Fassarar Ma'anonin Alqura'ni - Fassara da harshen Tamil - Abdulhamid Baƙawi

external-link copy
2 : 5

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تُحِلُّوْا شَعَآىِٕرَ اللّٰهِ وَلَا الشَّهْرَ الْحَرَامَ وَلَا الْهَدْیَ وَلَا الْقَلَآىِٕدَ وَلَاۤ آٰمِّیْنَ الْبَیْتَ الْحَرَامَ یَبْتَغُوْنَ فَضْلًا مِّنْ رَّبِّهِمْ وَرِضْوَانًا ؕ— وَاِذَا حَلَلْتُمْ فَاصْطَادُوْا ؕ— وَلَا یَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ اَنْ صَدُّوْكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ اَنْ تَعْتَدُوْا ۘ— وَتَعَاوَنُوْا عَلَی الْبِرِّ وَالتَّقْوٰی ۪— وَلَا تَعَاوَنُوْا عَلَی الْاِثْمِ وَالْعُدْوَانِ ۪— وَاتَّقُوا اللّٰهَ ؕ— اِنَّ اللّٰهَ شَدِیْدُ الْعِقَابِ ۟

2. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் மார்க்க அடையாளங்களையும் (ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) சிறப்புற்ற புனித மாதங்களையும், (ஹஜ்ஜின்) குர்பானிகளையும், (குர்பானிகளுக்காக) மாலை கட்டப்பட்டவற்றையும், தங்கள் இறைவனின் அருளையும், திருப்பொருத்தத்தையும் அடையக்கருதி கண்ணியமான அவனுடைய ஆலயத்தை நாடிச் செல்பவர்களையும் (அவமதிப்பதை) நீங்கள் ஆகுமாக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் உங்கள் இஹ்ராமை நீக்கிவிட்டால் (அனுமதிக்கப்பட்டவற்றை) நீங்கள் வேட்டையாடலாம். கண்ணியமான மஸ்ஜிதை விட்டு உங்களைத் தடுத்த வகுப்பார் மீது (உங்களுக்கு)ள்ள துவேஷம் (அவர்கள்மீது) நீங்கள் வரம்பு மீறும்படி உங்களைத் தூண்டாதிருக்கவும். மேலும், நன்மைக்கும் அல்லாஹ்வுடைய இறையச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்திற்கும் அத்துமீறுவதற்கும் (அநியாயத்திற்கும்) நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம். அல்லாஹ்வுக்கே நீங்கள் பயப்படுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், வேதனை செய்வதில் மிகக் கடுமையானவன் ஆவான். info
التفاسير: