আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- আব্দুল হামীদ বাকৱী

পৃষ্ঠা নং:close

external-link copy
10 : 3

اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا لَنْ تُغْنِیَ عَنْهُمْ اَمْوَالُهُمْ وَلَاۤ اَوْلَادُهُمْ مِّنَ اللّٰهِ شَیْـًٔا ؕ— وَاُولٰٓىِٕكَ هُمْ وَقُوْدُ النَّارِ ۟ۙ

10. நிச்சயமாக எவர்கள் (அந்நாளை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு (அந்நாளில்) அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய சந்ததிகளும், அல்லாஹ்வி(னுடைய வேதனையி)லிருந்து எதையும் அறவே தவிர்த்துவிட முடியாது. இவர்கள்தான் (உண்மையாகவே) நரகத்தின் எரிகட்டைகள். info
التفاسير:

external-link copy
11 : 3

كَدَاْبِ اٰلِ فِرْعَوْنَ ۙ— وَالَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ— كَذَّبُوْا بِاٰیٰتِنَا ۚ— فَاَخَذَهُمُ اللّٰهُ بِذُنُوْبِهِمْ ؕ— وَاللّٰهُ شَدِیْدُ الْعِقَابِ ۟

11. (இவர்களின் நிலை) ஃபிர்அவ்னைச் சார்ந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு முன் இருந்தவர்களின் நிலை போன்று உள்ளது. அவர்களும் நம் வசனங்களைப் பொய்யாக்கினார்கள். ஆதலால், அல்லாஹ் அவர்களின் (இப்)பாவங்களின் காரணமாக அவர்களை தண்டித்தான். அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் ஆவான். info
التفاسير:

external-link copy
12 : 3

قُلْ لِّلَّذِیْنَ كَفَرُوْا سَتُغْلَبُوْنَ وَتُحْشَرُوْنَ اِلٰی جَهَنَّمَ ؕ— وَبِئْسَ الْمِهَادُ ۟

12. எவர்கள் இவ்வேதத்தை நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக: ‘‘அதிசீக்கிரத்தில் நீங்கள் வெற்றி கொள்ளப்படுவீர்கள். மேலும், (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள். அது மிகக்கெட்ட தங்குமிடமாகும்.'' info
التفاسير:

external-link copy
13 : 3

قَدْ كَانَ لَكُمْ اٰیَةٌ فِیْ فِئَتَیْنِ الْتَقَتَا ؕ— فِئَةٌ تُقَاتِلُ فِیْ سَبِیْلِ اللّٰهِ وَاُخْرٰی كَافِرَةٌ یَّرَوْنَهُمْ مِّثْلَیْهِمْ رَاْیَ الْعَیْنِ ؕ— وَاللّٰهُ یُؤَیِّدُ بِنَصْرِهٖ مَنْ یَّشَآءُ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَعِبْرَةً لِّاُولِی الْاَبْصَارِ ۟

13. (பத்ரு போர்க்களத்தில்) சந்தித்த இரு சேனைகளில் மெய்யாகவே உங்களுக்கு ஓர் அத்தாட்சி இருந்தது. (ஒன்று) அல்லாஹ்வின் பாதையில் போர் புரியும் கூட்டம், மற்றொரு கூட்டத்தினர் நிராகரிப்பவர்கள். (நிராகரிப்பவர்கள் ஆகிய) இவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களை தங்களைவிட இரு மடங்காக(த் தங்கள்) கண்ணால் கண்டனர். அல்லாஹ், தான் விரும்பியவர்களைத் தன் உதவியைக் கொண்டு (இவ்வாறு) பலப்படுத்துகிறான். (படிப்பினை பெறும்) பார்வையுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை இருக்கிறது. info
التفاسير:

external-link copy
14 : 3

زُیِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوٰتِ مِنَ النِّسَآءِ وَالْبَنِیْنَ وَالْقَنَاطِیْرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَیْلِ الْمُسَوَّمَةِ وَالْاَنْعَامِ وَالْحَرْثِ ؕ— ذٰلِكَ مَتَاعُ الْحَیٰوةِ الدُّنْیَا ۚ— وَاللّٰهُ عِنْدَهٗ حُسْنُ الْمَاٰبِ ۟

14. பெண்கள், ஆண் பிள்ளைகள், தங்கம், வெள்ளிகளின் பெரும் குவியல்கள், உயர்ந்த குதிரைகள் (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகள், பயிர் நிலங்கள் ஆகியவற்றை விரும்புவது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. எனினும் இவை (அனைத்தும் நிலையற்ற) இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) இன்பங்களே! அல்லாஹ்விடத்திலோ (நிலையான) அழகிய தங்குமிடமுண்டு. info
التفاسير:

external-link copy
15 : 3

قُلْ اَؤُنَبِّئُكُمْ بِخَیْرٍ مِّنْ ذٰلِكُمْ ؕ— لِلَّذِیْنَ اتَّقَوْا عِنْدَ رَبِّهِمْ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا وَاَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَّرِضْوَانٌ مِّنَ اللّٰهِ ؕ— وَاللّٰهُ بَصِیْرٌ بِالْعِبَادِ ۟ۚ

15. (நபியே! மனிதர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘இவற்றைவிட மேலானதொன்றை நான் உங்களுக்கு அறிவிக்கவா? (இறைவனுக்குப்) பயந்து நடக்கிறவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் சொர்க்கங்கள் உண்டு. அவற்றில் நீரருவிகள் (தொடர்ந்து) ஓடிக்கொண்டேயிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். (அங்கு அவர்களுக்குப்) பரிசுத்தமான மனைவிகளும் உண்டு. இன்னும், அல்லாஹ்வின் திருப்பொருத்தமும் கிடைக்கும். அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவன் ஆவான். info
التفاسير: