የቅዱስ ቁርዓን ይዘት ትርጉም - የቁርአን አጭር ማብራርያ ትርጉም በታሚልኛ ቋንቋ

external-link copy
8 : 66

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا تُوْبُوْۤا اِلَی اللّٰهِ تَوْبَةً نَّصُوْحًا ؕ— عَسٰی رَبُّكُمْ اَنْ یُّكَفِّرَ عَنْكُمْ سَیِّاٰتِكُمْ وَیُدْخِلَكُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۙ— یَوْمَ لَا یُخْزِی اللّٰهُ النَّبِیَّ وَالَّذِیْنَ اٰمَنُوْا مَعَهٗ ۚ— نُوْرُهُمْ یَسْعٰی بَیْنَ اَیْدِیْهِمْ وَبِاَیْمَانِهِمْ یَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَتْمِمْ لَنَا نُوْرَنَا وَاغْفِرْ لَنَا ۚ— اِنَّكَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

66.8. அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு அவனுடைய மார்க்கத்தின்படி செயல்பட்டவர்களே! உங்கள் பாவங்களிலிருந்து உண்மையாகவே அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். உங்கள் இறைவன் உங்கள் பாவங்களைப் போக்கி மறுமை நாளில் உங்களை சுவனங்களில் பிரவேசிக்கச் செய்திடலாம். அவற்றின் மாளிகைகளுக்கும் மரங்களுக்கும் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அந்நாளில் அல்லாஹ் தூதரையும் அவரோடு நம்பிக்கைகொண்டவர்களையும் நரகத்தில் பிரவேசிக்கச்செய்து இழிவுபடுத்தமாட்டான். பாலத்தில் அவர்களுக்கு முன்னாலும் வலது புறமும் அவர்களின் ஒளி இலங்கிக்கொண்டிருக்கும். அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நாங்கள் சுவனத்தில் நுழையும்பொருட்டு எங்களின் ஒளியை பரிபூரணப்படுத்துவாயாக. பாலத்தில் ஒளி அணைந்துவிட்ட நயவஞ்சகர்களைப்போன்று நாங்கள் ஆகிவிடக்கூடாது. எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக. நிச்சயமாக நீ எல்லாவற்றின்மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றாய். எங்களின் ஒளியை பரிபூரணப்படுத்துவதும் எங்களின் பாவங்களை மன்னிப்பதும் உன்னால் இயலாதது அல்ல. info
التفاسير:
ከአንቀጾቹ የምንማራቸዉ ቁም ነገሮች:
• التوبة النصوح سبب لكل خير.
1. உண்மையான முறையில் பாவமன்னிப்புக்கோருவது அனைத்து நலவுகளுக்குமான ஒரு காரணியாகும். info

• في اقتران جهاد العلم والحجة وجهاد السيف دلالة على أهميتهما وأنه لا غنى عن أحدهما.
2. அறிவு, ஆதாரம் என்பவற்றால் போராடுவதும் வாளினால் போராடுவதும் இணைந்து இடம்பெற்றிருப்பதில் அவ்விரண்டின் முக்கியத்துவமும் ஒன்றை விட்டு ஒன்று தேவையற்றிருக்க முடியாது என்பதும் புலனாகிறது. info

• القرابة بسبب أو نسب لا تنفع صاحبها يوم القيامة إذا فرّق بينهما الدين.
3. மறுமை நாளில் எவரும் உறவால் அல்லது வேறு காரணத்தால் உண்டாகும் நெருக்கமானவர்களுக்கு அவர்கள் இருவரின் மார்க்கமும் வேறாக இருந்தால் பயனளிக்க முடியாது. info

• العفاف والبعد عن الريبة من صفات المؤمنات الصالحات.
4. கற்பைப் பேணிக்கொள்வது, சந்தேகங்களைவிட்டும் தவிர்ந்திருப்பது நம்பிக்கைகொண்ட ஸாலிஹான பெண்களின் பண்புகளில் உள்ளவையாகும். info