Traducción de los significados del Sagrado Corán - Traducción al tamil - Omar Sharif

Número de página:close

external-link copy
23 : 42

ذٰلِكَ الَّذِیْ یُبَشِّرُ اللّٰهُ عِبَادَهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ؕ— قُلْ لَّاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ اَجْرًا اِلَّا الْمَوَدَّةَ فِی الْقُرْبٰی ؕ— وَمَنْ یَّقْتَرِفْ حَسَنَةً نَّزِدْ لَهٗ فِیْهَا حُسْنًا ؕ— اِنَّ اللّٰهَ غَفُوْرٌ شَكُوْرٌ ۟

(நல்லவர்களுக்குரிய சொர்க்க இன்பமாகிய) இது எத்தகையது என்றால், நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்த தன் அடியார்களுக்கு அல்லாஹ் இதன் மூலம் நற்செய்தி) கூறுகிறான். (நபியே!) கூறுவீராக! “இதற்காக நான் உங்களிடத்தில் எந்த கூலியையும் கேட்கவில்லை, இரத்த உறவினால் உள்ள அன்பைத் தவிர.” இன்னும், யார் அழகிய அமலை செய்வாரோ அவருக்கு அதில் (மேலும்) அழகை நாம் அதிகப்படுத்துவோம். (ஒரு நன்மைக்கு பத்து நன்மைகளை கூலியாகத் தருவோம்.) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், நன்றி பாராட்டக்கூடியவன் ஆவான். info
التفاسير:

external-link copy
24 : 42

اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا ۚ— فَاِنْ یَّشَاِ اللّٰهُ یَخْتِمْ عَلٰی قَلْبِكَ ؕ— وَیَمْحُ اللّٰهُ الْبَاطِلَ وَیُحِقُّ الْحَقَّ بِكَلِمٰتِهٖ ؕ— اِنَّهٗ عَلِیْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ ۟

(இந்த தூதர்) அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டினார் என்று இவர்கள் கூறுகிறார்களா? ஆக, (நபியே! நீர் அப்படி பொய் கூறி இருந்தால்) அல்லாஹ் நாடினால் உமது உள்ளத்தின் மீது அவன் முத்திரையிட்டு விடுவான். (இந்த வேதத்தை நீர் மறந்துவிடுவீர்.) இன்னும், அல்லாஹ் பொய்யை அழித்து விடுவான்; தனது கட்டளைகளைக் கொண்டு சத்தியத்தை உறுதிப்படுத்துவான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளதை நன்கறிந்தவன் ஆவான். info
التفاسير:

external-link copy
25 : 42

وَهُوَ الَّذِیْ یَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِهٖ وَیَعْفُوْا عَنِ السَّیِّاٰتِ وَیَعْلَمُ مَا تَفْعَلُوْنَ ۟ۙ

அவன் தனது அடியார்களிடமிருந்து (அவர்கள்) திருந்தி பாவமன்னிப்பு கோருவதை ஏற்றுக் கொள்கிறான்; இன்னும், (திருந்தியவர்களின்) பாவங்களை அவன் முற்றிலுமாக மன்னிக்கிறான்; இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான். info
التفاسير:

external-link copy
26 : 42

وَیَسْتَجِیْبُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَیَزِیْدُهُمْ مِّنْ فَضْلِهٖ ؕ— وَالْكٰفِرُوْنَ لَهُمْ عَذَابٌ شَدِیْدٌ ۟

நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களுக்கு (அவர்களில் சிலர் சிலருக்காக கேட்கின்ற துஆக்களுக்கு) அவன் பதில் அளிக்கிறான் (-அந்த துஆக்களை அங்கீகரிக்கிறான்). இன்னும், தனது அருளிலிருந்து அவர்களுக்கு (வெகுமதிகளை) அதிகப்படுத்துவான். எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு. info
التفاسير:

external-link copy
27 : 42

وَلَوْ بَسَطَ اللّٰهُ الرِّزْقَ لِعِبَادِهٖ لَبَغَوْا فِی الْاَرْضِ وَلٰكِنْ یُّنَزِّلُ بِقَدَرٍ مَّا یَشَآءُ ؕ— اِنَّهٗ بِعِبَادِهٖ خَبِیْرٌ بَصِیْرٌ ۟

அல்லாஹ் தனது அடியார்களுக்கு வாழ்வாதாரத்தை முற்றிலும் விசாலமாக்கினால் அவர்கள் பூமியில் எல்லை மீறி விடுவார்கள். என்றாலும், தான் எதை நாடுகிறானோ அதை ஓர் அளவுடன் இறக்குகிறான். நிச்சயமாக அவன் தன் அடியார்களை ஆழ்ந்தறிபவன், உற்று நோக்குபவன் ஆவான். info
التفاسير:

external-link copy
28 : 42

وَهُوَ الَّذِیْ یُنَزِّلُ الْغَیْثَ مِنْ بَعْدِ مَا قَنَطُوْا وَیَنْشُرُ رَحْمَتَهٗ ؕ— وَهُوَ الْوَلِیُّ الْحَمِیْدُ ۟

(மழை வராது என்று) அவர்கள் நிராசை அடைந்த பின்னர் அவன்தான் மழையை இறக்குகிறான். இன்னும், தனது அருளை (பூமியில்) பரப்புகிறான். அவன்தான் (உண்மையான) பாதுகாவலன், மகா புகழாளன். info
التفاسير:

external-link copy
29 : 42

وَمِنْ اٰیٰتِهٖ خَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَثَّ فِیْهِمَا مِنْ دَآبَّةٍ ؕ— وَهُوَ عَلٰی جَمْعِهِمْ اِذَا یَشَآءُ قَدِیْرٌ ۟۠

வானங்களும் பூமியும் படைக்கப்பட்டதும் அவ்விரண்டில் உயிரினங்களில் எவற்றை அவன் (படைத்து, பல பகுதிகளில்) பரத்தி இருக்கிறானோ அவையும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவைதான். இன்னும், அவன் நாடும்போது அவர்களை (மறுமையில்) ஒன்று சேர்ப்பதற்கும் அவன் பேராற்றலுடையவன் ஆவான். info
التفاسير:

external-link copy
30 : 42

وَمَاۤ اَصَابَكُمْ مِّنْ مُّصِیْبَةٍ فَبِمَا كَسَبَتْ اَیْدِیْكُمْ وَیَعْفُوْا عَنْ كَثِیْرٍ ۟ؕ

சோதனைகளில் எது உங்களுக்கு ஏற்பட்டதோ அது உங்கள் கரங்கள் செய்தவற்றினால்தான் (ஏற்பட்டது). இன்னும் (நீங்கள் செய்த) அதிகமான தவறுகளை அவன் முற்றிலும் மன்னித்து விடுகிறான். (ஆகவே, உங்களுக்கு தண்டனையை இறக்குவதில்லை.) info
التفاسير:

external-link copy
31 : 42

وَمَاۤ اَنْتُمْ بِمُعْجِزِیْنَ فِی الْاَرْضِ ۖۚ— وَمَا لَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ مِنْ وَّلِیٍّ وَّلَا نَصِیْرٍ ۟

நீங்கள் இந்த பூமியில் (அல்லாஹ்வை பலவீனப்படுத்த முடியாது. அவனது பிடியை விட்டும்) தப்பித்துவிட முடியாது. அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு பாதுகாவலர் எவரும் இல்லை, இன்னும், உதவியாளர் எவரும் இல்லை. info
التفاسير: