Qurani Kərimin mənaca tərcüməsi - Qurani Kərimin müxtəsər tərfsiri - kitabının Tamil dilinə tərcüməsi.

external-link copy
12 : 3

قُلْ لِّلَّذِیْنَ كَفَرُوْا سَتُغْلَبُوْنَ وَتُحْشَرُوْنَ اِلٰی جَهَنَّمَ ؕ— وَبِئْسَ الْمِهَادُ ۟

3.12. தூதரே! பலதரப்பட்ட மதங்களில் உள்ள நிராகரிப்பாளர்களிடம் கூறுவீராக: “நம்பிக்கையாளர்கள் உங்களை மிகைத்துவிடுவார்கள். நீங்கள் நிராகரித்த நிலையிலேயே இறந்தும் விடுவீர்கள். அல்லாஹ் நரக நெருப்பில் உங்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டுவான். அது உங்களுக்கு மோசமான தங்குமிடமாகும்.” info
التفاسير:
Bu səhifədə olan ayələrdən faydalar:
• أن غرور الكفار بأموالهم وأولادهم لن يغنيهم يوم القيامة من عذاب الله تعالى إذا نزل بهم.
1. நிராகரிப்பாளர்கள் தங்களின் செல்வங்களைக் கொண்டும் பிள்ளைகளைக் கொண்டும் பெருமையடித்தாலும் அது மறுமைநாளில் அல்லாஹ்வின் தண்டனையை விட்டும் அவர்களைக் காப்பாற்றாது. info

• النصر حقيقة لا يتعلق بمجرد العدد والعُدة، وانما بتأييد الله تعالى وعونه.
2. உண்மையான வெற்றி வெறும் ஆள்பலம் ஆயுத பலத்தின் மூலம் கிடைக்காது. அது அல்லாஹ்வின் உதவியால் மாத்திரமே கிடைக்கும். info

• زَيَّن الله تعالى للناس أنواعًا من شهوات الدنيا ليبتليهم، وليعلم تعالى من يقف عند حدوده ممن يتعداها.
3. மக்களில் தன்னுடைய வரம்புகளைப் பேணுபவர் யார் என்பதை அறிவதற்காகவும் அவர்களைச் சோதிப்பதற்காகவும் அல்லாஹ் பலவித உலக இன்பங்களை அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டியுள்ளான். info

• كل نعيم الدنيا ولذاتها قليل زائل، لا يقاس بما في الآخرة من النعيم العظيم الذي لا يزول.
4. இவ்வுலக இன்பங்கள் அனைத்தும் அற்பமானவை மற்றும் அழியக்கூடியவை. இதனை மறுமையில் கிடைக்கும் நிரந்தர இன்பங்களுடன் ஒப்பிட முடியாது. info