Traducción de los significados del Sagrado Corán - Traducción al tamil - Omar Sharif

Número de página:close

external-link copy
16 : 42

وَالَّذِیْنَ یُحَآجُّوْنَ فِی اللّٰهِ مِنْ بَعْدِ مَا اسْتُجِیْبَ لَهٗ حُجَّتُهُمْ دَاحِضَةٌ عِنْدَ رَبِّهِمْ وَعَلَیْهِمْ غَضَبٌ وَّلَهُمْ عَذَابٌ شَدِیْدٌ ۟

இன்னும், எவர்கள் அல்லாஹ்வின் (மார்க்க) விஷயத்தில், - அவனை (மக்கள்) ஏற்றுக் கொண்டதன் பின்னர் - தர்க்கம் செய்கிறார்களோ அவர்களின் தர்க்கம் எல்லாம் அல்லாஹ்விடம் வீணானதே (அழிந்துபோகக்கூடியதே) ஆகும்! இன்னும், அவர்கள் மீது (அல்லாஹ்வின்) கோபம் இறங்கும். இன்னும், அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு. info
التفاسير:

external-link copy
17 : 42

اَللّٰهُ الَّذِیْۤ اَنْزَلَ الْكِتٰبَ بِالْحَقِّ وَالْمِیْزَانَ ؕ— وَمَا یُدْرِیْكَ لَعَلَّ السَّاعَةَ قَرِیْبٌ ۟

அல்லாஹ், உண்மையுடன் கூடிய இந்த வேதத்தையும் தராசையும் இறக்கி (நீதமாக நடக்க வேண்டும் என்பதை சட்டமாக்கி)னான். மறுமை மிக சமீபமானது என்று (நபியே!) உமக்கு யார் அறிவிப்பார்? (அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிவிக்க முடியாது.) info
التفاسير:

external-link copy
18 : 42

یَسْتَعْجِلُ بِهَا الَّذِیْنَ لَا یُؤْمِنُوْنَ بِهَا ۚ— وَالَّذِیْنَ اٰمَنُوْا مُشْفِقُوْنَ مِنْهَا ۙ— وَیَعْلَمُوْنَ اَنَّهَا الْحَقُّ ؕ— اَلَاۤ اِنَّ الَّذِیْنَ یُمَارُوْنَ فِی السَّاعَةِ لَفِیْ ضَلٰلٍۢ بَعِیْدٍ ۟

அதை (-மறுமையை) நம்பிக்கை கொள்ளாதவர்கள் அதை அவசரமாகத் தேடுகிறார்கள். (அதை) நம்பிக்கை கொண்டவர்கள் அதை பயப்படுகிறார்கள். இன்னும், நிச்சயமாக அது உண்மை(யாக நிகழக்கூடியது)தான் என்று அவர்கள் அறிவார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக மறுமை விஷயத்தில் தர்க்கிப்பவர்கள் வெகு தூரமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள். info
التفاسير:

external-link copy
19 : 42

اَللّٰهُ لَطِیْفٌ بِعِبَادِهٖ یَرْزُقُ مَنْ یَّشَآءُ ۚ— وَهُوَ الْقَوِیُّ الْعَزِیْزُ ۟۠

அல்லாஹ், தன் அடியார்கள் மீது மிக கருணை(யும் தயவும்) உடையவன். அவன், தான் நாடுகிறவர்களுக்கு உணவளிக்கிறான். அவன்தான் மிக வலிமை உள்ளவன், (யாவரையும்) மிகைத்தவன். info
التفاسير:

external-link copy
20 : 42

مَنْ كَانَ یُرِیْدُ حَرْثَ الْاٰخِرَةِ نَزِدْ لَهٗ فِیْ حَرْثِهٖ ۚ— وَمَنْ كَانَ یُرِیْدُ حَرْثَ الدُّنْیَا نُؤْتِهٖ مِنْهَا ۙ— وَمَا لَهٗ فِی الْاٰخِرَةِ مِنْ نَّصِیْبٍ ۟

யார் மறுமையின் விளைச்சலை நாடுகிறவராக இருக்கிறாரோ அவருக்கு அவருடைய விளைச்சலில் (-நன்மைக்குரிய கூலியில்) நாம் அதிகப்படுத்துவோம். இன்னும், யார் (தனது நல்லமல்களுக்கு) உலகத்தின் விளைச்சலை நாடுகிறவராக இருக்கிறாரோ அவருக்கு அ(வர் விரும்புகிற உலக செல்வத்)திலிருந்து நாம் கொடுப்போம். அவருக்கு மறுமையில் (அவர் செய்த நன்மையிலிருந்து) எவ்வித பங்கும் இல்லை. info
التفاسير:

external-link copy
21 : 42

اَمْ لَهُمْ شُرَكٰٓؤُا شَرَعُوْا لَهُمْ مِّنَ الدِّیْنِ مَا لَمْ یَاْذَنْ بِهِ اللّٰهُ ؕ— وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِیَ بَیْنَهُمْ ؕ— وَاِنَّ الظّٰلِمِیْنَ لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟

(அல்லாஹ்வின்) மார்க்கத்தில் அல்லாஹ் எதை கட்டளை இடவில்லையோ அதை இவர்களுக்கு சட்டமாக (-மார்க்கமாக) ஆக்கித்தருகின்ற தெய்வங்களும் இவர்களுக்கு உண்டா? (இவர்களுக்கு தண்டனை மறுமையில்தான் என்ற) தீர்ப்பின் வாக்கு மட்டும் இல்லை என்றால் அவர்களுக்கு மத்தியில் (இவ்வுலகிலேயே) தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்கள், துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு. info
التفاسير:

external-link copy
22 : 42

تَرَی الظّٰلِمِیْنَ مُشْفِقِیْنَ مِمَّا كَسَبُوْا وَهُوَ وَاقِعٌ بِهِمْ ؕ— وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فِیْ رَوْضٰتِ الْجَنّٰتِ ۚ— لَهُمْ مَّا یَشَآءُوْنَ عِنْدَ رَبِّهِمْ ؕ— ذٰلِكَ هُوَ الْفَضْلُ الْكَبِیْرُ ۟

(நபியே!) அநியாயக்காரர்களை - அவர்கள் செய்தவற்றின் (-பாவங்களின்) காரணமாக (மறுமை நாளில் அல்லாஹ்வின் தண்டனையை) - பயந்தவர்களாக நீர் பார்ப்பீர்! அ(ந்த தண்டனையான)து அவர்களுக்கு நிகழ்ந்தே தீரும். இன்னும், நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தவர்கள் சொர்க்கங்களின் சோலைகளில் இருப்பார்கள். அவர்கள் நாடுகின்றவை (எல்லாம்) அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு கிடைக்கும். இதுதான் மிகப் பெரிய சிறப்பாகும். info
التفاسير: