আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- আব্দুল হামীদ বাকৱী

পৃষ্ঠা নং:close

external-link copy
195 : 3

فَاسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ اَنِّیْ لَاۤ اُضِیْعُ عَمَلَ عَامِلٍ مِّنْكُمْ مِّنْ ذَكَرٍ اَوْ اُ ۚ— بَعْضُكُمْ مِّنْ بَعْضٍ ۚ— فَالَّذِیْنَ هَاجَرُوْا وَاُخْرِجُوْا مِنْ دِیَارِهِمْ وَاُوْذُوْا فِیْ سَبِیْلِیْ وَقٰتَلُوْا وَقُتِلُوْا لَاُكَفِّرَنَّ عَنْهُمْ سَیِّاٰتِهِمْ وَلَاُدْخِلَنَّهُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۚ— ثَوَابًا مِّنْ عِنْدِ اللّٰهِ ؕ— وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الثَّوَابِ ۟

195. ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொண்டதுடன் ‘‘உங்களில் ஆண், பெண் (இரு பாலரிலும்) எவர்கள் நன்மை செய்தபோதிலும் நிச்சயமாக நான் அதை வீணாக்கிவிடமாட்டேன். (ஏனென்றால்) உங்களில் (ஆணோ பெண்ணோ) ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தான். (ஆகவே, கூலி கொடுப்பதில் ஆண், பெண் என்ற பாகுபாடில்லை. உங்களில்) எவர்கள் தங்கள் ஊரிலிருந்து வெளியேறியும், (பிறரால்) வெளியேற்றப்பட்டும், என் பாதையில் துன்புறுத்தப்பட்டும், போர் செய்து அதில் கொல்லப்பட்டும் (இறந்து) விடுகின்றனரோ அவர்களுடைய பாவங்களை அவர்களை விட்டு நிச்சயமாக நாம் அகற்றிடுவோம். தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களிலும் நிச்சயமாக நாம் அவர்களை நுழையவைப்போம்'' (என்று கூறுவான். இது) அல்லாஹ்வினால் (அவர்களுக்குக்) கொடுக்கப்படும் நன்மையாகும். அல்லாஹ்விடத்தில் (இன்னும் இதைவிட) மிக்க அழகான வெகுமதியும் இருக்கிறது. info
التفاسير:

external-link copy
196 : 3

لَا یَغُرَّنَّكَ تَقَلُّبُ الَّذِیْنَ كَفَرُوْا فِی الْبِلَادِ ۟ؕ

196. (நபியே!) நிராகரிப்பவர்கள் (பெரும் வியாபாரிகளாகவும் செல்வந்தர்களாகவும் ஆடம்பரமாக) நகரங்களில் சுற்றித்திரிந்து கொண்டிருப்பது உம்மை மயக்கி (ஏமாற்றி) விடவேண்டாம். info
التفاسير:

external-link copy
197 : 3

مَتَاعٌ قَلِیْلٌ ۫— ثُمَّ مَاْوٰىهُمْ جَهَنَّمُ ؕ— وَبِئْسَ الْمِهَادُ ۟

197. (இது) அற்ப சுகமாகும். இதற்குப் பின்னர் அவர்களின் தங்குமிடம் நரகம்தான். அது தங்குமிடங்களில் மிகக்கெட்டது. info
التفاسير:

external-link copy
198 : 3

لٰكِنِ الَّذِیْنَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا نُزُلًا مِّنْ عِنْدِ اللّٰهِ ؕ— وَمَا عِنْدَ اللّٰهِ خَیْرٌ لِّلْاَبْرَارِ ۟

198. ஆயினும், எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து (ஒழுங்காக நடந்து) கொள்கிறார்களோ அவர்களுக்கு தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்களுண்டு. அதில் அல்லாஹ்வின் விருந்தினராக (என்றென்றுமே) தங்கிவிடுவார்கள். நல்லோருக்காக அல்லாஹ்விடம் இருப்பது மிகச் சிறந்ததாகும். info
التفاسير:

external-link copy
199 : 3

وَاِنَّ مِنْ اَهْلِ الْكِتٰبِ لَمَنْ یُّؤْمِنُ بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَیْكُمْ وَمَاۤ اُنْزِلَ اِلَیْهِمْ خٰشِعِیْنَ لِلّٰهِ ۙ— لَا یَشْتَرُوْنَ بِاٰیٰتِ اللّٰهِ ثَمَنًا قَلِیْلًا ؕ— اُولٰٓىِٕكَ لَهُمْ اَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ ؕ— اِنَّ اللّٰهَ سَرِیْعُ الْحِسَابِ ۟

199. (நம்பிக்கையாளர்களே!) வேதத்தையுடையவர்களில் நிச்சயமாக (இப்படியும்) சிலர் இருக்கின்றனர்; அவர்கள் அல்லாஹ்வையும், உங்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், அவர்களுக்கு அருளப்பட்ட (மற்ற)வற்றையும் நம்பிக்கைகொண்டு அல்லாஹ்வுக்கும் பயந்து நடக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைக் கொடுத்து சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொள்வதுமில்லை. இவர்களுக்கு இவர்களுடைய கூலி இவர்களது இறைவனிடத்தில் (மகத்தானதாக) இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத்தீவிரமானவன். info
التفاسير:

external-link copy
200 : 3

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اصْبِرُوْا وَصَابِرُوْا وَرَابِطُوْا ۫— وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟۠

200. நம்பிக்கையாளர்களே! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். (எதிரிகளை விட) நீங்கள் அதிகம் சகித்துக் கொள்ளுங்கள். (எதிரியை எதிர்க்க) எந்நேரமும் தயாராக இருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். நீங்கள் (இம்மையிலும் மறுமையிலும் info
التفاسير: