የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

የገፅ ቁጥር:close

external-link copy
31 : 7

یٰبَنِیْۤ اٰدَمَ خُذُوْا زِیْنَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَّكُلُوْا وَاشْرَبُوْا وَلَا تُسْرِفُوْا ؕۚ— اِنَّهٗ لَا یُحِبُّ الْمُسْرِفِیْنَ ۟۠

7.31. ஆதமுடைய மக்களே! உங்களின் மறைவிடங்களை மறைத்து, உங்களை அழகுபடுத்தும் தூய்மையான ஆடையை தொழுகையின்போதும் தவாபின் போதும் அணிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் அனுமதித்த தூய்மையானவற்றிலிருந்து நீங்கள் விரும்பியதை உண்ணுங்கள், பருகுங்கள். அவற்றில் நடுநிலையை மீறாதீர்கள். அனுமதிக்கப்பட்டதை மீறி தடைசெய்யப்பட்டதற்கு சென்றுவிடாதீர்கள். நிச்சயமாக நடுநிலையைப் பேணாமல் வரம்புமீறக்கூடியவர்களை அவன் நேசிப்பதில்லை. info
التفاسير:

external-link copy
32 : 7

قُلْ مَنْ حَرَّمَ زِیْنَةَ اللّٰهِ الَّتِیْۤ اَخْرَجَ لِعِبَادِهٖ وَالطَّیِّبٰتِ مِنَ الرِّزْقِ ؕ— قُلْ هِیَ لِلَّذِیْنَ اٰمَنُوْا فِی الْحَیٰوةِ الدُّنْیَا خَالِصَةً یَّوْمَ الْقِیٰمَةِ ؕ— كَذٰلِكَ نُفَصِّلُ الْاٰیٰتِ لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟

7.32. தூதரே! அல்லாஹ் அனுமதித்த ஆடையையும் தூய்மையான உணவுகளையும் தடைசெய்யும் இணைவைப்பாளர்களிடம் கேட்பீராக: “உங்களை அழகுபடுத்தக்கூடிய ஆடையை உங்களுக்குத் தடைசெய்தது யார்? அவன் வழங்கிய தூய்மையான உணவுகளையும் பானங்களையும் பிற பொருள்களையும் உங்களுக்குத் தடைசெய்தது யார்? தூதரே! நீர் அவர்களிடம் கூறுவீராக: “தூய்மையான இந்த பொருள்கள் இவ்வுலகில் அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு வழங்கியவையாகும். இவ்வுலகில் நம்பிக்கையாளர்களைத் தவிர மற்றவர்களும் அதில் பங்கு பெற்றாலும் மறுமை நாளில் இவை நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே உரியவையாகும். நிராகரிப்பாளர்களுக்கு அவற்றில் எந்தப் பங்கும் கிடைக்காது. ஏனெனில் சுவனம் நிராகரிப்பாளர்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற விளக்கத்தின் மூலம் நாம் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு வசனங்களைத் தெளிவுபடுத்துகின்றோம். அவர்கள்தாம் இவற்றைக் கொண்டு பயனடைவார்கள். info
التفاسير:

external-link copy
33 : 7

قُلْ اِنَّمَا حَرَّمَ رَبِّیَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَالْاِثْمَ وَالْبَغْیَ بِغَیْرِ الْحَقِّ وَاَنْ تُشْرِكُوْا بِاللّٰهِ مَا لَمْ یُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا وَّاَنْ تَقُوْلُوْا عَلَی اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ۟

7.33. தூதரே! அல்லாஹ் அனுமதித்ததைத் தடைசெய்யும் இந்த இணைவைப்பாளர்களிடம் கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்கள் மீது வெளிப்படையான மறைமுகமான மானக்கேடானவற்றைத் தடைசெய்துள்ளான். அவை அருவருப்பான பாவங்களாகும். அனைத்துப் பாவங்களையும் மக்களின் உயிர்களிலும் செல்வங்களிலும் மானங்களிலும் வரம்புமீறுவதையும் அவன் தடைசெய்துள்ளான். அல்லாஹ்வுடன் மற்றவர்களை இணையாக்குவதையும் அவன் தடைசெய்துள்ளான். அதற்கு உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. அவனுடைய பெயர்களில், பண்புகளில், செயல்களில் மார்க்கத்தில் அறிவின்றி அவன் மீது அவதூறு கூறுவதையும் அவன் தடைசெய்துள்ளான். info
التفاسير:

external-link copy
34 : 7

وَلِكُلِّ اُمَّةٍ اَجَلٌ ۚ— فَاِذَا جَآءَ اَجَلُهُمْ لَا یَسْتَاْخِرُوْنَ سَاعَةً وَّلَا یَسْتَقْدِمُوْنَ ۟

7.34. ஒவ்வொரு தலைமுறையின் காலக்கெடுவும் காலம் குறிப்பிடப்பட்டதாகும். நிர்ணயிக்கப்பட்ட அவர்களின் தவணை வந்துவிட்டால் அதளை விட்டும் சிறிதளவேனும் பிந்தவோ முந்தவோ மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
35 : 7

یٰبَنِیْۤ اٰدَمَ اِمَّا یَاْتِیَنَّكُمْ رُسُلٌ مِّنْكُمْ یَقُصُّوْنَ عَلَیْكُمْ اٰیٰتِیْ ۙ— فَمَنِ اتَّقٰی وَاَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَیْهِمْ وَلَا هُمْ یَحْزَنُوْنَ ۟

7.35. ஆதமுடைய மக்களே! உங்களின் சமூகங்களிலிருந்து என் தூதர்கள் உங்களிடம் வந்து நான் அவர்களுக்கு இறக்கிய எனது வேதத்தை உங்களுக்கு ஓதிக் காட்டினால் நீங்கள் அவர்களுக்குக் கட்டுப்படுங்கள்; அவர்கள் கொண்டு வந்ததைப் பின்பற்றுங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சி, தங்களின் செயல்களை சீர்படுத்திக் கொண்டவர்கள் மறுமைநாளில் அச்சம்கொள்ள மாட்டார்கள். தவறிவிட்ட உலக பாக்கியங்களை எண்ணியும் அவர்கள் கவலைகொள்ள மாட்டார்கள் info
التفاسير:

external-link copy
36 : 7

وَالَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِنَا وَاسْتَكْبَرُوْا عَنْهَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ النَّارِ ۚ— هُمْ فِیْهَا خٰلِدُوْنَ ۟

7.36. நம்முடைய வசனங்களின் மீது நம்பிக்கைகொள்ளாமல் அவற்றை நிராகரிப்பவர்கள், கர்வத்தினால் தங்களின் தூதர்கள் கொண்டுவந்ததன்படி செயல்பட மறுப்பவர்கள்தாம் நரகவாசிகள். அங்கு அவர்கள் என்றென்றும் வீழ்ந்துகிடப்பார்கள். info
التفاسير:

external-link copy
37 : 7

فَمَنْ اَظْلَمُ مِمَّنِ افْتَرٰی عَلَی اللّٰهِ كَذِبًا اَوْ كَذَّبَ بِاٰیٰتِهٖ ؕ— اُولٰٓىِٕكَ یَنَالُهُمْ نَصِیْبُهُمْ مِّنَ الْكِتٰبِ ؕ— حَتّٰۤی اِذَا جَآءَتْهُمْ رُسُلُنَا یَتَوَفَّوْنَهُمْ ۙ— قَالُوْۤا اَیْنَ مَا كُنْتُمْ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ— قَالُوْا ضَلُّوْا عَنَّا وَشَهِدُوْا عَلٰۤی اَنْفُسِهِمْ اَنَّهُمْ كَانُوْا كٰفِرِیْنَ ۟

7.37. அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து அல்லது குறை கூறி அல்லது அவன் கூறாததைக் கூறி அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனை விட அல்லது நேரான வழியைக் காட்டும் அவனுடைய வசனங்களை மறுப்பவனைவிட அக்கிரமக்காரன் வேறு யாருமில்லை. இந்த பண்புகளை உடையவர்கள், இவ்வுலக இன்பங்களில் லவ்ஹுல் மஃபூல் என்னும் ஏட்டில் தமக்கு எழுதப்பட்ட பங்கான நன்மை தீமையைப் பெறுவார்கள். இறுதியில் மரணத்தின் வானவரும் அவரது உதவியாளர்களும் அவர்களின் உயிர்களைக் கைப்பற்ற வரும் போது அவர்களைக் கண்டித்தவாறு அவர்களிடம் கேட்பார்கள், “அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களெல்லாம் எங்கே? உங்களுக்குப் பயனளிப்பதற்காக அவற்றை அழையுங்கள்.” இணைவைப்பாளர்கள் வானவர்களிடம் கூறுவார்கள், “நாங்கள் வணங்கிக் கொண்டிருந்த தெய்வங்களெல்லாம் எங்களைவிட்டும் காணாமல் போய்விட்டன. அவை எங்கே இருக்கின்றன? என்று எங்களுக்குத் தெரியாது. தாங்கள் நிராகரிப்பாளர்களாக இருந்தோம் என்பதை அவர்களே ஒத்துக் கொள்வார்கள். ஆனால் அந்த சமயத்தில் அவர் ஏற்றுக் கொள்வது அவருக்கு எதிரான ஆதாரமாகவே அமையும். அது அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்காது.
info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• المؤمن مأمور بتعظيم شعائر الله من خلال ستر العورة والتجمل في أثناء صلاته وخاصة عند التوجه للمسجد.
1. நம்பிக்கையாளன் தொழுகையில் குறிப்பாக பள்ளிவாயிலுக்கு வருகை தரும் போது மறைவிடங்களை மறைத்து தன்னை அழகுபடுத்துவதனூடாக அல்லாஹ்வின் புனிதச் சின்னங்களை மதிக்க வேண்டும் என கட்டளையிடப்பட்டுள்ளான். info

• من فسر القرآن بغير علم أو أفتى بغير علم أو حكم بغير علم فقد قال على الله بغير علم وهذا من أعظم المحرمات.
2. அறிவின்றி அல்குர்ஆனுக்கு விளக்கம் கூறுபவர் அல்லது மார்க்கத் தீர்ப்பு வழங்குபவர் அல்லது தீர்வு வழங்குபவர், அறிவின்றி அல்லாஹ்வின் மீது அவதூறு கூறியவராவார். இது பெரும் பாவங்களில் ஒன்றாகும். info

• في الآيات دليل على أن المؤمنين يوم القيامة لا يخافون ولا يحزنون، ولا يلحقهم رعب ولا فزع، وإذا لحقهم فمآلهم الأمن.
3. மறுமை நாளில் நம்பிக்கையாளர்கள் அச்சம் கொள்ளவோ கவலைப்படவோ மாட்டார்கள்; பயமோ பதற்றமோ அவர்களைப் பீடிக்காது. அவ்வாறு ஏற்பட்டாலும் இறுதி முடிவு அமைதியே. என்பதற்கு மேற்கூறிய வசனங்கள் ஆதாரமாகும். info

• أظلم الناس من عطَّل مراد الله تعالى من جهتين: جهة إبطال ما يدل على مراده، وجهة إيهام الناس بأن الله أراد منهم ما لا يريده الله.
4. அல்லாஹ்வின் நோக்கத்தை வீணாக்குபவர்கள்தாம் மிகப் பெரும் அநியாயக்காரர்களாவர். இது இரு விதங்களில் நிகழ்கிறது: ஒன்று, அவனது விருப்பத்தை அறிவிப்பவற்றை மறுத்தல். இரண்டு, அல்லாஹ் விரும்பாத விஷயத்தை அவன் விரும்பியதாக மக்களிடையே சித்தரித்தல். info