Fassarar Ma'anonin Alqura'ni - Fassarar Tamilanci na Taƙaitaccen Tafsirin AlƘur'ani mai girma.

Lambar shafi:close

external-link copy
15 : 10

وَاِذَا تُتْلٰی عَلَیْهِمْ اٰیَاتُنَا بَیِّنٰتٍ ۙ— قَالَ الَّذِیْنَ لَا یَرْجُوْنَ لِقَآءَنَا ائْتِ بِقُرْاٰنٍ غَیْرِ هٰذَاۤ اَوْ بَدِّلْهُ ؕ— قُلْ مَا یَكُوْنُ لِیْۤ اَنْ اُبَدِّلَهٗ مِنْ تِلْقَآئِ نَفْسِیْ ۚ— اِنْ اَتَّبِعُ اِلَّا مَا یُوْحٰۤی اِلَیَّ ۚ— اِنِّیْۤ اَخَافُ اِنْ عَصَیْتُ رَبِّیْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟

10.15. அல்லாஹ் ஒருவனே என்பதை அறிவிக்கக்கூடிய குர்ஆனின் தெளிவான வசனங்கள் அவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டால் நற்கூலியை விரும்பாத, தண்டனையை அஞ்சாத மறுமையை மறுப்பவர்கள், -“முஹம்மதே!- சிலை வணக்கத்தைக் குறைகூறும் இந்தக் குர்ஆன் அல்லாத வேறு குர்ஆனைக் கொண்டுவாரும். அல்லது எங்களின் மனவிருப்பங்களுக்கு உடன்படும் விதத்தில் இதில் சிலதை அல்லது முழுதையும் மாற்றிவிடுவீராக” என்று கூறுகிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “என்னால் மாற்றவே முடியாது -என்றிருக்கும் பொழுது- வேறொன்றை என்னால் கொண்டு வருவதும் சாத்தியமற்றதாகும். மாறாக அல்லாஹ்வே தான் நாடியதை மாற்றுகிறான். எனக்கு அல்லாஹ் அறிவிப்பதையே நான் பின்பற்றுகிறேன். நான் உங்களின் கோரிக்கையை ஏற்று அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டால் மிகப் பெரும் நாளான மறுமை நாளின் வேதனையை அஞ்சுகிறேன்.” info
التفاسير:

external-link copy
16 : 10

قُلْ لَّوْ شَآءَ اللّٰهُ مَا تَلَوْتُهٗ عَلَیْكُمْ وَلَاۤ اَدْرٰىكُمْ بِهٖ ۖؗۗ— فَقَدْ لَبِثْتُ فِیْكُمْ عُمُرًا مِّنْ قَبْلِهٖ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟

10.16. -தூதரே!- நீர் கூறுவீராக: “நான் உங்களுக்குக் குர்ஆனை எடுத்துரைக்கக் கூடாது என்று அல்லாஹ் நாடியிருந்தால் நான் உங்களுக்கு அதனை உங்களிடம் ஓதியிருக்கவும் மாட்டேன். அதனை உங்களுக்கு எடுத்துரைத்திருக்கவும் மாட்டேன். அவன் நாடியிருந்தால் என் மூலமாக குர்ஆனை உங்களுக்குக் கற்றுத் தந்திருக்க மாட்டான். நான் உங்களிடையே நீண்ட காலம் - நாற்பது வருடம் - தங்கியுள்ளேன். எனக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. நாம் இப்பொழுது பெற்றிருக்கும் இந்த பணியையும் நான் தேடவில்லை. நான் உங்களிடம் கொண்டு வந்துள்ளது அல்லாஹ்விடமிருந்து வந்ததுதான், எனக்கு அதில் எந்த தலையீடும் இல்லை என்பதை உங்களின் அறிவைக் கொண்டு அறிந்துகொள்ள மாட்டீர்களா? info
التفاسير:

external-link copy
17 : 10

فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰیٰتِهٖ ؕ— اِنَّهٗ لَا یُفْلِحُ الْمُجْرِمُوْنَ ۟

10.17. அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனைவிட அநியாயக்காரன் வேறு யாருமில்லை. எனவே நான் எவ்வாறு புதிதாகப் புனைந்து குர்ஆனை மாற்றிக் கொண்டுவர முடியும்? அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டி வரம்புமீறக்கூடியவர்கள் அவர்கள் எதிர்பார்க்கும் விடயத்தில் ஒரு போதும் வெற்றியடைய மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
18 : 10

وَیَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَضُرُّهُمْ وَلَا یَنْفَعُهُمْ وَیَقُوْلُوْنَ هٰۤؤُلَآءِ شُفَعَآؤُنَا عِنْدَ اللّٰهِ ؕ— قُلْ اَتُنَبِّـُٔوْنَ اللّٰهَ بِمَا لَا یَعْلَمُ فِی السَّمٰوٰتِ وَلَا فِی الْاَرْضِ ؕ— سُبْحٰنَهٗ وَتَعٰلٰی عَمَّا یُشْرِكُوْنَ ۟

10.18. இணைவைப்பாளர்கள் அல்லாஹ்வை விடுத்து தங்களுக்கு பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ முடியாத கற்பனைக் கடவுள்களை வணங்குகிறார்கள். வணங்கப்படுவதற்குத் தகுதியான இறைவனால் மட்டுமே தான் நாடிய போது பலனளிக்கவோ தீங்கிழைக்கவோ முடியும். அவர்கள் தங்களின் தெய்வங்களைக் குறித்துக் கூறுகிறார்கள்: “இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்காக பரிந்துரை செய்யும் தரகர்களாகும். அதனால் அவன் எங்களின் பாவங்களினால் எங்களைத் தண்டிக்கமாட்டான். -”தூதரே!- நீர் அவர்களிடம் கேட்பீராக: “வானங்களிலும் பூமியிலும் அவன் அறியாத ஒரு இணை உண்டு என்பதை அனைத்தையும் அறிந்த அல்லாஹ்வுக்கு நீங்கள் சொல்லிக் கொடுக்கிறீர்களா ? இணைவைப்பாளர்கள் கூறும் பொய்களையும், அசத்தியத்தையும் விட்டு அவன் பரிசுத்தமானவன். info
التفاسير:

external-link copy
19 : 10

وَمَا كَانَ النَّاسُ اِلَّاۤ اُمَّةً وَّاحِدَةً فَاخْتَلَفُوْا ؕ— وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَّبِّكَ لَقُضِیَ بَیْنَهُمْ فِیْمَا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟

10.19. மனிதர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட ஒரே சமூகமாக இருந்தார்கள். பின்னர் கருத்து வேறுபாடு கொண்டார்கள். அவர்களில் சிலர் நம்பிக்கையில் நிலைத்திருந்தார்கள். சிலர் நிராகரித்துவிட்டார்கள். அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டவற்றில் இவ்வுலகில் அவர்களிடையே தீர்ப்பளிக்க மாட்டான், மறுமை நாளில்தான் தீர்ப்பளிப்பான் என்ற அல்லாஹ்வின் விதி முந்தியிராவிட்டால் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டவற்றில் இவ்வுலகிலேயே தீர்ப்பளித்திருப்பான், நேர்வழி பெற்றவர் யார் வழிகெட்டவர் யார் என்பது தெளிவாகியிருக்கும். info
التفاسير:

external-link copy
20 : 10

وَیَقُوْلُوْنَ لَوْلَاۤ اُنْزِلَ عَلَیْهِ اٰیَةٌ مِّنْ رَّبِّهٖ ۚ— فَقُلْ اِنَّمَا الْغَیْبُ لِلّٰهِ فَانْتَظِرُوْا ۚ— اِنِّیْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِیْنَ ۟۠

10.20. “முஹம்மதின்மீது அவரது நம்பகத் தன்மையை நிருபிக்கக்கூடிய ஏதேனும் சான்று இறக்கப்பட வேண்டாமா” என்று இணைவைப்பாளர்கள் கேட்கிறார்கள். -தூதரே!- நீர் அவர்களிடம் கூறுவீராக: “சான்றுகள் இறங்குவது மறைவான ஒன்றாகும். அதை அல்லாஹ் மட்டுமே அறிவான். எனவே நீங்கள் பரிந்துரைத்த வெளிரங்கமான சான்றுகளை எதிர்பாருங்கள். நானும் உங்களுடன் அதனை எதிர்பார்ப்பவர்களில் ஒருவனே. info
التفاسير:
daga cikin fa'idodin Ayoyin wannan shafi:
• عظم الافتراء على الله والكذب عليه وتحريف كلامه كما فعل اليهود بالتوراة.
1. யூதர்கள் தவ்ராத்தை திரித்தது போல அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக்கட்டி பொய்யுரைத்து அவனது வார்த்தையைத் திரிவுபடுத்துவது மாபெரும் தவறாகும். info

• النفع والضر بيد الله عز وجل وحده دون ما سواه.
2. பலனளிப்பதும் தீங்கிழைப்பதும் அல்லாஹ்வின் கைவசம் மாத்திரமே உள்ளது. அவனைத் தவிர வேறு யாாிடமும் இல்லை. info

• بطلان قول المشركين بأن آلهتهم تشفع لهم عند الله.
3. தங்களின் சிலைகள் அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் என்ற இணைவைப்பாளர்களின் வாதம் தவறானதாகும். info

• اتباع الهوى والاختلاف على الدين هو سبب الفرقة.
4. மனஇச்சையைப் பின்பற்றுவதும் மார்க்கத்தில் கருத்து வேறுபாடு கொள்வதும் பிரிவினைக்கான காரணங்களாகும். info