আল-কোৰআনুল কাৰীমৰ অৰ্থানুবাদ - তামিল অনুবাদ- আব্দুল হামীদ বাকৱী

পৃষ্ঠা নং:close

external-link copy
84 : 3

قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ عَلَیْنَا وَمَاۤ اُنْزِلَ عَلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِیَ مُوْسٰی وَعِیْسٰی وَالنَّبِیُّوْنَ مِنْ رَّبِّهِمْ ۪— لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ ؗ— وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟

84. (நபியே!) கூறுவீராக: ‘‘அல்லாஹ்வையும், நம்மீது அருளப்பட்டதையும்; இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியவர்கள் மீதும், அவர்கள் சந்ததிகள் மீது அருளப்பட்டவற்றையும்; மூஸா, ஈஸா மற்றும் அனைத்து நபிமார்களுக்கு அவர்கள் இறைவனால் அளிக்கப்பட்டவற்றையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். இவர்களில் ஒருவரையும் (நபியல்ல என்று) நாம் பிரித்துவிட மாட்டோம். அல்லாஹ் ஒருவனுக்கே நாங்கள் (முற்றிலும்) கீழ்ப்படிந்து நடப்போம்.'' info
التفاسير:

external-link copy
85 : 3

وَمَنْ یَّبْتَغِ غَیْرَ الْاِسْلَامِ دِیْنًا فَلَنْ یُّقْبَلَ مِنْهُ ۚ— وَهُوَ فِی الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِیْنَ ۟

85. இஸ்லாமையன்றி (வேறொரு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கவே படமாட்டாது. மறுமையில் அவர் நஷ்டமடைந்த வராகவே இருப்பார். info
التفاسير:

external-link copy
86 : 3

كَیْفَ یَهْدِی اللّٰهُ قَوْمًا كَفَرُوْا بَعْدَ اِیْمَانِهِمْ وَشَهِدُوْۤا اَنَّ الرَّسُوْلَ حَقٌّ وَّجَآءَهُمُ الْبَیِّنٰتُ ؕ— وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟

86. அல்லாஹ் எப்படி ஒரு சமூகத்தினரை நேரான வழியில் செலுத்துவான். அவர்களோ, தங்களிடம் வந்த பல அத்தாட்சிகளின் மூலம் நிச்சயமாக (அல்லாஹ்வுடைய) தூதர் உண்மையானவர் என சாட்சியம் கூறி நம்பிக்கை கொண்டதன் பின்னரும் (அத்தூதரை) நிராகரிக்கின்றனர். அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார சமூகத்தினரை நேரான வழியில் செலுத்துவதில்லை. info
التفاسير:

external-link copy
87 : 3

اُولٰٓىِٕكَ جَزَآؤُهُمْ اَنَّ عَلَیْهِمْ لَعْنَةَ اللّٰهِ وَالْمَلٰٓىِٕكَةِ وَالنَّاسِ اَجْمَعِیْنَ ۟ۙ

87. இவர்களுக்கு (அவர்கள் செயலுக்குத் தக்க) பிரதிபலனாவது: இவர்கள் மீது நிச்சயமாக அல்லாஹ், வானவர்கள், மனிதர்கள் ஆகிய அனைவருடைய சாபம் உண்டாகுவதுதான். info
التفاسير:

external-link copy
88 : 3

خٰلِدِیْنَ فِیْهَا ۚ— لَا یُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ یُنْظَرُوْنَ ۟ۙ

88. இ(ச்சாபத்)திலேயே அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படவும் மாட்டாது. அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படவும் மாட்டாது. info
التفاسير:

external-link copy
89 : 3

اِلَّا الَّذِیْنَ تَابُوْا مِنْ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْا ۫— فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

89. எனினும், இதற்குப் பின்னரும் எவரேனும் வருத்தப்பட்டு (பாவங்களில் இருந்து) விலகி நற்செயல்களைச் செய்தவர்களைத் தவிர (அல்லாஹ் அவர்களை மன்னித்து விடுவான்). ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான். info
التفاسير:

external-link copy
90 : 3

اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا بَعْدَ اِیْمَانِهِمْ ثُمَّ ازْدَادُوْا كُفْرًا لَّنْ تُقْبَلَ تَوْبَتُهُمْ ۚ— وَاُولٰٓىِٕكَ هُمُ الضَّآلُّوْنَ ۟

90. ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிராகரித்துவிட்டு மென்மேலும், அந்நிராகரிப்பையே அதிகப்படுத்துகிறார்களோ, அவர்களுடைய மன்னிப்புக் கோருதல் நிச்சயமாக அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்கள்தான் (முற்றிலும்) வழி கெட்டவர்கள். info
التفاسير:

external-link copy
91 : 3

اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَمَاتُوْا وَهُمْ كُفَّارٌ فَلَنْ یُّقْبَلَ مِنْ اَحَدِهِمْ مِّلْءُ الْاَرْضِ ذَهَبًا وَّلَوِ افْتَدٰی بِهٖ ؕ— اُولٰٓىِٕكَ لَهُمْ عَذَابٌ اَلِیْمٌۙ— وَّمَا لَهُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟۠

91. நிச்சயமாக எவர்கள் நிராகரித்து (அந்நிராகரிப்பிலிருந்து மீளாது) நிராகரித்த வண்ணமே இறந்தும் விடுகின்றனரோ அவர்களில் ஒருவனுக்கு இப்பூமி நிறைய தங்கம் இருந்து, அதைத் (தன் குற்றத்தை மன்னிப்பதற்குத்) தனக்கு ஈடாக அவன் கொடுத்த போதிலும் (அது) அங்கீகரிக்கப்பட மாட்டாது. இவர்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு. இவர்களுக்கு உதவி செய்பவர்கள் (அங்கு) ஒருவரும் இருக்கமாட்டார்! info
التفاسير: