Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation - Omar Sharif

Page Number:close

external-link copy
7 : 29

وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُكَفِّرَنَّ عَنْهُمْ سَیِّاٰتِهِمْ وَلَنَجْزِیَنَّهُمْ اَحْسَنَ الَّذِیْ كَانُوْا یَعْمَلُوْنَ ۟

இன்னும், எவர்கள் (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு, நன்மைகளைச் செய்தார்களோ - அவர்களை விட்டும் அவர்களின் பாவங்களை நிச்சயமாக நாம் நீக்கி விடுவோம். இன்னும், அவர்கள் (இணைவைப்பில்) செய்து கொண்டிருந்ததை விட (ஈமான் கொண்டதற்கு பின்னர் அவர்கள் செய்த) மிகச் சிறந்த நன்மைகளுக்கு நாம் அவர்களுக்கு நற்கூலி தருவோம். (இன்னும் இணைவைப்பில் அவர்கள் செய்த பாவங்களையும் மன்னித்துவிடுவோம்.) info
التفاسير:

external-link copy
8 : 29

وَوَصَّیْنَا الْاِنْسَانَ بِوَالِدَیْهِ حُسْنًا ؕ— وَاِنْ جٰهَدٰكَ لِتُشْرِكَ بِیْ مَا لَیْسَ لَكَ بِهٖ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا ؕ— اِلَیَّ مَرْجِعُكُمْ فَاُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟

மனிதனுக்கு, அவன் தனது பெற்றோரிடம் அழகிய முறையில் நடக்க வேண்டும் என நாம் உபதேசித்தோம். இன்னும், உனக்கு எதைப் பற்றி அறிவு இல்லையோ அதை எனக்கு நீ இணையாக்(கி வணங்)கும்படி அவர்கள் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்கு நீ கீழ்ப்படியாதே! என் பக்கமே உங்கள் (அனைவரின்) மீளுதல் இருக்கிறது. ஆக, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நான் உங்களுக்கு அறிவிப்பேன். info
التفاسير:

external-link copy
9 : 29

وَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَنُدْخِلَنَّهُمْ فِی الصّٰلِحِیْنَ ۟

இன்னும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தார்களோ - அவர்களை நாம் நிச்சயமாக நல்லோரில் (நல்லோர் நுழையுமிடத்தில்) பிரவேசிக்கவைப்போம். info
التفاسير:

external-link copy
10 : 29

وَمِنَ النَّاسِ مَنْ یَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ فَاِذَاۤ اُوْذِیَ فِی اللّٰهِ جَعَلَ فِتْنَةَ النَّاسِ كَعَذَابِ اللّٰهِ ؕ— وَلَىِٕنْ جَآءَ نَصْرٌ مِّنْ رَّبِّكَ لَیَقُوْلُنَّ اِنَّا كُنَّا مَعَكُمْ ؕ— اَوَلَیْسَ اللّٰهُ بِاَعْلَمَ بِمَا فِیْ صُدُوْرِ الْعٰلَمِیْنَ ۟

இன்னும், நாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டோம் என்று கூறுபவர்களும் மக்களில் இருக்கிறார்கள். ஆக, அவர் அல்லாஹ்வின் விஷயத்தில் (-அவனை ஏற்றுக்கொண்டதற்காக) துன்புறுத்தப்பட்டால் மக்களுடைய சோதனையை அல்லாஹ்வின் தண்டனையைப் போன்று ஆக்கிவிடுகிறார். இன்னும், உமது இறைவனிடமிருந்து ஓர் உதவி வந்தால், “நிச்சயமாக நாம் உங்களுடன் இருக்கிறோம்” என்று கூறுகிறார்கள். அகிலத்தாரின் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் மிக அறிந்தவனாக இல்லையா? info
التفاسير:

external-link copy
11 : 29

وَلَیَعْلَمَنَّ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا وَلَیَعْلَمَنَّ الْمُنٰفِقِیْنَ ۟

இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களை நன்கறிவான். இன்னும், நிச்சயமாக நயவஞ்சகர்களை நன்கறிவான். info
التفاسير:

external-link copy
12 : 29

وَقَالَ الَّذِیْنَ كَفَرُوْا لِلَّذِیْنَ اٰمَنُوا اتَّبِعُوْا سَبِیْلَنَا وَلْنَحْمِلْ خَطٰیٰكُمْ ؕ— وَمَا هُمْ بِحٰمِلِیْنَ مِنْ خَطٰیٰهُمْ مِّنْ شَیْءٍ ؕ— اِنَّهُمْ لَكٰذِبُوْنَ ۟

நம்பிக்கையாளர்களை நோக்கி, “நீங்கள் எங்கள் மார்க்கத்தை பின்பற்றுங்கள்! நாங்கள் உங்கள் தவறுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறோம்” என்று நிராகரித்தவர்கள் கூறினார்கள். அவர்களுடைய (-நம்பிக்கையாளர்களுடைய) தவறுகளில் எதற்கும் அவர்கள் பொறுப்பேற்பவர்கள் அல்லர். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான். info
التفاسير:

external-link copy
13 : 29

وَلَیَحْمِلُنَّ اَثْقَالَهُمْ وَاَثْقَالًا مَّعَ اَثْقَالِهِمْ ؗ— وَلَیُسْـَٔلُنَّ یَوْمَ الْقِیٰمَةِ عَمَّا كَانُوْا یَفْتَرُوْنَ ۟۠

இன்னும், அவர்கள் தங்கள் சுமைகளையும் தங்களது சுமைகளுடன் (தங்களால் வழிகெடுக்கப்பட்டவர்களின்) சுமைகளையும் நிச்சயம் சுமப்பார்கள். இன்னும், அவர்கள் பொய்யை இட்டுக் கட்டிக் கொண்டிருந்தது பற்றி மறுமை நாளில் நிச்சயம் விசாரிக்கப்படுவார்கள். info
التفاسير:

external-link copy
14 : 29

وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖ فَلَبِثَ فِیْهِمْ اَلْفَ سَنَةٍ اِلَّا خَمْسِیْنَ عَامًا ؕ— فَاَخَذَهُمُ الطُّوْفَانُ وَهُمْ ظٰلِمُوْنَ ۟

திட்டவட்டமாக நாம் நூஹை அவரது மக்களிடம் அனுப்பினோம். ஆக, அவர் அவர்களுடன் ஆயிரத்திற்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக தங்கி இருந்தார். ஆக, அவர்கள் அநியாயக்காரர்களாக இருக்கும் நிலையில் அவர்களை வெள்ளப்பிரளயம் பிடித்தது. info
التفاسير: