Qurani Kərimin mənaca tərcüməsi - Tamil dilinə tərcümə- Əbdülhəmid Baqavi.

Səhifənin rəqəmi:close

external-link copy
68 : 25

وَالَّذِیْنَ لَا یَدْعُوْنَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ وَلَا یَقْتُلُوْنَ النَّفْسَ الَّتِیْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَقِّ وَلَا یَزْنُوْنَ ۚؕ— وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ یَلْقَ اَثَامًا ۟ۙ

68. அவர்கள் அல்லாஹ்வுடன் வேறொரு கடவுளை அழைக்க மாட்டார்கள். (கொலை செய்யக் கூடாதென்று) அல்லாஹ் தடுத்திருக்கும் எம்மனிதனையும் அவர்கள் நியாயமின்றிக் கொலை செய்ய மாட்டார்கள்; விபசாரமும் செய்ய மாட்டார்கள். ஆகவே, எவனேனும் இத்தகைய தீய காரியங்களைச் செய்ய முற்பட்டால், அவன் (அதற்குரிய) தண்டனையை அடைய வேண்டியதுதான். info
التفاسير:

external-link copy
69 : 25

یُّضٰعَفْ لَهُ الْعَذَابُ یَوْمَ الْقِیٰمَةِ وَیَخْلُدْ فِیْهٖ مُهَانًا ۟ۗۖ

69. மறுமை நாளிலோ அவனுடைய வேதனை இரட்டிப்பாக ஆக்கப்பட்டு இழிவுபட்டவனாக அந்த வேதனையில் என்றென்றும் தங்கிவிடுவான். info
التفاسير:

external-link copy
70 : 25

اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَاُولٰٓىِٕكَ یُبَدِّلُ اللّٰهُ سَیِّاٰتِهِمْ حَسَنٰتٍ ؕ— وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِیْمًا ۟

70. ஆயினும், (அவர்களில்) எவர்கள் பாவத்திலிருந்து விலகி (மன்னிப்புக் கோரி) நம்பிக்கைகொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ, அத்தகையவர்கள் (முன்னர் செய்துவிட்ட) பாவங்களை அல்லாஹ் (மன்னிப்பது மட்டுமல்ல; அவற்றை) நன்மைகளாகவும் மாற்றிவிடுகிறான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் மகா கருணையுடையவனாகவும் இருக்கிறான். info
التفاسير:

external-link copy
71 : 25

وَمَنْ تَابَ وَعَمِلَ صَالِحًا فَاِنَّهٗ یَتُوْبُ اِلَی اللّٰهِ مَتَابًا ۟

71. ஆகவே, எவர்கள் கைசேதப்பட்டு (பாவத்திலிருந்து) விலகி மன்னிப்புக் கோருவதுடன், நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள், நிச்சயமாக முற்றிலும் அல்லாஹ்விடமே திரும்பிவிடுகின்றனர். info
التفاسير:

external-link copy
72 : 25

وَالَّذِیْنَ لَا یَشْهَدُوْنَ الزُّوْرَ ۙ— وَاِذَا مَرُّوْا بِاللَّغْوِ مَرُّوْا كِرَامًا ۟

72. இன்னும், எவர்கள் பொய் சாட்சி சொல்லாமலும் (வீணான காரியம் நடைபெறும் இடத்திற்குச் செல்லாமலும்) ஒருக்கால் (அத்தகைய இடத்திற்குச்) செல்லும்படி ஏற்பட்டு விட்டபோதிலும் (அதில் சம்பந்தப்படாது) கண்ணியமான முறையில் (அதைக் கடந்து) சென்று விடுகிறார்களோ அவர்களும், info
التفاسير:

external-link copy
73 : 25

وَالَّذِیْنَ اِذَا ذُكِّرُوْا بِاٰیٰتِ رَبِّهِمْ لَمْ یَخِرُّوْا عَلَیْهَا صُمًّا وَّعُمْیَانًا ۟

73. இன்னும் எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் குருடர்களைப் போலும் செவிடர்களைப் போலும் அதன் மீது (அடித்து) விழாமல்; (அதை முற்றிலும் நன்குணர்ந்து கொள்வதுடன் அதன்படி செயல்படுகிறார்களோ அவர்களும்) info
التفاسير:

external-link copy
74 : 25

وَالَّذِیْنَ یَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّیّٰتِنَا قُرَّةَ اَعْیُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِیْنَ اِمَامًا ۟

74. மேலும், எவர்கள் ‘‘எங்கள் இறைவனே! எங்கள் மனைவிகளையும், எங்கள் மக்களையும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியாக்கி வைத்தருள்வாயாக! இறையச்சமுள்ளவர்களுக்கு வழிகாட்டியாகவும் எங்களை நீ ஆக்குவாயாக!'' என்று பிரார்த்திப்பார்களோ அவர்களும்; info
التفاسير:

external-link copy
75 : 25

اُولٰٓىِٕكَ یُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوْا وَیُلَقَّوْنَ فِیْهَا تَحِیَّةً وَّسَلٰمًا ۟ۙ

75. ஆகிய இத்தகையவர்களுக்கு, அவர்கள் (பல நல்ல காரியங்களைச் செய்திருப்பதுடன் அவற்றைச் செய்யும்போது ஏற்பட்ட) சிரமங்களைச் சகித்துக் கொண்டதன் காரணமாக உயர்ந்த மாளிகைகள் (மறுமையில்) கொடுக்கப்படும். ‘‘ஸலாம் (உண்டாவதாக)'' என்று போற்றி அதில் அவர்கள் வரவேற்கப்படுவார்கள். info
التفاسير:

external-link copy
76 : 25

خٰلِدِیْنَ فِیْهَا ؕ— حَسُنَتْ مُسْتَقَرًّا وَّمُقَامًا ۟

76. என்றென்றும் அதில் தங்கிவிடுவார்கள். சிறிது நேரம் தங்குவதாயினும் சரி, என்றென்றும் தங்குவதாயினும் சரி, அது மிக்க (நல்ல) அழகான தங்குமிடம் ஆகும். info
التفاسير:

external-link copy
77 : 25

قُلْ مَا یَعْبَؤُا بِكُمْ رَبِّیْ لَوْلَا دُعَآؤُكُمْ ۚ— فَقَدْ كَذَّبْتُمْ فَسَوْفَ یَكُوْنُ لِزَامًا ۟۠

77. (நபியே!) கூறுவீராக: ‘‘ நீங்கள் என் இறைவனை(க் கெஞ்சிப்) பிரார்த்தனை செய்யாவிடில் (அதற்காக) அவன் உங்களைப் பொருட்படுத்தமாட்டான். ஏனென்றால், நீங்கள் (அவனுடைய வசனங்களை) நிச்சயமாக பொய்யாக்கிக் கொண்டே இருக்கிறீர்கள். ஆகவே, அதன் வேதனை (உங்களைக்) கண்டிப்பாகப் பிடித்தே தீரும். info
التفاسير: