የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የታሚልኛ ቋንቋ ትርጉም፤ በዑመር ሸሪፍ

የገፅ ቁጥር:close

external-link copy
45 : 21

قُلْ اِنَّمَاۤ اُنْذِرُكُمْ بِالْوَحْیِ ۖؗ— وَلَا یَسْمَعُ الصُّمُّ الدُّعَآءَ اِذَا مَا یُنْذَرُوْنَ ۟

(நபியே!) கூறுவீராக: நான் உங்களை எச்சரிப்பதெல்லாம் வஹ்யின் மூலமாகத்தான். இன்னும், செவிடர்களோ அவர்கள் எச்சரிக்கப்படும்போது (நேர்வழியின்) அழைப்புக்கு செவிசாய்க்க மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
46 : 21

وَلَىِٕنْ مَّسَّتْهُمْ نَفْحَةٌ مِّنْ عَذَابِ رَبِّكَ لَیَقُوْلُنَّ یٰوَیْلَنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِیْنَ ۟

உமது இறைவனின் தண்டனையிலிருந்து ஒரு பகுதி அவர்களை அடைந்தால், “எங்கள் நாசமே! நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று திட்டமாக கூறுவார்கள். info
التفاسير:

external-link copy
47 : 21

وَنَضَعُ الْمَوَازِیْنَ الْقِسْطَ لِیَوْمِ الْقِیٰمَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَیْـًٔا ؕ— وَاِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ اَتَیْنَا بِهَا ؕ— وَكَفٰی بِنَا حٰسِبِیْنَ ۟

மறுமை நாளில் நீதமான தராசுகளை நாம் வைப்போம். ஆகவே, எந்த ஓர் ஆன்மாவுக்கும் அறவே அநீதி இழைக்கப்படாது. (அது செய்த செயல்) கடுகின் விதை அளவு இருந்தாலும் அதை(யும் விசாரணைக்கு) நாம் கொண்டு வருவோம். இன்னும், (அவர்களை) விசாரிப்பதற்கு நாமே போதுமானவர்கள். info
التفاسير:

external-link copy
48 : 21

وَلَقَدْ اٰتَیْنَا مُوْسٰی وَهٰرُوْنَ الْفُرْقَانَ وَضِیَآءً وَّذِكْرًا لِّلْمُتَّقِیْنَ ۟ۙ

இறையச்சமுள்ளவர்கள் பயன் பெறுவதற்காக பிரித்தறிவிக்கக்கூடிய (சத்தியத்)தையும் வெளிச்ச(மிக்க வேத)த்தையும் அறிவுரையையும் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் திட்டவட்டமாக நாம் கொடுத்தோம். info
التفاسير:

external-link copy
49 : 21

الَّذِیْنَ یَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَیْبِ وَهُمْ مِّنَ السَّاعَةِ مُشْفِقُوْنَ ۟

அ(ந்த இறையச்சமுள்ள)வர்கள் தங்கள் இறைவனை மறைவில் (-இவ்வுலக வாழ்க்கையில்) பயப்படுவார்கள். இன்னும், அவர்கள் மறுமையை குறித்து (எச்சரிக்கையுடன்) அச்சப்படுவார்கள். info
التفاسير:

external-link copy
50 : 21

وَهٰذَا ذِكْرٌ مُّبٰرَكٌ اَنْزَلْنٰهُ ؕ— اَفَاَنْتُمْ لَهٗ مُنْكِرُوْنَ ۟۠

இது, பாக்கியமிகுந்த (அதிகமான நற்பலன்களை உடைய) ஓர் அறிவுரையாகும். நாம் இதை இறக்கினோம். ஆக, நீங்கள் இதை மறுக்கிறீர்களா? info
التفاسير:

external-link copy
51 : 21

وَلَقَدْ اٰتَیْنَاۤ اِبْرٰهِیْمَ رُشْدَهٗ مِنْ قَبْلُ وَكُنَّا بِهٖ عٰلِمِیْنَ ۟ۚ

(மூஸாவிற்கு) முன்னர் இப்ராஹீமுக்கு அவருக்குரிய நேரிய அறிவை திட்டமாக நாம் கொடுத்தோம். இன்னும் நாம் அவரை நன்கறிந்தவர்களாக இருந்தோம். info
التفاسير:

external-link copy
52 : 21

اِذْ قَالَ لِاَبِیْهِ وَقَوْمِهٖ مَا هٰذِهِ التَّمَاثِیْلُ الَّتِیْۤ اَنْتُمْ لَهَا عٰكِفُوْنَ ۟

அவர், தனது தந்தை இன்னும் தனது சமுதாயத்தை நோக்கி, “நீங்கள் இவற்றின் மீது நிலையாக (-பிடிவாதமாக) இருக்கின்ற இந்த உருவ சிலைகள் (உடைய உண்மை நிலைதான்) என்ன?” என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! info
التفاسير:

external-link copy
53 : 21

قَالُوْا وَجَدْنَاۤ اٰبَآءَنَا لَهَا عٰبِدِیْنَ ۟

அவர்கள் கூறினார்கள்: “எங்கள் மூதாதைகள் அவற்றை வணங்குபவர்களாக இருப்பதை நாங்கள் கண்டோம்.” info
التفاسير:

external-link copy
54 : 21

قَالَ لَقَدْ كُنْتُمْ اَنْتُمْ وَاٰبَآؤُكُمْ فِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟

(இப்ராஹீம்) கூறினார்: “திட்டமாக நீங்களும் உங்கள் மூதாதைகளும் தெளிவான வழிகேட்டில் இருக்கிறீர்கள்.” info
التفاسير:

external-link copy
55 : 21

قَالُوْۤا اَجِئْتَنَا بِالْحَقِّ اَمْ اَنْتَ مِنَ اللّٰعِبِیْنَ ۟

அவர்கள் கூறினார்கள்: “நீர் எங்களிடம் சத்தியத்தைக் கொண்டு வந்தீரா? அல்லது, நீர் (வீண் விளையாட்டு) விளையாடுபவர்களில் உள்ளவரா?” info
التفاسير:

external-link copy
56 : 21

قَالَ بَلْ رَّبُّكُمْ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ الَّذِیْ فَطَرَهُنَّ ۖؗ— وَاَنَا عَلٰی ذٰلِكُمْ مِّنَ الشّٰهِدِیْنَ ۟

அவர் கூறினார்: “மாறாக, வானங்கள், இன்னும், பூமியின் இறைவன்தான் உங்கள் இறைவன் ஆவான். (இந்த சிலைகளில் எதுவும் அல்ல.) அவன்தான் அவற்றைப் படைத்தான். இன்னும், நான் இதற்கு சாட்சி கூறுபவர்களில் ஒருவன் ஆவேன். info
التفاسير:

external-link copy
57 : 21

وَتَاللّٰهِ لَاَكِیْدَنَّ اَصْنَامَكُمْ بَعْدَ اَنْ تُوَلُّوْا مُدْبِرِیْنَ ۟

இன்னும், அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் (என்னிடமிருந்து) திரும்பிச் சென்ற பின்னர் உங்கள் சிலைகளுக்கு நிச்சயமாக நான் சதி திட்டம் செய்(து அவற்றை உடைத்துவிடு)வேன். info
التفاسير: