የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
22 : 7

فَدَلّٰىهُمَا بِغُرُوْرٍ ۚ— فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْاٰتُهُمَا وَطَفِقَا یَخْصِفٰنِ عَلَیْهِمَا مِنْ وَّرَقِ الْجَنَّةِ ؕ— وَنَادٰىهُمَا رَبُّهُمَاۤ اَلَمْ اَنْهَكُمَا عَنْ تِلْكُمَا الشَّجَرَةِ وَاَقُلْ لَّكُمَاۤ اِنَّ الشَّیْطٰنَ لَكُمَا عَدُوٌّ مُّبِیْنٌ ۟

7.22. ஏமாற்றி அவர்களின் உயர்ந்த இடத்திலிருந்து அவர்களை இறக்கினான். தடுக்கப்பட்ட அந்த மரத்திலிருந்து அவர்கள் உண்டபோது அவர்கள் இருவருடைய வெட்கத்தலங்களும் வெளிப்பட்டன. சொர்க்கத்தின் இலைகளைக் கொண்டு அவற்றை மறைக்க முயற்சித்தார்கள். அவர்களின் இறைவன் அவர்களை அழைத்துக் கூறினான்: “இந்த மரத்திலிருந்து உண்ணக் கூடாது என்று நான் உங்களைத் தடுக்கவில்லையா? ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். எனவே அவன் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள் என்று நான் உங்களிடம் கூறவில்லையா? info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• دلّت الآيات على أن من عصى مولاه فهو ذليل.
1. தன் இறைவனின் கட்டளைக்கு மாறாகச் செயல்படுபவன் இழிவடைவான் என்பதை மேற்கூறிய வசனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. info

• أعلن الشيطان عداوته لبني آدم، وتوعد أن يصدهم عن الصراط المستقيم بكل أنواع الوسائل والأساليب.
2. ஷைத்தான் மனிதர்களுடனான தனது விரோதத்தை பகிரங்கமாக அறிவித்துவிட்டான். அனைத்து வகையான வழிமுறைகள், சாதனங்கள் மூலமும் நேரான பாதையை விட்டும் அவர்களைத் தடுப்பதாக எச்சரிக்கையும் விடுத்துள்ளான். info

• خطورة المعصية وأنها سبب لعقوبات الله الدنيوية والأخروية.
3. பாவத்தின் விபரீதம். அது உலக, மறுமை தண்டணைகளுக்குக் காரணமாகும். info