ترجمة معاني القرآن الكريم - الترجمة التاميلية للمختصر في تفسير القرآن الكريم

رقم الصفحة:close

external-link copy
15 : 34

لَقَدْ كَانَ لِسَبَاٍ فِیْ مَسْكَنِهِمْ اٰیَةٌ ۚ— جَنَّتٰنِ عَنْ یَّمِیْنٍ وَّشِمَالٍ ؕ۬— كُلُوْا مِنْ رِّزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوْا لَهٗ ؕ— بَلْدَةٌ طَیِّبَةٌ وَّرَبٌّ غَفُوْرٌ ۟

34.15. அல்லாஹ் தாவூதுக்கும் அவரது மகன் சுலைமானுக்கும் புரிந்த அருட்கொடைகளைக் குறிப்பிட்ட பிறகு ஸபாவாசிகள் மீது பொழிந்த அருட்கொடைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறான். தாவூதும் சுலைமானும் தங்களுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்கள். ஸபஃ வாசிகளோ நன்றிகெட்டத்தனமாக நடந்து கொண்டார்கள். அவன் கூறுகிறான்: ஸபஃ குலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவர்கள் வாழ்ந்த வசிப்பிடங்களில் அல்லாஹ்வின் வல்லமை மற்றும் அவர்கள் மீது அவனது அருள் ஆகியவற்றுக்கான தெளிவான சான்று இருந்தது. அது வலது புறமும் இடது புறமும் அமைந்த இரு தோட்டங்களாகும். நாம் அவர்களிடம் கூறினோம்: “உங்கள் இறைவனின் உணவை உண்ணுங்கள். அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துங்கள். இது செழிப்பான ஊராகும். இந்த அல்லாஹ் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரக்கூடியவர்களின் பாவங்களை மன்னிப்பவன் ஆவான். info
التفاسير:

external-link copy
16 : 34

فَاَعْرَضُوْا فَاَرْسَلْنَا عَلَیْهِمْ سَیْلَ الْعَرِمِ وَبَدَّلْنٰهُمْ بِجَنَّتَیْهِمْ جَنَّتَیْنِ ذَوَاتَیْ اُكُلٍ خَمْطٍ وَّاَثْلٍ وَّشَیْءٍ مِّنْ سِدْرٍ قَلِیْلٍ ۟

34.16. அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தாமல் அவனுடைய தூதர்களின் மீது நம்பிக்கைகொள்ளாமல் புறக்கணித்தார்கள். எனவே நாம் அருட்கொடைகளுக்குப் பகரமாக அவர்களுக்கு சோதனைகளைத் தண்டனையாக வழங்கினோம். அவர்கள் மீது அணையை உடைத்து வயல்களை மூழ்கடிக்கக்கூடிய பெருவெள்ளத்தை அனுப்பினோம். அவர்களின் இரு தோட்டங்களையும் கசப்பான பழங்களைத் தரக்கூடிய தோட்டங்களாக ஆக்கினோம். அவற்றில் பழம்தராத சவுக்கு மரங்களும் சிறிதளவு இலந்தை மரங்களும் இருந்தன. info
التفاسير:

external-link copy
17 : 34

ذٰلِكَ جَزَیْنٰهُمْ بِمَا كَفَرُوْا ؕ— وَهَلْ نُجٰزِیْۤ اِلَّا الْكَفُوْرَ ۟

34.17. அவர்கள் அனுபவித்துக்கொண்டிருந்த அருட்கொடைகளுக்கு நிகழ்ந்த இந்த மாற்றம் அவர்களின் நிராகரிப்பினாலும் நன்றி செலுத்தாமல் புறக்கணித்ததன் காரணத்தினாலும் ஏற்பட்ட விளைவாகும். நம் அருட்கொடைகளை மறுத்து அவனை நிராகரிப்போருக்கே இவ்வாறு கடுமையான வேதனைகளை வழங்குகின்றோம். info
التفاسير:

external-link copy
18 : 34

وَجَعَلْنَا بَیْنَهُمْ وَبَیْنَ الْقُرَی الَّتِیْ بٰرَكْنَا فِیْهَا قُرًی ظَاهِرَةً وَّقَدَّرْنَا فِیْهَا السَّیْرَ ؕ— سِیْرُوْا فِیْهَا لَیَالِیَ وَاَیَّامًا اٰمِنِیْنَ ۟

34.18. யமனில் ஸபஃ வாசிகளுக்கும் நாம் அருள்செய்த ஷாம் தேசத்து ஊர்களுக்கும் மத்தியில் அருகருகே பல ஊர்களை ஏற்படுத்தினோம். அவர்கள் ஷாம் தேசத்தை அடையும் வரை ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு சிரமமின்றி செல்லும் வகையில் நாம் அவற்றுக்கிடையிலான பயண தூரத்தையும் நிர்ணயித்தோம். . நாம் அவர்களிடம் கூறினோம்: “நீங்கள் விரும்பியவாறு இரவிலோ அல்லது பகலிலோ எதிரிகளிடமிருந்தும் பசி மற்றும் தாகத்திலிருந்தும் அச்சமற்றவர்களாக செல்லுங்கள். info
التفاسير:

external-link copy
19 : 34

فَقَالُوْا رَبَّنَا بٰعِدْ بَیْنَ اَسْفَارِنَا وَظَلَمُوْۤا اَنْفُسَهُمْ فَجَعَلْنٰهُمْ اَحَادِیْثَ وَمَزَّقْنٰهُمْ كُلَّ مُمَزَّقٍ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُوْرٍ ۟

34.19. தூரம் குறைக்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட அல்லாஹ்வின் அருட்கொடைக்கு நன்றி செலுத்தாமல் கர்வம் கொண்டார்கள். அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவா! நாங்கள் பயணக் களைப்பை அனுபவிப்பதற்காக இந்த ஊர்களையெல்லாம் நீக்கி எங்கள் பயணங்களுக்கிடையே தூரத்தை ஏற்படுத்துவாயாக. (அதனால்) எங்களின் பயணக் கூட்டத்தின் சிறப்பும் வெளிப்படும். ” அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தாமல் கர்வம்கொண்டு, அவர்களிலுள்ள ஏழைகளின் மீது பொறாமைகொண்டு தங்களுக்குத் தாங்களே அவர்கள் அநீதி இழைத்துக் கொண்டார்கள். நாம் அவர்களை அவர்களுக்குப் பின்னால் வரக்கூடியவர்கள் பேசக்கூடிய படிப்பினைகளாக ஆக்கி விட்டோம். அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள முடியாத அளவுக்கு அவர்களை பல ஊர்களாக பிரித்துவிட்டோம். நிச்சயமாக மேலேகூறப்பட்ட இந்த -ஸபஃவாசிகளுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளிலும் பின்பு அவர்களின் நிராகரிப்புக்கும் கர்வத்திற்கும் வழங்கப்பட்ட தண்டனையிலும்-, அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிதல், பாவத்தைத் தவிர்த்தல், சோதனை என்பவற்றில் பொறுமையைக் கடைப்பிடிக்கக்கூடிய, அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்தக்கூடிய ஒவ்வொருவருக்கும் படிப்பினை இருக்கின்றது. info
التفاسير:

external-link copy
20 : 34

وَلَقَدْ صَدَّقَ عَلَیْهِمْ اِبْلِیْسُ ظَنَّهٗ فَاتَّبَعُوْهُ اِلَّا فَرِیْقًا مِّنَ الْمُؤْمِنِیْنَ ۟

34.20. நிச்சயமாக அவர்களை சத்தியத்தை விட்டும் வழிகெடுக்கலாம் என இப்லீஸ் எண்ணியதை அவர்களில் நிரூபித்துக் காட்டினான். எனவே நம்பிக்கையாளர்களில் ஒரு பிரிவினரைத் தவிர மற்றவர்கள் நிராகரிப்பிலும் வழிகேட்டிலும் அவனைப் பின்பற்றினார்கள். திட்டமாக அவர்கள் அவனைப் பின்பற்றாது அவனது எதிர்பார்ப்பைக் குலைத்துவிட்டனர். info
التفاسير:

external-link copy
21 : 34

وَمَا كَانَ لَهٗ عَلَیْهِمْ مِّنْ سُلْطٰنٍ اِلَّا لِنَعْلَمَ مَنْ یُّؤْمِنُ بِالْاٰخِرَةِ مِمَّنْ هُوَ مِنْهَا فِیْ شَكٍّ ؕ— وَرَبُّكَ عَلٰی كُلِّ شَیْءٍ حَفِیْظٌ ۟۠

34.21. அவர்களை வழிகேட்டில் நிர்ப்பந்திக்கும் அளவுக்கு இப்லீஸ் அவர்கள் மீது ஆதிக்கம் பெற்றிருக்கவில்லை. நிச்சயமாக அவனால் முடிந்ததெல்லாம் அலங்கரித்துக் காட்டுவதும் வழிகெடுப்பதும்தான். அவர்களை வழிகெடுக்க அவனுக்கு நாம் அனுமதியளித்தாலே தவிர. மறுமை மற்றும் அதில் கூலி வழங்கல் என்பவற்றை உண்மையாகவே நம்பிக்கைகொண்டவர்கள் யார்? அதில் சந்தேகிப்பவர்கள் யார்? என்ற விடயம் வெளிவருவதற்காக இவ்வாறு நாம் அனுமதிக்கின்றோம். -தூதரே!- உம் இறைவன் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான். அவன் அடியார்களின் செயல்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். அவற்றிற்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குகிறான்.
info
التفاسير:

external-link copy
22 : 34

قُلِ ادْعُوا الَّذِیْنَ زَعَمْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ ۚ— لَا یَمْلِكُوْنَ مِثْقَالَ ذَرَّةٍ فِی السَّمٰوٰتِ وَلَا فِی الْاَرْضِ وَمَا لَهُمْ فِیْهِمَا مِنْ شِرْكٍ وَّمَا لَهٗ مِنْهُمْ مِّنْ ظَهِیْرٍ ۟

34.22. -தூதரே!- நீர் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர நிச்சயமாக உங்களின் தெய்வங்களாக நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தவற்றை உங்களுக்கு பலன்களை கொண்டு வரவோ உங்களை விட்டும் தீங்கினை அகற்றவோ அழையுங்கள். அவை வானங்களிலும் பூமியிலும் கடுகளவுக்குக் கூட உரிமையாளர்களல்ல. அதில் அந்த தெய்வங்களுக்கு அல்லாஹ்வுடன் எந்தப் பங்கும் இல்லை. அல்லாஹ்வுக்கு உதவி செய்யும் எந்த உதவியாளரும் இல்லை. பங்காளிகள் மற்றும் உதவியாளர்களை விட்டும் அவன் தேவையற்றவன். info
التفاسير:
من فوائد الآيات في هذه الصفحة:
• الشكر يحفظ النعم، والجحود يسبب سلبها.
1. நன்றி செலுத்துவது அருட்கொடைகளைப் பாதுகாக்கும். நன்றிகெட்டத்தனமாக நடந்துகொள்வது அருட்கொடைகள் பறிக்கப்படக் காரணமாக அமையும். info

• الأمن من أعظم النعم التي يمتنّ الله بها على العباد.
2. அல்லாஹ் அடியார்களுக்கு அளிக்கும் மிகப் பெரும் அருட்கொடைகளில் அமைதியும் ஒன்றாகும். info

• الإيمان الصحيح يعصم من اتباع إغواء الشيطان بإذن الله.
3. சரியான ஈமான் அல்லாஹ்வின் உதவியுடன் ஷைத்தானின் வழிகேட்டைப் பின்பற்றுவதிலிருந்து பாதுகாக்கிறது. info

• ظهور إبطال أسباب الشرك ومداخله كالزعم بأن للأصنام مُلْكًا أو مشاركة لله، أو إعانة أو شفاعة عند الله.
4. சிலைகளுக்கு உரிமையுள்ளது அல்லது அவைகளுக்கு அல்லாஹ்வுடன் பங்குண்டு அல்லது அவனுக்கு உதவி செய்கின்றன, அல்லது அவனிடம் பரிந்துரை செய்யலாம் என்ற எண்ணங்கள் போன்ற இணைவைப்பின் காரணிகள் மற்றும் வாயில்கள் அனைத்தும் தவறானவை என தெளிவாகியுள்ளது. info