Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation - Abdulhamid Albaqoi

Page Number:close

external-link copy
49 : 2

وَاِذْ نَجَّیْنٰكُمْ مِّنْ اٰلِ فِرْعَوْنَ یَسُوْمُوْنَكُمْ سُوْٓءَ الْعَذَابِ یُذَبِّحُوْنَ اَبْنَآءَكُمْ وَیَسْتَحْیُوْنَ نِسَآءَكُمْ ؕ— وَفِیْ ذٰلِكُمْ بَلَآءٌ مِّنْ رَّبِّكُمْ عَظِیْمٌ ۟

49. மேலும், உங்களுக்குத் தீய நோவினை செய்து கொண்டிருந்த ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிலிருந்து நாம் உங்களை விடுவித்தோம். அவர்கள் உங்கள் ஆண் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு உங்கள் பெண் (பிள்ளை)களை (மட்டும்) உயிருடன் வாழவிட்டு வந்தார்கள். அதில் உங்கள் இறைவனுடைய ஒரு பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது. info
التفاسير:

external-link copy
50 : 2

وَاِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ فَاَنْجَیْنٰكُمْ وَاَغْرَقْنَاۤ اٰلَ فِرْعَوْنَ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ ۟

50. மேலும், உங்களுக்காகக் கடலைப் பிளந்து நாம் உங்களை காப்பாற்றி (உங்களைப் பின்தொடர்ந்து வந்த) ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே மூழ்கடித்தோம். info
التفاسير:

external-link copy
51 : 2

وَاِذْ وٰعَدْنَا مُوْسٰۤی اَرْبَعِیْنَ لَیْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهٖ وَاَنْتُمْ ظٰلِمُوْنَ ۟

51. இன்னும் (தவ்றாத் வேதத்தைக் கொடுக்க) மூஸாவுக்கு நாம் நாற்பது இரவுகளை வாக்களித்திருந்தோம். (அதற்காக அவர் சென்ற) பின்னர் (அவர் திரும்பி வருவதற் குள்ளாகவே) நீங்கள் வரம்புமீறி ஒரு காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள். info
التفاسير:

external-link copy
52 : 2

ثُمَّ عَفَوْنَا عَنْكُمْ مِّنْ بَعْدِ ذٰلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟

52. நீங்கள் நன்றி செலுத்துவீர்களென்று இதற்குப் பின்னும் நாம் உங்களை மன்னித்தோம். info
التفاسير:

external-link copy
53 : 2

وَاِذْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَالْفُرْقَانَ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ ۟

53. நீங்கள் நேர்வழி பெறுவதற்காக மூஸாவுக்கு (தவ்றாத் என்னும்) வேதத்தையும், பிரித்து அறிவிக்கக்கூடிய (சட்ட திட்டத்)தையும் நாம் கொடுத்தோம். info
التفاسير:

external-link copy
54 : 2

وَاِذْ قَالَ مُوْسٰی لِقَوْمِهٖ یٰقَوْمِ اِنَّكُمْ ظَلَمْتُمْ اَنْفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوْبُوْۤا اِلٰی بَارِىِٕكُمْ فَاقْتُلُوْۤا اَنْفُسَكُمْ ؕ— ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ عِنْدَ بَارِىِٕكُمْ ؕ— فَتَابَ عَلَیْكُمْ ؕ— اِنَّهٗ هُوَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟

54. இன்னும் (நினைத்துப் பாருங்கள்:) மூஸா தன் சமூகத்தாரை நோக்கி “என் சமூகத்தாரே! நீங்கள் காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டதனால் (பகுத்தறிவுடைய) நீங்கள் (கேவலம் ஒரு மிருகத்தை வணங்கி) உண்மையாகவே உங்களுக்கு தீங்கிழைத்துக் கொண்டீர்கள். நீங்கள் மனம் வருந்தி உங்களை படைத்தவனிடம் மீண்டு உங்(களிலுள்ள வரம்பு மீறியவர்)களை நீங்களே கொன்று விடுங்கள். இதுதான் உங்களை படைத்தவனிடம் உங்களுக்கு நன்மை தரும்'' என்று கூறினார். ஆகவே, (அவ்வாறே நீங்களும் செய்ததனால்) உங்களை (அல்லாஹ்) மன்னித்து விட்டான். நிச்சயமாக அவன்தான் மிக மன்னிப்பவன், மகாக் கருணையாளன் ஆவான். info
التفاسير:

external-link copy
55 : 2

وَاِذْ قُلْتُمْ یٰمُوْسٰی لَنْ نُّؤْمِنَ لَكَ حَتّٰی نَرَی اللّٰهَ جَهْرَةً فَاَخَذَتْكُمُ الصّٰعِقَةُ وَاَنْتُمْ تَنْظُرُوْنَ ۟

55. மேலும், நீங்கள் மூஸாவை நோக்கி “நாங்கள் அல்லாஹ்வைக் கண்கூடாக காணும்வரை உங்களை நம்பவே மாட்டோம்'' என்று கூறியபொழுது, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்களை (பூகம்பம் போன்ற) பெரும் சப்தம் பிடித்துக் கொண்டது. info
التفاسير:

external-link copy
56 : 2

ثُمَّ بَعَثْنٰكُمْ مِّنْ بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟

56. நீங்கள் (அந்த பெரும் சப்தத்தால்) இறந்து விட்டதற்குப் பின்னும் நீங்கள் நன்றி செலுத்துவீர்கள் என்பதற்காக உங்களை நாம் உயிர்ப்பித்தோம். info
التفاسير:

external-link copy
57 : 2

وَظَلَّلْنَا عَلَیْكُمُ الْغَمَامَ وَاَنْزَلْنَا عَلَیْكُمُ الْمَنَّ وَالسَّلْوٰی ؕ— كُلُوْا مِنْ طَیِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ ؕ— وَمَا ظَلَمُوْنَا وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟

57. மேலும், நாம் உங்களுக்கு மேகம் நிழலிடும்படிச் செய்து, உங்களுக்கு (உணவாக) ‘மன்னு-ஸல்வா' (என்ற இருவகை உண)வையும் இறக்கி வைத்து (அவர்களை நோக்கி) “நாம் உங்களுக்கு அளித்துவரும் பரிசுத்தமான இவற்றைப் புசித்து வாருங்கள்'' என்று கட்டளையிட்டிருந்தோம். (எனினும் நம் கட்டளையை மீறிய) அவர்கள் நமக்கொன்றும் தீங்கிழைத்து விடவில்லை; தங்களுக்குத்தாமே அவர்கள் தீங்கிழைத்துக் கொண்டனர். info
التفاسير: