை பரிபூரணமாகப் பெற்றவராக இருக்கின்றீர். info
التفاسير:

external-link copy
5 : 68

فَسَتُبْصِرُ وَیُبْصِرُوْنَ ۟ۙ

68.5. விரைவில் நீர் கண்டுகொள்வீர். இந்த நிராகரிபொய்ப்பிப்பாளர்களும் கண்டுகொள்வார்கள். info
التفاسير:

external-link copy
6 : 68

بِاَیِّىكُمُ الْمَفْتُوْنُ ۟

68.6. சத்தியம் வெளிப்படும்போது உங்களில் யாருக்குப் பைத்தியம் பிடித்துள்ளது என்பது தெளிவாகிவிடும். info
التفاسير:

external-link copy
7 : 68

اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِیْلِهٖ ۪— وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِیْنَ ۟

68.7. -தூதரே!- நிச்சயமாக உம் இறைவன் தன் பாதையை விட்டு நெறிபிறழ்ந்தவர்களையும் தன் பாதையின்பால் நேர்வழிபெற்றவர்களையும் நன்கறிவான். அவர்கள் அவனது வழியைவிட்டு நெறிபிறழ்ந்துவிட்டார்கள் என்பதையும் நீர் நேர்வழியின்பால் இருக்கின்றீர் என்பதையும் அவன் அறிவான். info
التفاسير:

external-link copy
8 : 68

فَلَا تُطِعِ الْمُكَذِّبِیْنَ ۟

68.8. -தூதரே!- நீர் கொண்டுவந்ததில் பொய்ப்பிப்பவர்களுக்குக் கட்டுப்படாதீர். info
التفاسير:

external-link copy
9 : 68

وَدُّوْا لَوْ تُدْهِنُ فَیُدْهِنُوْنَ ۟

68.9. நீர் மார்க்கத்தை விட்டுக்கொடுத்து அவர்களுக்கு வளைந்து கொடுத்தால், அவர்கள் மீது அன்புகொண்டால் தாங்களும் வளைந்து கொடுக்கலாம், அன்பு காட்டலாம் என்று அவர்கள் விரும்புகிறார்கள். info
التفاسير:

external-link copy
10 : 68

وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِیْنٍ ۟ۙ

68.10. அசத்தியத்தைக் கொண்டு அதிகமான சத்தியம் செய்யும் இழிவான எந்த மனிதனுக்கும் நீர் கட்டுப்படாதீர். info
التفاسير:

external-link copy
11 : 68

هَمَّازٍ مَّشَّآءٍ بِنَمِیْمٍ ۟ۙ

68.11. அவன் மக்களைக் குறித்து அதிகமாக புறம்பேசி அவர்களிடையே பிரிவினை ஏற்படுத்துவதற்காக கோள்மூட்டி திரிபவனாகவும் இருக்கின்றான். info
التفاسير:

external-link copy
12 : 68

مَّنَّاعٍ لِّلْخَیْرِ مُعْتَدٍ اَثِیْمٍ ۟ۙ

68.12. அவன் நற்செயல்களைத் அதிகமாக தடுப்பவன்; மக்களின் செல்வங்களிலும் மானத்திலும் உயிரிலும் வரம்புமீறக்கூடியவன்; பாவங்களில் அதிகமாக உழலக்கூடியவன்; info
التفاسير:

external-link copy
13 : 68

عُتُلٍّۢ بَعْدَ ذٰلِكَ زَنِیْمٍ ۟ۙ

68.13. கடின சித்தமும் வரண்ட பண்பும் மிக்கவன்; இத்தனைக்கும் மேல் அவன் தன் சமூகத்தில் இழிபிறவியாக இருக்கின்றான். info
التفاسير:

external-link copy
14 : 68

اَنْ كَانَ ذَا مَالٍ وَّبَنِیْنَ ۟ؕ

68.14. அவன் செல்வமும் பிள்ளைகளும் பெற்றவனாக இருப்பதனால் அவன் அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர்களின் மீதும் நம்பிக்கைகொள்ளாமல் கர்வம்கொண்டான். info
التفاسير:

external-link copy
15 : 68

اِذَا تُتْلٰی عَلَیْهِ اٰیٰتُنَا قَالَ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟

68.15. நம்முடைய வசனங்கள் அவனிடம் எடுத்துரைக்கப்பட்டால், “இது முன்னோர்கள் மூலமாக எழுதப்பட்ட கட்டுக்கதைகள்” என்று கூறுகிறான். info
التفاسير:

external-link copy
16 : 68

سَنَسِمُهٗ عَلَی الْخُرْطُوْمِ ۟

68.16. நாம் அவனது மூக்கின் மீது அடையாளம் இடுவோம். அது எப்போதும் அவனோடு ஒட்டிக் கொண்டிருக்கும். அவனை அசிங்கமாக்கிவிடும். info
التفاسير:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• اتصاف الرسول صلى الله عليه وسلم بأخلاق القرآن.
1. நபியவர்கள் குர்ஆன் கூறும் பண்புகளைப் பெற்றவர்களாக இருக்கின்றார்கள். info

• صفات الكفار صفات ذميمة يجب على المؤمن الابتعاد عنها، وعن طاعة أهلها.
2. நிராகரிப்பாளர்களின் பண்புகள் மோசமான பண்புகளாகும். அவற்றை விட்டும் அவர்களை வழிப்படுவதை விட்டும் விலகியிருப்பது நம்பிக்கையாளனின்மீது கட்டாயமாகும். info

• من أكثر الحلف هان على الرحمن، ونزلت مرتبته عند الناس.
3. அதிகமாக சத்தியம் செய்பவன் இறைவனிடம் தாழ்ந்துவிடுவதோடு மனிதர்களிடமும் அவனது மதிப்புக் குறைந்துவிடுகிறது. info