Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na Taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma.

Lambar shafi:close

external-link copy
19 : 55

مَرَجَ الْبَحْرَیْنِ یَلْتَقِیٰنِ ۟ۙ

55.19. அல்லாஹ் உப்பு நீருடைய மற்றும் சுவையான நீருடைய இரு கடல்களையும் உங்களுடைய பார்வையில் ஒன்றிணைத்துள்ளான். info
التفاسير:

external-link copy
20 : 55

بَیْنَهُمَا بَرْزَخٌ لَّا یَبْغِیٰنِ ۟ۚ

55.20. அவையிரண்டிற்குமிடையே ஒரு திரை இருக்கின்றது. அது ஒன்று மற்றொன்றில் கலந்துவிடாமல் தடுக்கிறது. எனவேதான் சுவையானது சுவையானதாகவும் உவர்ப்பு உவர்ப்பாகவும் இருக்கிறது. info
التفاسير:

external-link copy
21 : 55

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

55.21. -மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்? info
التفاسير:

external-link copy
22 : 55

یَخْرُجُ مِنْهُمَا اللُّؤْلُؤُ وَالْمَرْجَانُ ۟ۚ

55.22. அந்த இரு கடல்களிலிருந்து சிறிய, பெரிய முத்துகள் வெளிப்படுகிறது. info
التفاسير:

external-link copy
23 : 55

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

55.23. -மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்? info
التفاسير:

external-link copy
24 : 55

وَلَهُ الْجَوَارِ الْمُنْشَاٰتُ فِی الْبَحْرِ كَالْاَعْلَامِ ۟ۚ

55.24. கடல்களில் மலைகளைப்போன்று செல்லக்கூடிய கப்பல்களில் அவனே ஆதிக்கம் செலுத்துகிறான். info
التفاسير:

external-link copy
25 : 55

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟۠

55.25. -மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்? info
التفاسير:

external-link copy
26 : 55

كُلُّ مَنْ عَلَیْهَا فَانٍ ۟ۚۖ

55.26. பூமியின் மீதுள்ள படைப்பினங்கள் அனைத்தும் சந்தேகம் இல்லாமல் அழியக்கூடியவையே. info
التفاسير:

external-link copy
27 : 55

وَّیَبْقٰی وَجْهُ رَبِّكَ ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِ ۟ۚ

55.27. -தூதரே!- கண்ணியமும் சிறப்பும்மிக்க தன் அடியார்களின் மீது அருள் புரிந்த உம் இறைவனின் முகமே நிலைத்திருக்கும். அது ஒருபோதும் அழியாது. info
التفاسير:

external-link copy
28 : 55

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

55.28. -மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்? info
التفاسير:

external-link copy
29 : 55

یَسْـَٔلُهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— كُلَّ یَوْمٍ هُوَ فِیْ شَاْنٍ ۟ۚ

55.29. வானங்களிலுள்ள வானவர்களும் பூமியிலுள்ள மனிதர்கள், ஜின்கள் அனைவரும் தங்களின் தேவைகளை அவனிடமே கேட்கிறார்கள். அவன் ஒவ்வொரு நாளும் தன் அடியார்களின் விவகாரங்களான உயிர்ப்பித்தல், மரணிக்கச்செய்தல், வாழ்வாதாரம் வழங்குதல், மற்றவிடயங்களில்
இருக்கிறான்.
info
التفاسير:

external-link copy
30 : 55

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

55.30. -மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்? info
التفاسير:

external-link copy
31 : 55

سَنَفْرُغُ لَكُمْ اَیُّهَ الثَّقَلٰنِ ۟ۚ

55.31. -மனிதர்கள் மற்றும் ஜின்களே!- நாம் உங்களை விசாரிப்பதற்காக தனித்திடுவோம். ஒவ்வொருவருக்கும் உரிய கூலியான வெகுமதி அல்லது தண்டனையை வழங்கிடுவோம். info
التفاسير:

external-link copy
32 : 55

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

55.32. -மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்? info
التفاسير:

external-link copy
33 : 55

یٰمَعْشَرَ الْجِنِّ وَالْاِنْسِ اِنِ اسْتَطَعْتُمْ اَنْ تَنْفُذُوْا مِنْ اَقْطَارِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ فَانْفُذُوْا ؕ— لَا تَنْفُذُوْنَ اِلَّا بِسُلْطٰنٍ ۟ۚ

55.33. அல்லாஹ் மறுமை நாளில் மனிதர்களையும் ஜின்களையும் ஒன்றுதிரட்டும்போது கூறுவான்: “மனித, ஜின் சமூகமே! வானங்கள் மற்றும் பூமியின் ஓரங்களிலிருந்து உங்களால் வெளியேற முடிந்தால் வெளியேருங்கள். ஆதாரமும் பலமும் இன்றி உங்களால் ஒருபோதும் வெளியேற முடியாது. நிச்சயமாக அது உங்களுக்கு எவ்வாறு முடியும்? info
التفاسير:

external-link copy
34 : 55

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

55.34. -மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்? info
التفاسير:

external-link copy
35 : 55

یُرْسَلُ عَلَیْكُمَا شُوَاظٌ مِّنْ نَّارٍ ۙ۬— وَّنُحَاسٌ فَلَا تَنْتَصِرٰنِ ۟ۚ

55.35. -மனித, ஜின் சமூகமே!- உங்கள்மீது புகையற்ற தீப்பிழம்புகளும் தீப்பிழம்புகளற்ற புகையும் அனுப்பப்படும். நீங்கள் அதிலிருந்து தப்ப முடியாது. info
التفاسير:

external-link copy
36 : 55

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

55.36. -மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்? info
التفاسير:

external-link copy
37 : 55

فَاِذَا انْشَقَّتِ السَّمَآءُ فَكَانَتْ وَرْدَةً كَالدِّهَانِ ۟ۚ

55.37. வானவர்கள் இறங்குவதற்காக வானம் பிளந்துவிடும்போது அதனுடைய நிறத்தின் பிரகாசம் கொதிக்கவைக்கப்பட்ட எண்ணையை போன்று சிவப்பாகிவிடும். info
التفاسير:

external-link copy
38 : 55

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

55.38. -மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்? info
التفاسير:

external-link copy
39 : 55

فَیَوْمَىِٕذٍ لَّا یُسْـَٔلُ عَنْ ذَنْۢبِهٖۤ اِنْسٌ وَّلَا جَآنٌّ ۟ۚ

55.39. அந்த மாபெரும் நாளில் மனிதர்களோ, ஜின்களோ அவர்களின் பாவங்கள் குறித்து விசாரிக்கப்பட மாட்டார்கள். அல்லாஹ் அவர்களின் செயல்களை அறிந்திருப்பான். info
التفاسير:

external-link copy
40 : 55

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّكُمَا تُكَذِّبٰنِ ۟

55.40. -மனித, ஜின் சமூகமே!- அல்லாஹ் உங்கள் மீது பொழிந்த ஏராளமான அருட்கொடைகளில் எதனை பொய்ப்பிப்பீர்கள்? info
التفاسير:

external-link copy
41 : 55

یُعْرَفُ الْمُجْرِمُوْنَ بِسِیْمٰهُمْ فَیُؤْخَذُ بِالنَّوَاصِیْ وَالْاَقْدَامِ ۟ۚ

55.41. மறுமை நாளில் குற்றவாளிகள் அவர்களின் அடையாளங்களைக் கொண்டு அறியப்படுவார்கள். அவை கருமையான முகங்களும் நீலக்கண்களும் ஆகும். அவற்றின் நெற்றி முடிகள் பாதங்களோடு இணைக்கப்பட்டு அவர்கள் நரகத்தில் வீசி எறியப்படுவார்கள். info
التفاسير:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• الجمع بين البحر المالح والعَذْب دون أن يختلطا من مظاهر قدرة الله تعالى.
1. உப்பு நீர் மற்றும் சுவையான நீருடைய இரு கடல்களை கலந்துவிடாமல் அல்லாஹ் ஒன்றிணைத்திருப்பது அவனுடைய வல்லமையின் வெளிப்பாடுகளில் உள்ளவையாகும். info

• ثبوت الفناء لجميع الخلائق، وبيان أن البقاء لله وحده حضٌّ للعباد على التعلق بالباقي - سبحانه - دون من سواه.
2. படைப்புகள் அனைத்தும் அழிந்துவிடுவது உறுதியாகிறது. நிச்சயமாக அல்லாஹ் மட்டுமே நிலைத்திருப்பான் என்பதை விளக்குவது, வேறு எவரையும் விடுத்து எப்போதும் அழியாமலிருக்கும் அல்லாஹ்வுடனே மனிதன் தொடர்புடன் இருக்க வேண்டும் என்பதற்கான தூண்டுதலாகும். info

• إثبات صفة الوجه لله على ما يليق به سبحانه دون تشبيه أو تمثيل.
3. ஒப்புமையோ, உதாரணமோ இன்றி அவனுடைய தகுதிக்கு ஏற்ப அல்லாஹ்வுக்கு முகம் என்ற பண்பு உண்டு என்பது உறுதியாகிறது. info

• تنويع عذاب الكافر.
4. நிராகரிப்பாளனை பல்வேறு விதத்தில் வேதனை செய்தல். info