Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na Taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma.

external-link copy
3 : 103

اِلَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ ۙ۬— وَتَوَاصَوْا بِالصَّبْرِ ۟۠

103.3. ஆயினும் அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதர்களின்மீதும் நம்பிக்கைகொண்டு, நற்செயல்கள் புரிந்து ஒருவருக்கொருவர் சத்தியத்தைக் கொண்டும் சத்தியத்தில் பொறுமையாக நிலைத்திருக்கும்படியும் அறிவுரை கூறியவர்களைத் தவிர. இந்தப் பண்புகளை உடையவர்கள் ஈருலகிலும் தப்பியவர்களாவார்கள். info
التفاسير:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• خسران من لم يتصفوا بالإيمان وعمل الصالحات، والتواصي بالحق، والتواصي بالصبر.
1. யார் நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிதல், சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுதல், பொறுமையாக இருக்கும்படி ஒருவருக்கொருவர் அறிவுரை கூறுதல். ஆகிய பண்புகளைப் பெற்றிருக்கவில்லையோ அவர் நஷ்டமடைந்துவிட்டார். info

• تحريم الهَمْز واللَّمْز في الناس.
2. மக்களைக்குறித்து புறம்பேசி குறைகூறிக் கொண்டு திரிவது தடுக்கப்பட்டுள்ளது. info

• دفاع الله عن بيته الحرام، وهذا من الأمن الذي قضاه الله له.
3. தன் புனித இல்லத்தை அல்லாஹ் பாதுகாத்தல். இது அதற்காக அல்லாஹ் முடிவுசெய்துள்ள பாதுகாப்பில் உள்ளதாகும். info