Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na Taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma.

external-link copy
3 : 66

وَاِذْ اَسَرَّ النَّبِیُّ اِلٰی بَعْضِ اَزْوَاجِهٖ حَدِیْثًا ۚ— فَلَمَّا نَبَّاَتْ بِهٖ وَاَظْهَرَهُ اللّٰهُ عَلَیْهِ عَرَّفَ بَعْضَهٗ وَاَعْرَضَ عَنْ بَعْضٍ ۚ— فَلَمَّا نَبَّاَهَا بِهٖ قَالَتْ مَنْ اَنْۢبَاَكَ هٰذَا ؕ— قَالَ نَبَّاَنِیَ الْعَلِیْمُ الْخَبِیْرُ ۟

66.3. அல்லாஹ்வின் தூதர் ஹப்ஸாவிடம் பிரத்தியேகமாக, நிச்சயமாக தன் அடிமைப் பெண் மாரியாவை இனி நெருங்கப்போவதில்லை என்று கூறியதை நினைவு கூர்வீராக! ஹப்ஸா அத்தகவலை ஆயிஷாவிடம் தெரிவித்தார். அல்லாஹ் தன் தூதருக்கு அவரது இரகசியம் பகிரங்கப்படுத்தப்பட்டுவிட்டது என்பதை அறிவித்த போது அவர் ஹப்ஸாவைக் கண்டித்து அவர் கூறியவற்றில் சிலதைக் கூறிக்காட்டினார். இன்னும் சிலதைக் கூறவில்லை. அதற்கு ஹப்ஸா அவரிடம், “உங்களுக்கு யார் இதனை அறிவித்தது” என்று கேட்டார். அதற்கு தூதர், “அனைத்தையும் நன்கறிந்தவனும் மறைவான அனைத்தையும் அறிந்தவனுமான அல்லாஹ்தான் அறிவித்தான்” என்று கூறினார்.
info
التفاسير:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• مشروعية الكَفَّارة عن اليمين.
1. சத்தியத்தை முறித்ததற்கு பரிகாரம் விதித்தல். info

• بيان منزلة النبي صلى الله عليه وسلم عند ربه ودفاعه عنه.
2. இறைவனிடத்தில் நபியவர்களின் அந்தஸ்ததையும் அவரை அவன் பாதுகாத்தமையும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. info

• من كرم المصطفى صلى الله عليه وسلم مع زوجاته أنه كان لا يستقصي في العتاب فكان يعرض عن بعض الأخطاء إبقاءً للمودة.
3. தனது மனைவிமார்களுடனான நபியவர்களின் நற்பண்பின் விளைவாகவே முழுமையாக கடிந்துகொள்ளவில்லை. அன்பைப் பேணும் விதமாக சில தவறுகளைப் புறக்கணிப்பவர்களாக இருந்தார். info

• مسؤولية المؤمن عن نفسه وعن أهله.
4. நம்பிக்கையாளன் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் பொறுப்பாளனாவான். info