Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na Taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma.

external-link copy
6 : 32

ذٰلِكَ عٰلِمُ الْغَیْبِ وَالشَّهَادَةِ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟ۙ

32.6. இவற்றையெல்லாம் நிர்வகிப்பவனே மறைவான, வெளிப்படையான ஒவ்வொன்றையும் அறிந்தவன். அவை இரண்டிலும் எதுவும் அவனைவிட்டு மறைவாக இல்லை. தன் எதிரிகளைத் தண்டிக்கும் அவன் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. நம்பிக்கைகொண்ட தன் அடியார்களோடு அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான். info
التفاسير:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• الحكمة من بعثة الرسل أن يهدوا أقوامهم إلى الصراط المستقيم.
1. தூதர்கள் அனுப்பப்பட்டதன் நோக்கம், அவர்களின் சமூகங்களுக்கு நேரான வழியைக் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான். info

• ثبوت صفة الاستواء لله من غير تشبيه ولا تمثيل.
2. உவமை கூறாது உதாரணம் கூறாது அல்லாஹ்வுக்கு உயர்தல் என்ற பண்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்தல். info

• استبعاد المشركين للبعث مع وضوح الأدلة عليه.
3.மறுமையில் எழுப்பப்படுவதற்கான ஆதாரங்கள் தெளிவாக இருந்தும் இணைவைப்பாளர்கள் அதனை சாத்தியமற்றதாகக் கருதுதல். info