34.33. பலவீனமாகக் கருதப்பட்ட தொண்டர்கள் தாங்கள் பின்பற்றிய சத்தியத்தை விட்டும் கர்வம் கொண்ட தலைவர்களைப் பார்த்துக் கூறுவார்கள்: “மாறாக இரவும் பகலும் சூழ்ச்சி செய்து நீங்கள்தாம் நேர்வழியைவிட்டும் எங்களைத் தடுத்தீர்கள். அல்லாஹ்வை நிராகரிக்குமாறும் படைப்புகளை வணங்குமாறும் எங்களை ஏவிக் கொண்டிருந்தீர்கள். “உலகத்தில் அவர்கள் இருந்துகொண்டிருந்த நிராகரிப்பின் காரணமாக வேதனையைக் காணும்போது வருத்தத்தை மறைத்துக் கொள்வார்கள். நிச்சயமாக தாங்கள் வேதனைக்கு உள்ளாக்கப்படுவோம் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். நாம் நிராகரிப்பாளர்களின் கழுத்துகளில் விலங்குகளை மாட்டிவிடுவோம். அவர்கள் உலகில் அல்லாஹ் அல்லாதவர்களை வணங்கி மற்றும் பாவங்கள் செய்துகொண்டிருந்ததனால் இவ்வாறு கூலி கொடுக்கப்படுகிறார்கள்.
34.34. முஹம்மது நபியை அவரது சமூகம் பொய்ப்பித்தபோது அல்லாஹ் அவருக்கு ஆறுதலாக, “பொய்ப்பிப்பது முன்னைய சமூகங்களின் வழக்கம்தான்” என்பதை நினைவூட்டுகிறான். அவன் கூறுகிறான்: நாம் தூதர்களை எந்த ஊருக்கு அல்லாஹ்வின் வேதனையை எச்சரிக்கை செய்யுமாறு அனுப்பினாலும் அங்கு அந்தஸ்த்து, அதிகாரம் ஆகியவற்றைப் பெற்று உல்லாசமாக வாழக்கூடியவர்கள், “தூதர்களே! நீங்கள் கொண்டுவந்த தூதுச் செய்தியை நாங்கள் நிராகரிக்கிறோம்” என்றுதான் கூறினார்கள்.
34.35. அந்தஸ்த்துடைய இவர்கள் கர்வத்துடனும் பெருமையுடனும் கூறினார்கள்: “நாங்கள் உங்களைவிட அதிக செல்வமும் பிள்ளைகளும் உடையவர்கள். நிச்சயமாக நாங்கள் வேதனைக்குள்ளாக்கப்படுவோம் என்று நீங்கள் எண்ணுவது பொய்யாகும். இவ்வுலகிலும் மறுவுலகிலும் நாங்கள் வேதனைக்குள்ளாக்கப்படமாட்டோம்.”
34.36. -தூதரே!- தங்களுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளைக்கொண்டு ஏமாந்த இவர்களிடம் நீர் கூறுவீராக: “அடியார்கள் நன்றி செலுத்துகிறார்களா? அல்லது நன்றிகெட்டத்தனமாக நடந்து கொள்கிறார்களா? என்பதை சோதிக்கும்பொருட்டு என் இறைவன் தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக வழங்குகிறான். அவர்கள் பொறுமையைக் கடைபிடிக்கிறார்களா? அல்லது கோபம் கொள்கிறார்களா? என்பதைச் சோதிக்கும் பொருட்டுதான் நாடியவர்களுக்கு அதில் நெருக்கடியை ஏற்படுத்துகிறான். ஆயினும் மனிதர்களில் பெரும்பாலானோர், அல்லாஹ் ஞானம் மிக்கவன், அவன் உயர்ந்த ஒரு நோக்கம் இன்றி ஒரு விடயத்தை நிர்ணயிக்க மாட்டான் என்பதை அறியமாட்டார்கள். அந்நோக்கம் புரிபவர்களுக்குப் புரியும். புரியாதவர்களுக்குப் புரியாது.
34.37. நீங்கள் பெருமை பாராட்டுவதற்குக் காரணமான செல்வங்களோ, பிள்ளைகளோ உங்களுக்கு இறைவனின் திருப்தியைப் பெற்றுத்தராது. ஆயினும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டு நற்செயல் புரிந்தவர்கள் பன்மடங்கு கூலியைப் பெறுவார்கள். ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவுசெய்யும் செல்வங்களும் அவர்களை அல்லாஹ்விடம் நெருக்கிவைக்கும். பிள்ளைகள் தமது பிரார்த்தனை மூலம் அவனுடைய நெருக்கத்தைப் பெற்றுத்தருவார்கள். நற்செயல்புரியும் இந்த நம்பிக்கையாளர்களுக்கு அவர்கள் செய்த நற்செயல்களுக்குப் பலமடங்கு கூலியைப் பெறுவார்கள். அவர்கள் சுவனத்தின் உயர்ந்த பதவிகளில் இருப்பார்கள். வேதனை, மரணம், இன்ப முடிவு ஆகிய எல்லா வகையான அச்சங்களிலிருந்தும் அமைதி பெற்றவர்களாக இருப்பார்கள்.
34.38. நம்முடைய வசனங்களைவிட்டும் மக்களைத் திருப்புவதற்காக கடும் முயற்சி மேற்கொள்ளும் நிராகரிப்பாளர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் வேதனைக்குள்ளாக்கப்படுவார்கள்.
34.39. -தூதரே!- நீர் கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அதில் நெருக்கடியை ஏற்படுத்துகிறான். நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் எதைச் செலவு செய்தாலும் இவ்வுலகில் அதனை விடச் சிறந்ததையும் மறுமையில் நிறைவாக கூலியையும் அதற்குப் பகரமாக அல்லாஹ் வழங்குவான். அவன் வாழ்வாதாரம் அளிப்போரில் மிகச் சிறந்தவன். எனவே வாழ்வாதாரம் தேடுபவர் அவனிடமே செல்லட்டும்.
التفاسير:
من فوائد الآيات في هذه الصفحة:
• تبرؤ الأتباع والمتبوعين بعضهم من بعض، لا يُعْفِي كلًّا من مسؤوليته.