Translation of the Meanings of the Noble Qur'an - Tamil translation - Abdulhamid Albaqoi

Page Number:close

external-link copy
70 : 2

قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ یُبَیِّنْ لَّنَا مَا هِیَ ۙ— اِنَّ الْبَقَرَ تَشٰبَهَ عَلَیْنَا ؕ— وَاِنَّاۤ اِنْ شَآءَ اللّٰهُ لَمُهْتَدُوْنَ ۟

70. அதற்கவர்கள் நிச்சயமாக அம்மாடு (எது என) எங்களுக்குச் சந்தேகமாக இருக்கிறது. அது எது? (வேலை செய்து பழகியதா) என எங்களுக்கு விவரித்து அறிவிக்கும்படி உமது இறைவனைக் கேட்பீராக. அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாங்கள் (இவ்விஷயத்தில்) நேர்வழி பெற்றுவிடுவோம்'' எனக் கூறினார்கள். info
التفاسير:

external-link copy
71 : 2

قَالَ اِنَّهٗ یَقُوْلُ اِنَّهَا بَقَرَةٌ لَّا ذَلُوْلٌ تُثِیْرُ الْاَرْضَ وَلَا تَسْقِی الْحَرْثَ ۚ— مُسَلَّمَةٌ لَّا شِیَةَ فِیْهَا ؕ— قَالُوا الْـٰٔنَ جِئْتَ بِالْحَقِّ ؕ— فَذَبَحُوْهَا وَمَا كَادُوْا یَفْعَلُوْنَ ۟۠

71. (அதற்கு மூஸா) “நிச்சயமாக அது பூமியில் உழவடிப்பதற்கும், பயிருக்குத் தண்ணீர் இறைப்பதற்கும் பயன்படுத்தப்படாத, அதில் அறவே வடுவில்லாத குறையற்ற ஒரு மாடு'' என்று அவன் கூறுகிறான் என்றார். (அதற்கு) அவர்கள் ''இப்பொழுதுதான் நீர் சரியான விவரம் கொண்டு வந்தீர்'' எனக் கூறிய பின்னும் அவர்கள் அறுக்க மனமின்றியே அதை அறுத்தார்கள். info
التفاسير:

external-link copy
72 : 2

وَاِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادّٰرَءْتُمْ فِیْهَا ؕ— وَاللّٰهُ مُخْرِجٌ مَّا كُنْتُمْ تَكْتُمُوْنَ ۟ۚ

72. நீங்கள் ஒருவனைக் கொலை செய்துவிட்டு (தப்பித்துக் கொள்ள) அதைப் பற்றி நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்த சமயத்தில் (அம்மாட்டை அறுக்கும்படிக் கட்டளையிட்டு கொலை விஷயத்தில்) நீங்கள் மறைத்து வைத்திருந்ததை அல்லாஹ் வெளியாக்கினான். info
التفاسير:

external-link copy
73 : 2

فَقُلْنَا اضْرِبُوْهُ بِبَعْضِهَا ؕ— كَذٰلِكَ یُحْیِ اللّٰهُ الْمَوْتٰی وَیُرِیْكُمْ اٰیٰتِهٖ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟

73. ஆகவே, அவர்களை நோக்கி (நீங்கள் அதை அறுத்து) ''அதில் ஒரு பாகத்தைக் கொண்டு (கொலையுண்ட) அவனை அடியுங்கள்'' என நாம் கூறினோம். (அவ்வாறு அடித்தவுடன் இறந்தவன் உயிர்பெற்றெழுந்து கொலையாளியை அறிவித்தான். அவன் உயிர்பெற்ற) இவ்வான்ற இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். மேலும், நீங்கள் அறிந்துகொள்வதற்காக அவன் தன் (ஆற்றலை அறிவிக்கக்கூடிய) அத்தாட்சிகளை உங்களுக்குக் காட்டுகிறான். info
التفاسير:

external-link copy
74 : 2

ثُمَّ قَسَتْ قُلُوْبُكُمْ مِّنْ بَعْدِ ذٰلِكَ فَهِیَ كَالْحِجَارَةِ اَوْ اَشَدُّ قَسْوَةً ؕ— وَاِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا یَتَفَجَّرُ مِنْهُ الْاَنْهٰرُ ؕ— وَاِنَّ مِنْهَا لَمَا یَشَّقَّقُ فَیَخْرُجُ مِنْهُ الْمَآءُ ؕ— وَاِنَّ مِنْهَا لَمَا یَهْبِطُ مِنْ خَشْیَةِ اللّٰهِ ؕ— وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟

74. இதற்குப் பின்னும் உங்கள் உள்ளங்கள் இறுகிவிட்டன. அவை கற்பாறைகளைப் போல் அல்லது அவற்றைவிடக் கடினமானவையாக இருக்கின்றன. (ஏனென்றால்) கற்பாறைகளிலும் தொடர்ந்து (தானாகவே) ஊற்றுகள் உதித்தோடிக் கொண்டிருப்பவையும் நிச்சயமாக உண்டு. பிளந்து அதிலிருந்து நீர் புறப்படக்கூடியவையும் அவற்றில் உண்டு. அல்லாஹ்வுடைய பயத்தால் (மலை மீதிருந்து) உருண்டு விழக் கூடியவையும் அவற்றில் உண்டு. (ஆனால், யூதர்களே! நீங்கள் தானாகவும் திருந்தவில்லை. நபிமார்களின் போதனைக்கும் செவிசாய்க்கவில்லை. அல்லாஹ்வுக்கும் பயப்படவில்லை.) உங்கள் செயலைப்பற்றி அல்லாஹ் பராமுகமாயில்லை. info
التفاسير:

external-link copy
75 : 2

اَفَتَطْمَعُوْنَ اَنْ یُّؤْمِنُوْا لَكُمْ وَقَدْ كَانَ فَرِیْقٌ مِّنْهُمْ یَسْمَعُوْنَ كَلٰمَ اللّٰهِ ثُمَّ یُحَرِّفُوْنَهٗ مِنْ بَعْدِ مَا عَقَلُوْهُ وَهُمْ یَعْلَمُوْنَ ۟

75. (நம்பிக்கையாளர்களே!) உங்(கள் வார்த்தை)களுக்காக இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள் என எதிர்பார்க்கிறீர்களா? அல்லாஹ்வின் வசனத்தைக் கேட்டு அதை நன்கு புரிந்த பின்னரும், (அதன் சரியான பொருளை) அறிந்துகொண்டே அதை மாற்றிவிடும் ஒரு பிரிவினரும் அவர்களில் இருந்தனர். info
التفاسير:

external-link copy
76 : 2

وَاِذَا لَقُوا الَّذِیْنَ اٰمَنُوْا قَالُوْۤا اٰمَنَّا ۖۚ— وَاِذَا خَلَا بَعْضُهُمْ اِلٰی بَعْضٍ قَالُوْۤا اَتُحَدِّثُوْنَهُمْ بِمَا فَتَحَ اللّٰهُ عَلَیْكُمْ لِیُحَآجُّوْكُمْ بِهٖ عِنْدَ رَبِّكُمْ ؕ— اَفَلَا تَعْقِلُوْنَ ۟

76. மேலும், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களைச் சந்தித்தால் (“தவ்றாத்தில் உங்கள் நபியைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. ஆதலால்,) நாங்களும் (அவரை) நம்பிக்கை கொள்கிறோம்'' எனக் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் தனித்தபொழுது ஒருவர் மற்றவரை நோக்கி “(உங்கள் வேதத்தில்) அல்லாஹ் உங்களுக்குத் தெரிவித்திருப்பதை அவர்களுக்கு நீங்கள் அறிவிக்கிறீர்களா? உங்கள் இறைவன் முன்பாக அதைக் கொண்டு அவர்கள் உங்களுடன் தர்க்கிப்பதற்காகவா? (அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்கள்.) இவ்வளவுகூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?'' என்று கூறுகின்றனர். info
التفاسير: