Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na Taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma.

external-link copy
2 : 57

لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ— یُحْیٖ وَیُمِیْتُ ۚ— وَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

57.2. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் அவனுக்கு மட்டுமே உரியது. அவன் தான் உயிர்ப்பிக்க நாடியவர்களை உயிர்ப்பிக்கிறான், தான் மரணிக்கச் செய்ய நாடியவர்களை மரணிக்கச் செய்கிறான். அவன் எல்லாவற்றின்மீதும் பேராற்றலுடையவன். எதுவும் அவனை இயலாமையில் ஆழ்த்திவிட முடியாது. info
التفاسير:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• شدة سكرات الموت وعجز الإنسان عن دفعها.
1. மரண வேதனையின் கடினமும் அதனைத் தடுக்க முடியாத மனிதனின் இயலாமையும். info

• الأصل أن البشر لا يرون الملائكة إلا إن أراد الله لحكمة.
2. நிச்சயமாக மனிதர்களால் வானவர்களைப் பார்க்க முடியாது என்பதே அடிப்படையாகும். ஆயினும் ஒரு நோக்கத்திற்காக அல்லாஹ் நாடினாலே தவிர. info

• أسماء الله (الأول، الآخر، الظاهر، الباطن) تقتضي تعظيم الله ومراقبته في الأعمال الظاهرة والباطنة.
3. (ஆரம்பமானவன், இறுதியானவன், வெளிரங்கமானவன், உள்ரங்கமானவன் ஆகிய) அல்லாஹ்வின் திருநாமங்கள் அல்லாஹ்வை மதித்து வெளிரங்கமான உள்ரங்கமான செயல்களில் அவனது கண்காணிப்பை நினைவில் கொள்ளவேண்டும் என்பதை வேண்டிநிற்கின்றன. info