Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na Taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma.

Lambar shafi:close

external-link copy
56 : 27

فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوْۤا اَخْرِجُوْۤا اٰلَ لُوْطٍ مِّنْ قَرْیَتِكُمْ ۚ— اِنَّهُمْ اُنَاسٌ یَّتَطَهَّرُوْنَ ۟

27.56. “லூத்தின் குடும்பத்தினரை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றி விடுங்கள். நிச்சயமாக அவர்கள் அழுக்குகள், நஜீஸ்களை விட்டும் பரிசுத்தவான்களாம்” என்பதுதான் அவரது சமூகத்தின் பதிலாக இருந்தது. தாங்கள் செய்த மானக்கேடான காரியங்களில் பங்கு பெறாமல் அதனை எதிர்க்கும் லூத்தின் குடும்பத்தினரைப் பரிகசிக்கும் பொருட்டே அவர்கள் இவ்வாறு கூறினார்கள். info
التفاسير:

external-link copy
57 : 27

فَاَنْجَیْنٰهُ وَاَهْلَهٗۤ اِلَّا امْرَاَتَهٗ ؗ— قَدَّرْنٰهَا مِنَ الْغٰبِرِیْنَ ۟

27.57. நாம் அவரையும் குடும்பத்தையும் பாதுகாத்தோம். அவரது மனைவியைத் தவிர. அவளும் பின்தங்கி அழியக்கூடியவர்களில் ஒருத்தியாக இருப்பாள் என்று நாம் விதித்துவிட்டோம். info
التفاسير:

external-link copy
58 : 27

وَاَمْطَرْنَا عَلَیْهِمْ مَّطَرًا ۚ— فَسَآءَ مَطَرُ الْمُنْذَرِیْنَ ۟۠

27.58. நாம் அவர்கள் மீது கற்களைப் பொழியச் செய்தோம். அது தண்டனையைக் கொண்டு எச்சரிக்கப்பட்டும் அதற்குப் பதிலளிக்காதவர்களை அழித்துவிடும் மோசமான மழையாக இருந்தது. info
التفاسير:

external-link copy
59 : 27

قُلِ الْحَمْدُ لِلّٰهِ وَسَلٰمٌ عَلٰی عِبَادِهِ الَّذِیْنَ اصْطَفٰی ؕ— ءٰٓاللّٰهُ خَیْرٌ اَمَّا یُشْرِكُوْنَ ۟

27.59. -தூதரே!- நீர் கூறுவீராக: “அருட்கொடைகளை அளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். நபியவர்களின் தோழர்களுக்கு லூத், ஸாலிஹ் ஆகியோரின் சமுதாயத்துக்கு ஏற்பட்ட தண்டனையை விட்டும் அல்லாஹ்வின் பாதுகாப்பு நிலவட்டும். யாரிடம் எல்லாவற்றின் அதிகாரங்களும் உள்ளதோ அந்த வணக்கத்திற்குரிய உண்மையான இறைவனான அல்லாஹ் சிறந்தவனா? அல்லது பலனளிக்கவோ, தீங்கிழைக்கவோ சக்தியற்ற இணைவைப்பாளர்கள் வணங்கும் தெய்வங்களா?! info
التفاسير:

external-link copy
60 : 27

اَمَّنْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَاَنْزَلَ لَكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً ۚ— فَاَنْۢبَتْنَا بِهٖ حَدَآىِٕقَ ذَاتَ بَهْجَةٍ ۚ— مَا كَانَ لَكُمْ اَنْ تُنْۢبِتُوْا شَجَرَهَا ؕ— ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ؕ— بَلْ هُمْ قَوْمٌ یَّعْدِلُوْنَ ۟ؕ

27.60. அல்லது வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவனா? -மனிதர்களே!- அவன் உங்களுக்காக வானத்திலிருந்து மழையை இறக்கி அதன் மூலம் அழகிய தோட்டங்களை முளைக்கச் செய்கின்றான். உங்களால் அந்த தோட்டங்களிலுள்ள மரங்களை முளைக்கச் செய்ய முடியாது. அல்லாஹ்வே அவற்றை முளைக்கச் செய்தான். அல்லாஹ்வுடன் சேர்ந்து வேறு ஏதாவது தெய்வம் இதனைச் செய்ததா? ஒருபோதும் இல்லை. மாறாக அவர்கள் சத்தியத்தைவிட்டும் நெறிபிறழ்ந்துவிட்டார்கள். அநியாயமாக படைப்பாளனை படைப்பினங்களோடு சமமாக்கிவிட்டார்கள். info
التفاسير:

external-link copy
61 : 27

اَمَّنْ جَعَلَ الْاَرْضَ قَرَارًا وَّجَعَلَ خِلٰلَهَاۤ اَنْهٰرًا وَّجَعَلَ لَهَا رَوَاسِیَ وَجَعَلَ بَیْنَ الْبَحْرَیْنِ حَاجِزًا ؕ— ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ؕ— بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْلَمُوْنَ ۟ؕ

27.61. பூமி அதிலுள்ளவர்களுடன் சேர்ந்து ஆட்டம் காணாதவாறு உங்களுக்காக அதனை உறுதியானதாக ஆக்கியவன் யார்? அதனுள்ளே அவன் ஆறுகளை ஓடச்செய்தான். உறுதியான மலைகளையும் ஏற்படுத்தினான். இரு கடல்களுக்கிடையே அவன் ஒரு திரையை ஏற்படுத்தினான். ஒன்றின் நீர் உப்பாகவும் மற்றொன்றின் நீர் சுவையானதாகவும் இருக்கிறது. ஒன்றோடொன்று கலந்து கெடுத்துவிடாமல் ஒரு தடுப்பை ஏற்படுத்தியுள்ளான். அல்லாஹ்வுடன் சேர்ந்து இதனைச் செய்யும் வேறு ஏதாவது தெய்வம் உண்டா? இல்லை. அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள். அவர்கள் அறிந்திருந்தால் அல்லாஹ்வுக்கு எந்தவொரு படைப்பினத்தையும் இணையாக்கியிருக்கமாட்டார்கள். info
التفاسير:

external-link copy
62 : 27

اَمَّنْ یُّجِیْبُ الْمُضْطَرَّ اِذَا دَعَاهُ وَیَكْشِفُ السُّوْٓءَ وَیَجْعَلُكُمْ خُلَفَآءَ الْاَرْضِ ؕ— ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ؕ— قَلِیْلًا مَّا تَذَكَّرُوْنَ ۟ؕ

27.62. துன்பத்திற்குள்ளானவன் தன் துன்பத்தை அகற்றுமாறு பிரார்த்திக்கும்போது அவனுடைய பிரார்த்தனைக்குப் பதிலளிப்பவன் யார்? வறுமை, நோய் மற்றும் மனிதனுக்கு ஏற்படும் ஏனைய சோதனைகளை நீக்கக்கூடியவன் யார்? அவன் பூமியில் உங்களை பரம்பரை பரம்பரையாக பிரதிநிதியாக ஆக்கியவன் யார்? அல்லாஹ்வுடன் சேர்ந்து இதனைச் செய்யும் வேறு ஏதாவது தெய்வம் உண்டா? இல்லை. மாறாக நீங்கள் மிகக் குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள், உபதேசம் பெறுகிறீர்கள். info
التفاسير:

external-link copy
63 : 27

اَمَّنْ یَّهْدِیْكُمْ فِیْ ظُلُمٰتِ الْبَرِّ وَالْبَحْرِ وَمَنْ یُّرْسِلُ الرِّیٰحَ بُشْرًاۢ بَیْنَ یَدَیْ رَحْمَتِهٖ ؕ— ءَاِلٰهٌ مَّعَ اللّٰهِ ؕ— تَعٰلَی اللّٰهُ عَمَّا یُشْرِكُوْنَ ۟ؕ

27.63. தரை மற்றும் கடல் ஆகியவற்றின் இருள்களில் உங்களுக்காக ஏற்படுத்திய நட்சத்திரங்கள், அடையாளங்கள் மூலம் உங்களுக்கு வழிகாட்டுபவன் யார்? தனது அடியார்களுக்கு அன்பாக மழை அண்மையில் பொழிய இருப்பதை நற்செய்தி கூறும் காற்றை அனுப்புவன் யார்? அல்லாஹ்வுடன் சேர்ந்து இதனைச் செய்யும் வேறு ஏதாவது தெய்வம் உண்டா? தனது படைப்பினங்களில் அவர்கள் அவனுக்கு இணையாக்குபவற்றை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன். info
التفاسير:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• لجوء أهل الباطل للعنف عندما تحاصرهم حجج الحق.
1. அசத்தியவாதிகள் சத்தியத்தின் ஆதாரங்களை எதிர்கொள்ள இயலாதபோது வன்முறையைப் பிரயோகிக்க முயல்தல். info

• رابطة الزوجية دون الإيمان لا تنفع في الآخرة.
2. ஈமானற்ற திருமண உறவு மறுமையில் எந்தப் பயனையும் தராது. info

• ترسيخ عقيدة التوحيد من خلال التذكير بنعم الله.
3. அல்லாஹ்வின் அருட்கொடைகளை நினைவூட்டுவதன் மூலம் ஓரிறைக் கொள்கையைப் பதியவைத்தல். info

• كل مضطر من مؤمن أو كافر فإن الله قد وعده بالإجابة إذا دعاه.
4. நிர்ப்பந்தத்திற்குட்பட்ட நம்பிக்கையாளனோ, நிராகரிப்பாளனோ அல்லாஹ்வை அழைத்தால் பதிலளிப்பதாக நிச்சயமாக அவன் வாக்களித்துள்ளான். info