Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation - Omar Sharif

Page Number:close

external-link copy
24 : 29

فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوا اقْتُلُوْهُ اَوْ حَرِّقُوْهُ فَاَنْجٰىهُ اللّٰهُ مِنَ النَّارِ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یُّؤْمِنُوْنَ ۟

ஆக, (இப்ராஹீம் தமது மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்தபோது) “அவரைக் கொல்லுங்கள்! அல்லது, அவரை எரித்து விடுங்கள்” என்றே தவிர அவருடைய மக்களின் பதில் இல்லை. ஆக, அல்லாஹ் அவரை நெருப்பிலிருந்து பாதுகாத்தான். நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன. info
التفاسير:

external-link copy
25 : 29

وَقَالَ اِنَّمَا اتَّخَذْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اَوْثَانًا ۙ— مَّوَدَّةَ بَیْنِكُمْ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۚ— ثُمَّ یَوْمَ الْقِیٰمَةِ یَكْفُرُ بَعْضُكُمْ بِبَعْضٍ وَّیَلْعَنُ بَعْضُكُمْ بَعْضًا ؗ— وَّمَاْوٰىكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟ۗۖ

இன்னும் (இப்ராஹீம்) கூறினார்: அல்லாஹ்வை அன்றி நீங்கள் (வணங்குவதற்காக) சிலைகளை ஏற்படுத்தியதெல்லாம் இவ்வுலக வாழ்வில் உங்களுக்கு மத்தியில் (சிலைகள் மீது நீங்கள் வைத்துள்ள கண்மூடித்தனமான) அன்பினால்தான். பிறகு, மறுமை நாளில் உங்களில் சிலர் (-வணங்கப்பட்டவர்கள்) சிலரை (வணங்கியவர்களை) மறுத்து விடுவார்கள். இன்னும், உங்களில் சிலர் (-வழிகெட்டவர்கள்) சிலரை (-வழிகெடுத்தவர்களை) சபிப்பார்கள். இன்னும், உங்கள் (அனைவரின்) தங்குமிடம் நரகம்தான். உங்களுக்கு உதவியாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
26 : 29

فَاٰمَنَ لَهٗ لُوْطٌ ۘ— وَقَالَ اِنِّیْ مُهَاجِرٌ اِلٰی رَبِّیْ ؕ— اِنَّهٗ هُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟

ஆக, அவரை லூத் நம்பிக்கை கொண்டார். இன்னும், (-இப்ராஹீம்) கூறினார்: நிச்சயமாக நான் (என் ஊரை விட்டு) வெளியேறி என் இறைவனின் பக்கம் (அவன் எனக்கு கட்டளையிட்டபடி ஷாம் தேசம் நோக்கி) செல்கிறேன். நிச்சயமாக அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான். info
التفاسير:

external-link copy
27 : 29

وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَیَعْقُوْبَ وَجَعَلْنَا فِیْ ذُرِّیَّتِهِ النُّبُوَّةَ وَالْكِتٰبَ وَاٰتَیْنٰهُ اَجْرَهٗ فِی الدُّنْیَا ۚ— وَاِنَّهٗ فِی الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِیْنَ ۟

இன்னும், நாம் அவருக்கு (மகனாக) இஸ்ஹாக்கையும் (பேரனாக) யஅகூபையும் வழங்கினோம். இன்னும், அவரது சந்ததிகளில் நாம் நபித்துவத்தையும் வேதங்களையும் ஆக்கினோம். இன்னும், அவருக்கு அவருடைய (பொறுமைக்கான) கூலியை இம்மையில் நாம் கொடுத்தோம். நிச்சயமாக அவர் மறுமையில் நல்லவர்களில் இருப்பார். (அங்கும் அவருக்கு நிறைவான கூலி கிடைக்கும்.) info
التفاسير:

external-link copy
28 : 29

وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اِنَّكُمْ لَتَاْتُوْنَ الْفَاحِشَةَ ؗ— مَا سَبَقَكُمْ بِهَا مِنْ اَحَدٍ مِّنَ الْعٰلَمِیْنَ ۟

இன்னும் லூத்தை (தூதராக அனுப்பினோம்). அவர் தனது மக்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! “நிச்சயமாக நீங்கள் மானக்கேடான செயலை செய்கிறீர்கள். அகிலத்தாரில் ஒருவரும் இ(ந்த அசிங்கத்)தை உங்களுக்கு முன் செய்ததில்லை.” info
التفاسير:

external-link copy
29 : 29

اَىِٕنَّكُمْ لَتَاْتُوْنَ الرِّجَالَ وَتَقْطَعُوْنَ السَّبِیْلَ ۙ۬— وَتَاْتُوْنَ فِیْ نَادِیْكُمُ الْمُنْكَرَ ؕ— فَمَا كَانَ جَوَابَ قَوْمِهٖۤ اِلَّاۤ اَنْ قَالُوا ائْتِنَا بِعَذَابِ اللّٰهِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِیْنَ ۟

“நிச்சயமாக நீங்கள் ஆண்களிடம் உடலுறவு கொள்கிறீர்களா? பாதைகளை (மக்கள் பயன்படுத்த முடியாமல்) தடுக்கிறீர்கள். உங்கள் சபைகளில் கெட்ட செயலை செய்கிறீர்கள்.” ஆக, அவருடைய மக்களின் பதில் இருக்கவில்லை, “நீர் உண்மையாளர்களில் இருந்தால் அல்லாஹ்வின் தண்டனையை எங்களிடம் கொண்டு வருவீராக” என்று அவர்கள் கூறியதைத் தவிர. info
التفاسير:

external-link copy
30 : 29

قَالَ رَبِّ انْصُرْنِیْ عَلَی الْقَوْمِ الْمُفْسِدِیْنَ ۟۠

அவர் கூறினார்: “என் இறைவா! கெட்ட செயல்களை செய்கிற மக்களுக்கு எதிராக எனக்கு நீ உதவி செய்!” info
التفاسير: