Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi.

external-link copy
129 : 4

وَلَنْ تَسْتَطِیْعُوْۤا اَنْ تَعْدِلُوْا بَیْنَ النِّسَآءِ وَلَوْ حَرَصْتُمْ فَلَا تَمِیْلُوْا كُلَّ الْمَیْلِ فَتَذَرُوْهَا كَالْمُعَلَّقَةِ ؕ— وَاِنْ تُصْلِحُوْا وَتَتَّقُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِیْمًا ۟

4.129. கணவர்களே! நீங்கள் என்னதான் விரும்பினாலும் உள்ளத்தில் ஏற்படும் அன்பில் உங்கள் மனைவியரிடையே உங்களால் முழுமையாக நீதிசெலுத்த முடியாது. சில சமயங்களில் அது உங்களின் விருப்பத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கும். ஆனால் நீங்கள் நேசிக்காத பெண்ணை முழுமையாகப் புறக்கணித்து- கணவனின் உரிமையைப் பெறாதவளாகவும் வேறு திருமணமும் செய்ய முடியாதவளாகவும் - விட்டுவிடாதீர்கள். உங்கள் மனம் விரும்பாத மனைவியரின் உரிமையை அளிப்பதற்கு உங்களை நீங்கள் தயார்படுத்தி உங்களிடையே சமாதானம் செய்துகொண்டு, அந்த மனைவியின் விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சினால் - நிச்சயமாக அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் உங்களின் விஷயத்தில் மிகுந்த கருணையாளனாகவும் இருக்கின்றான். info
التفاسير:
Bu səhifədə olan ayələrdən faydalar:
• استحباب المصالحة بين الزوجين عند المنازعة، وتغليب المصلحة بالتنازل عن بعض الحقوق إدامة لعقد الزوجية.
1. பிரச்சினை ஏற்படும்போது திருமண உறவை நிலைத்திருக்கச் செய்யும்பொருட்டு ஒருவருக்கொருவர் உரிமைகளை விட்டுக் கொடுத்து கணவன், மனைவி இருவரும் சமாதானம் செய்துகொள்வதே சிறந்ததாகும். info

• أوجب الله تعالى العدل بين الزوجات خاصة في الأمور المادية التي هي في مقدور الأزواج، وتسامح الشرع حين يتعذر العدل في الأمور المعنوية، كالحب والميل القلبي.
2. கணவனின் சக்திக்குட்பட்ட உலக விவகாரங்களில் மனைவியரிடையே நீதிசெலுத்துவதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். அன்பு நேசம் போன்ற நீதிசெலுத்தமுடியாத மனரீதியான செயல்பாடுகளில் நீதமாக நடப்பது சாத்தியமற்ற கட்டங்களில் மார்க்கம் விட்டுக்கொடுத்துள்ளது. info

• لا حرج على الزوجين في الفراق إذا تعذرت العِشْرة بينهما.
3. கணவன், மனைவி சேர்ந்து வாழ்வது சிரமமாக இருந்தால் இருவரும் பிரிந்துவிடுவது குற்றமாகாது. info

• الوصية الجامعة للخلق جميعًا أولهم وآخرهم هي الأمر بتقوى الله تعالى بامتثال الأوامر واجتناب النواهي.
4. அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகியிருப்பதன் மூலம் அல்லாஹ்வை அஞ்சவேண்டும் என்பதே, ஆரம்பம் முதல் இறுதிவரையுள்ள அனைத்து மனிதர்களுக்குமான பொருள்செறிந்த அறிவுரையாகும். info