Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma.

external-link copy
77 : 40

فَاصْبِرْ اِنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ ۚ— فَاِمَّا نُرِیَنَّكَ بَعْضَ الَّذِیْ نَعِدُهُمْ اَوْ نَتَوَفَّیَنَّكَ فَاِلَیْنَا یُرْجَعُوْنَ ۟

40.77. -தூதரே!- உம் சமூகத்தினர் அளிக்கும் துன்பங்களையும் அவர்களின் பொய்ப்பிப்பையும் பொறுமையுடன் சகித்துக் கொள்வீராக. நிச்சயமாக உமக்கு உதவி செய்வதாக அல்லாஹ் அளித்த வாக்குறுதி சந்தேகம் இல்லாத உண்மையானதாகும். நாம் அவர்களுக்கு எச்சரித்த வேதனைகளில் சிலவற்றை -பத்ர் போரில் நிகழ்ந்தது போன்று- உமக்குக் காட்டுவோம் அல்லது அதற்கு முன்னரே உம்மை மரணிக்கச் செய்துவிடுவோம். மறுமை நாளில் அவர்கள் நம் பக்கமே திரும்ப வேண்டும். நாம் அவர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்கிடுவோம். அவர்களை நரகத்தில் பிரவேசிக்கச் செய்திடுவோம். அவர்கள் நிரந்தரமாக அதில் வீழ்ந்துகிடப்பார்கள். info
التفاسير:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• التدرج في الخلق سُنَّة إلهية يتعلم منها الناس التدرج في حياتهم.
1. படிப்படியாக படைப்பது இறைவனின் நியதியாகும். அதிலிருந்து மக்கள் தங்களின் வாழ்க்கையில் ஒரு விஷயத்தை படிப்படியாக செயல்படுத்தும் முறையைக் கற்றுக் கொள்கிறார்கள். info

• قبح الفرح بالباطل.
2. அசத்தியத்தைக் கொண்டு மகிழ்ச்சியடைவது மிகவும் மோசமானது. info

• أهمية الصبر في حياة الناس، وبخاصة الدعاة منهم.
3. மனித வாழ்வில் பொறுமையின் முக்கியத்துவம் தெளிவாகிறது. அவர்களிலும் அழைப்பாளர்களுக்கு பொறுமை இன்றியமையாத ஒன்றாகும். info